ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது சிறப்பான செயல்திறன் மற்றும் நீண்ட கால நம்பகத்தன்மையை கொண்டுள்ளது. நாட்டின் மிகவும் பிரபலமான ஹோண்டா நிறுவனம் விரைவில் தனது புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தவிருக்கிறது. ஜப்பானிய பிராண்ட் சமீபத்தில் ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அடுத்த ஆண்டு ஜனவரியில் அறிமுகப்படுத்துவதாகவும், டிவிஎஸ் ஐகியூப், ஏதர் 450எக்ஸ் மற்றும் ஓலா எஸ்1 போன்ற ஸ்கூட்டர்களுக்கு நேரடி போட்டியாக அதை நிலைநிறுத்துவதாகவும் உறுதிப்படுத்தியது. இப்போது சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்களை காண்போம். தொடக்கத்தில் வரவிருக்கும் ஹோண்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆக்டிவா என்ற பிராண்ட் பெயரில் விற்கப்படும் என்றும் அடுத்த ஆண்டு ஜனவரியில் தனது ஸ்கூட்டரை அறிமுகமாகும் என்றும் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | மின் கட்டணத்தை பாதியாக குறைக்கலாம்..! சுலபமான வழியை தெரிந்து கொள்ளுங்கள்
மற்ற வாகனங்களை போல் அல்லாமல் ஹோண்டா நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 50 கிமீ வேகத்தில் செல்லும் என்றும் வாகன ஓட்டிகளுக்கு இது சிறந்த ரைட் அனுபவத்தை தரும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய ஹோண்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சிறந்த பாதுகாப்பிற்காக நிலையான பேட்டரி அமைப்பைக் கொண்டிருக்கும் மற்றும் ஒரு சார்ஜரில் சுமார் 100 கிமீ வேகத்தில் செல்லும். அதேபோல், இது ஹோண்டா ஆக்டிவாவைப் போன்று இது வெளிப்பக்கத்தில் சிறந்த ஸ்டைலிங்க் அமைப்பை கொண்டிருக்கும் மற்றும் சஸ்பென்ஷன், பிரேக்குகள் போன்ற பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இந்தியாவில் ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்திய பிறகு, நிறுவனம் மேலும் புதிதாக பல மின்சார ஸ்கூட்டர்களை சந்தையில் அறிமுகப்படுத்தும்.
ஹோண்டா நிறுவனத்தின் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மாற்றக்கூடிய பேட்டரி அமைப்பையும், சிறிய மற்றும் இலகுரக மின்சார ஸ்கூட்டர்களாக அறிமுகப்படுத்தப்படும். ஹோண்டா தனது இரண்டாவது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் மாற்றக்கூடிய பேட்டரி தொழில்நுட்பத்துடன் அறிமுகப்படுத்துவதற்கு முன், நாடு முழுவதும் 6000 பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷன்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதிய ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி பேக்குகள் மற்றும் இ-மோட்டார் போன்ற பல கூறுகளையே உள்நாட்டிலேயே பெறுகிறது. இதன் விலை கிட்டத்தட்ட ஒரு லட்சம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ