EV கார்களுக்கு ஆப்பு வைக்க வரும் 'இந்த' கார்கள்... காரணம் என்ன?

Hybrid Cars Sales 2024: எலெக்ட்ரிக் கார்களை (EV) வரவேற்பை, எரிவாயு மற்றும் எலெக்ட்ரிக் மோட்டாரில் இயங்கும் ஹைபிரிட் கார்களும் நெருங்கி வருகின்றன. அதுகுறித்து இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : May 26, 2024, 04:11 PM IST
  • மாருதி சுசுகி, டோயோட்டா ஆகிய நிறுவனங்கள் ஹைபிரிட் கார்களை தயாரிக்கின்றன.
  • ஹைபிரிட் கார்கள் சூழலியலுக்கும் உகந்ததாக பார்க்கப்படுகிறது.
  • பல்வேறு நிறுவனங்கள் ஹைபிரிட் கார் தயாரிப்பில் இறங்கி உள்ளன.
EV கார்களுக்கு ஆப்பு வைக்க வரும் 'இந்த' கார்கள்... காரணம் என்ன? title=

Hybrid Cars Sales In India 2024: இந்திய சந்தையில் EV கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தொடர்ந்து பல நிறுவனங்கள் EV கார் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். SUV கார்களிலும் எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமின்றி ஹைபிரிட் கார்களும் விற்பனையில் உள்ளன. அதாவது, பெட்ரோசல் அல்லது டீசல் எரிவாயு மற்றும் எலெக்ட்ரிக் ஆகியவற்றால் இயங்கக்கூடியவை. 

SUV கார்களில் EV மட்டுமின்றி ஹைபிரிட் கார்களும் தற்போது விற்பனையில் பட்டையை கிளப்பி வருகின்றனர். மாருதி சுசுகி, டோயோட்டா மோட்டார் ஆகிய நிறுவனங்கள் ஹைபிரிட் SUV கார்களை அதிகமாக விற்பனை செய்து வருகிறது. 2024ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் நடந்த மொத்த பயணிகள் கார் விற்பனையில் ஹைபிரிட் கார்களின் பங்கு என்பது 2.48% ஆக உள்ளது. இதில், EV கார்களின் பங்கு என்பது 2.63% ஆகும்.

தயாரிப்பில் இறங்கும் மற்ற நிறுவனங்கள்

அதாவது, EV கார்களின் விற்பனையை ஹைபிரிட் கார்கள் நெருங்கிவிட்டன எனலாம். இதனால், மாருதி சுசுகி, டோயோட்டா நிறுவனங்களை போன்று ஹூண்டாய் மோட்டார் மற்றும் கியா உள்ளிட்ட நிறுவனங்களும் ஹைபிரிட் வாகனங்களை தயாரிப்பதற்கான முயற்சியில் இறங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதன்மூலம், EV கார்களின் விற்பனையை ஹைபிரிட் கார்கள் இந்த ஆண்டிலேயே மிஞ்சலாம் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க | ஹர்திக் பாண்டியா வைத்துள்ள சொகுசு கார்கள் - அவற்றின் மதிப்பு என்ன தெரியுமா?

இப்போது ஹைபிரிட் கார்களை மாருதி சுசுகி, டோயோட்டா நிறுவனங்களை தவிர ஹோண்டா மோட்டார் நிறுவனம் மட்டுமே இந்தியாவில் இதனை விற்பனை செய்து வருகிறது. இதில் எலெக்ட்ரிக் மோட்டாருடன் எரிவாயு எஞ்சின் உள்ளது. இதனால் கார்பன் உமிழ்வு குறைகிறது மற்றும் எரிவாயு சேமிப்பு அதிகமாகிறது. மைலேஜ் நல்ல கிடைக்கிறது. 

ஏன் ஹைபிரிட் கார்கள்...?

எலெக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பு என்பது வாகனங்களால் ஏற்படக்கூடிய மாசுபாட்டை குறைக்கும் என்பதன் அடிப்படையில் மக்களிடம் சென்றடைந்துள்ளது. எனவே, அதற்கிருந்த வரவேற்பை தற்போது ஹைபிரிட் வாகனங்கள் தட்டி பறிக்கின்றன எனலாம். எலெக்ட்ரிக் கார்களை வைத்திருக்கக் கூடிய மக்கள் அதிகம் சிரமத்தை சந்திப்பது எதனால் என்றால் பெருநகரங்களுக்கு வெளியே வாகனங்களை எடுத்துச் செல்லும் போது அங்கு போதுமான அளவிற்கு பேட்டரி ரீசார்ஜ் வசதிகள் இல்லாதது எனலாம். குறிப்பாக, ஒரு பேட்டரியின் ரேஞ்சை பொறுத்தே அவர்களால் கார்களை இயக்க முடிகிறது. எனவேதான், எலெக்ட்ரிக் மோட்டாருடன் கூடிய ஹைபிரிட் கார்களை நோக்கி மக்கள் செல்ல தொடங்கியிருக்கிறார்கள் என கூறலாம்.

முன்னணியில் டோயோட்டா

இத்தகைய ஹைபிரிட் கார் தயாரிப்பில் ஜப்பானிய நிறுவனமான டோயோட்டா முன்னணி வகிக்கிறது. செல்ஃப் சார்ஜிங் தொழில்நுட்பத்தை கொண்ட இந்த நிறுவனத்தின் ஹைபிரிட் கார்கள், எலெக்ட்ரிக் மோடிலும், எரிவாயு மோடிலும் அல்லது இரண்டிலும் ஒரே நேரத்திலும் இயங்கும். 
இவை ஸ்ட்ராங் ஹைபிரிட்ஸ் என அழைக்கப்படுகின்றன.  அதாவது, பெட்ரோல் எஞ்சின் மூடிய நிலையில் மின்சார பயன்முறையில் 40% தூரத்தையும், 60% நேரத்தையும் இந்த கார் கடக்கும் என கூறப்படுகிறது. இது 40%-50% எரிபொருள் சேமிப்பை ஏற்படுத்துகிறது, கார்பன் உமிழ்வையும் குறைக்கிறது என்கிறார் டோயோட்டா நிறுவன அதிகாரி ஒருவர்.

மேலும் படிக்க | இந்திய தயாரிப்பில் Range Rover கார்கள்... விலையும் தாறுமாறாக குறைந்தது - வாங்கும் ஐடியா இருக்கா...?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News