வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் லொகேஷன் ஸ்டிக்கரை வைப்பது எப்படி ?

இன்ஸ்டாகிராமில் ஸ்டிக்கர் இருப்பது போலவே வாட்ஸ் அப்பிலும் லொகேஷனில் ஸ்டிக்கர் வைத்துக்கொள்ளலாம்.

Written by - Dayana Rosilin | Last Updated : Apr 23, 2022, 04:36 PM IST
  • வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் லொகேஷன் ஸ்டிக்கர்
  • வாடிக்கையாளர்களை கவரும் வாட்ஸ் அப் அப்டேட்
  • அறிக்கைை வெளியிட்ட பீட்டாஇன்ஃபோ
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் லொகேஷன் ஸ்டிக்கரை வைப்பது எப்படி ? title=

வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில் வாட்ஸ் அப் அதன் தளத்தில் பலவிதமான மேம்பாடுகளை செய்து வருகிறது.  அந்த வகையில் தற்போது வாட்ஸ் அப் ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக புதிய பீட்டா அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறது.  இதுகுறித்து வாபீட்டாஇன்ஃபோ வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த புதிய பீட்டா அப்டேட்டானது 2.22.10.7 வெர்ஷனுடன் வருகிறது.  மேலும் இந்த அப்டேட்டில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட லொகேஷன் ஸ்டிக்கர்களை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.

மேலும் படிக்க | புதிய மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போன்; ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியீடு

வாட்ஸ் அப் இப்போது லொகேஷனுடன் கூடிய ஸ்டிக்கரை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கிறது, இதன்மூலம் நமது காண்டாக்ட்டில் உள்ளவர்கள் நமது இருப்பிடத்தை தெளிவாக தெரிந்துகொள்ள முடிகிறது.  இந்த ஸ்டிக்கரானது இன்ஸ்டாகிராமில் இருக்கும் லொகேஷன் ஸ்டிக்கரை போலவே இருக்கிறது.  மேலும் நீங்கள் அந்த ஸ்டேட்டஸில் உங்களது தற்போதைய லொகேஷன் அல்லது வரைபடத்தை பயன்படுத்தி வேறொரு லொகேஷனையும் வைத்துக்கொள்ள முடியும்.  மேலும் சில படிநிலைகளை பின்பற்றுவதன் மூலம் நம்மால் இந்த அம்சத்தை முழுமையாக பயன்படுத்தி கொள்ள முடியும்.

மேலும் படிக்க | வாட்ஸ் அப்பில் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வசதியை பயன்படுத்துவது எப்படி

இதனை செய்ய முதலில் உங்களது ஆண்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் ஸ்மார்ட்போனில் வாட்ஸ் அப்பை திறந்து கொள்ள வேண்டும்.  பின்னர் வலது பக்கம் ஸ்வைப் செய்து ஸ்டேட்டஸ் பகுதிக்கு செல்ல வேண்டும், ஐபோன் பயனாளர்கள் கேமரா ஐகானை தட்டி, வலது பக்கம் ஸ்வைப் செய்வதன் மூலம் இந்த பகுதிக்கு செல்லலாம்.  அடுத்ததாக நீங்கள் ஸ்டேட்டஸில் பகிர விரும்பும் புகைப்படம் அல்லது வீடியோவை கேலரியில் தேர்ந்தெடுக்கலாம் அல்லது கேமரா ஆப்ஷனை பயன்படுத்தி நீங்களாகவே எடுத்துக்கொள்ளலாம்.  இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் அல்லது வீடியோவை எடிட் செய்ய, அதன் மேலே எமோஜி ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.  அதனைத்தொடர்ந்து அந்த பகுதியில் கடிகாரத்திற்கு அடுத்ததாக லொகேஷன் என்கிற ஸ்டிக்கர் தென்படும், அதனை தேர்ந்தெடுத்து உங்களது தற்போதைய லொகேஷனை நீங்கள் தேர்ந்தெடுத்து அதனை ஸ்டேட்டஸோடு இணைத்து கொள்ளலாம், இப்போது ஸ்டேட்டஸை நீங்கள் வாட்ஸ் அப்பில் பகிர்ந்து கொள்ளலாம்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News