காதலியின் வாட்ஸ்அப் செய்தியை ரகசியமாக படிப்பது எப்படி?

Secretly read WhatsApp: வாட்ஸ் அப்பில் காதலி அல்லது நண்பர்கள் அனுப்பிய மெசேஜ்களை அவர்களிடம் இருந்து மாட்டிக் கொள்ளாமல் அல்லது ப்ளூடிக் வராமல் நீங்கள் படிக்க முடியும். அதற்கான சிறப்பான ஒரு டிரிக்ஸ் இருக்கிறது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 18, 2023, 04:55 PM IST
  • வாட்ஸ்அப் ரகசியம் தெரிந்து கொள்ளுங்கள்
  • காதலி அனுப்பிய மெசேஜை ஈஸியாக படிக்கலாம்
  • ப்ளூ டிக் காதலிக்கு காண்பிக்காது
காதலியின் வாட்ஸ்அப் செய்தியை ரகசியமாக படிப்பது எப்படி? title=

WhatsApp widget trick: வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு அப்டேட்டுகள் வந்தாலும் காதலி மற்றும் நண்பனின் வாட்ஸ்அப் மெசேஜ்களை ரகசியமாக படிக்க முடியும். அந்த தந்திரத்தைப் பற்றி தான் இன்று நாம் இங்கே தெரிந்து கொள்ளப்போகிறோம். உங்களால் நம்ப முடியாவிட்டாலும் உண்மையில் உங்கள் நண்பர் அல்லது காதலியின் வாட்ஸ்அப் செய்திகளை நீங்கள் ரகசியமாகப் படிக்கலாம். நீங்கள் வாட்ஸ்அப் செய்தியை படித்தவுடன் அதில் காண்பிக்கும் ப்ளூ நிற இரட்டை கோடுகள், நீங்கள் அவர்கள் அனுப்பிய செய்தியை படித்துவிட்டீர்கள் என்பதை காட்டிக்கொடுத்துவிடும். இதில் இருந்து நீங்கள் தப்பிக்க டெக்னிக்கலாக ஒரு வழி இருக்கிறது. 

மேலும் படிக்க | புது வருஷத்தில் மாஸாக கால் வைக்கும் யமஹா... வருகிறது 2 மிரட்டலான பைக்குகள்!

இந்த டெக்னிக்ல் டிப்ஸ் உங்களுக்கு ஒருவர் அனுப்பும் மெசேஜை ரகசியமாக படித்துவிட முடியும். ஆனால் அவர்களுக்கு வாட்ஸ்அப்பில் ப்ளூ டிக் காண்பிக்காது.  அதெப்படி என கேட்கிறீர்களா? அந்த வழியை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். எல்லா ஸ்மார்ட்போன்களிலும் Widgets விருப்பம் உள்ளது. அதனை பயன்படுத்தி தான் இந்த டிரிக்ஸை செய்ய முடியும். அதன் உதவியுடன் நீங்கள் WhatsApp செய்தியைத் திறக்காமல் முழு செய்தியையும் படிக்கலாம். 

ஸ்மார்ட்போனில் விட்ஜெட்களை நிறுவுவது மிகவும் எளிதானது. இதற்காக, ஸ்மார்ட்போனின் முகப்புத் திரையில் உள்ள வெற்றுப் பகுதியில் பயனர்கள் நீண்ட நேரம் அழுத்தி பிடிக்க வேண்டும். இதற்குப் பிறகு, விட்ஜெட்டுகளின் விருப்பம் திரையின் அடிப்பகுதியில் தோன்றும். அதன் பிறகு, மூன்று வாட்ஸ்அப் விட்ஜெட்டுகள் திரையில் தோன்றும் வரை ஃபோன் திரையை கீழே ஸ்கிரால் செய்யவும். இதற்குப் பிறகு, இரண்டாவது விருப்பத்தை இழுக்கவும். அது முகப்புத் திரையில் தோன்றும். சிறந்த முடிவுகளுக்கு 4×4 அளவைத் தேர்வு செய்யவும். இந்த விட்ஜெட்டில், பயனர்கள் செய்தியைக் கிளிக் செய்யாமல் முழு செய்தியையும் எளிதாகப் படிக்க முடியும். 

இப்படி வாட்ஸ்அப் மெசேஜ்களை Widgets மூலம் படிக்கும்போது, நீங்கள் செய்தியை படித்த தகவல் உங்களுக்கு அனுப்பியவருக்கு காண்பிக்காது. அதனால் உங்களுக்கு மெசேஜ் அனுப்பிய காதலியோ அல்லது நண்பரோ நீங்கள் இன்னும் மெசேஜை பார்க்கவில்லை என்றே எண்ணிக் கொள்வார்கள். உங்களுக்கு மட்டுமே தெரியும் வாட்ஸ்அப் மெசேஜை Widgets மூலம் படித்துவிட்டீர்கள் என்று. இது ஒரு சிறிய ஸ்மார்ட்போன் தந்திரம் தான். இக்கட்டான நேரங்களில், பேச முடியாதபோது, நீங்கள் விரும்புவர்களுக்கு நேரம் ஒதுக்கமுடியாத நேரத்தில் இந்த வாட்ஸ்அப் தந்திரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். 

மேலும் படிக்க | பல்சரை போட்டுத்தாக்க வரும் டிவிஎஸ் பைக்... புத்தாண்டு தள்ளுடியுடன் - மைலேஜ் முதல் EMI வரை இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News