பொது இடங்களிலும், தனிப்பட்ட இடங்களிலும் பெண்களை ரகசியமாக படம்பிடிக்கும் சம்பவங்கள் சமீபத்தில் பெருகி வருகின்றன. ரகசிய கேமிராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை வைத்துக் கொண்டு மிரட்டும் பகீர் சம்பவங்களியும் அவ்வப்போது கேட்கிறோம். தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் வேளையில், கூடவே ஆபத்துக்களும் பல மடங்காக பெருகி விட்டன என்பதை மறுக்க இயலாது.
தற்போது நம்மால் அனுமானிக்க முடியாத அளவிற்கு, ரகசிய கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. பெண்களை ரகசிய கேராக்கள் மூலம் படமெடுக்கும் கீழ்த்தரமான வேலைகளை செய்யும் சமூக விரோதிகளை கண்டறிந்து தண்டிப்பது மிகவும் அவசியம்.
பெண்கள், ஹோட்டல்களின் தங்கும் போதோ, அல்லது, துணிக்கடைகளில், ஆடைகளை உடுத்தி பார்க்கும் போதோ, அந்த அறைகளில் ரகசிய கேமிராக்கள் உள்ளதா என்பதைக் கண்டறிய சில டிப்ஸ்களை இங்கே வழங்குகிறோம். ஹோட்டல், மால் அல்லது ஷோரூம் அல்லது தெரியாத இடத்திலோ ரகசிய கேமரா மூலம் வீடியோ எடுத்ததன் மூலம், பல பெண்களின் வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.
சமீபத்தில், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் இதுபோன்ற சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இங்கு ஒரு மருத்துவரின் மகன், பெண்கள் விடுதி குளியலறையில் ரகசிய கேமராவை அமைத்திருந்தார். இந்த ரகசிய கேமரா ஷவரில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததால், யாரும் சந்தேகிக்கவோ, பார்க்கவோ முடியாது. இதுபோன்ற சம்பவங்களில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி என்பதை அறிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | இணையத்தைப் பயன்படுத்தாமல் UPI-ல் பணம் செலுத்துவது எப்படி?
மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்
சமூகவிரோதிகள் பொதுவாக நன் அனுமானிக்க முடியாத இடங்களை ஸ்பை கேமராக்களை மறைப்பதற்கான இடமாக தேர்வு செய்கிறார்கள். ஸ்மோக் டிடக்டர்கள், ஏர் ஃபில்டர் கருவிகள், புத்தகங்கள், சுவரில் அலங்காரம் என நீங்கள் வீட்டிற்கு வெளியே செல்லும் போது கவனமாகப் பார்க்க வேண்டிய இடங்கள் என்கிறார்கள் நிபுணர்கள். அவற்றில் ரகசிய கேமரா இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இது தவிர, மறைவான கேமராவை டெஸ்க் பிளாண்ட், டிஷ்யூ பாக்ஸ், டிஜிட்டல் டிவி பாக்ஸ், சுவர் கடிகாரம் அல்லது எந்த வகையான திரையிலும் மறைக்க முடியும்.
ரகசிய கேமரா அச்சுறுத்தல் அதிகம் உள்ள இடம் குளியலறை. குளியலைறை ஷவர், அறையின் கூரை பகுதி, கதவு துளைகள் மற்றும் மேசை செடிகள் ஆகியவற்றில் இருக்கலாம் என்று சைபர் நிபுணர்கள் கூறுகின்றனர். நீங்கள் ஒரு ஹோட்டல் அல்லது ஹாஸ்டலில் தங்கியிருந்தால், கண்டிப்பாக இந்த இடங்களைச் சரிபார்க்கவும்.
மேலும் படிக்க | iPhone பயனர்களுக்கு ஷாக்: திடீரென மறைந்தது இந்த அம்சம்
ரகசிய கேமராக்களை கண்டுபிடிப்பது எப்படி
1. சந்தேகம் உள்ள இடத்தில் இருளாக்கவும்
ரகசிய கேமராக்களில் பச்சை அல்லது சிவப்பு LED விளக்குகள் உள்ளன. இந்த விளக்குகள் தொடர்ந்து ஒளிரும். அத்தகைய சூழ்நிலையில், அவற்றைக் கண்காணிக்க, சந்தேகம் இருந்தால், நீங்கள் அதை முற்றிலும் இருட்டாக மாற்ற வேண்டும். கேமராவில் உள்ள விளக்குகள் இருட்டில் ஒளிரும். அதன் மூலம் அதனை கண்டறியலாம்
2. மொபைல் மூலம் கண்டறியலாம்
ஸ்பை கேமராவைக் கண்டறிய, மொபைலும் பெரிதும் உதவும். ரகசிய கேமராக்களின் உள்ளே இருந்து
ரேடியோ அலைவரிசைகள் தொடர்ந்து வெளிவருகின்றன, எனவே அவற்றை எளிதாகக் கண்டறியலாம். கேமரா பொருத்தப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தில், ஏதேனும் ஒருய் எண்ணை டயல் செய்தால் கண்டறியலாம். அங்கு கேமரா இருந்தால், ரேடியோ அலைவரிசை காரணமாக அழைப்பில் சிக்கல் ஏற்படும். சத்தம் அடிக்கடி குறையலாம்.
3. செயலியின் உதவியையும் நாடலாம்
ஸ்பை கேமராவைக் கண்டறிய சில ஆப்ஸின் உதவியையும் நீங்கள் பெறலாம். ப்ளே ஸ்டோரில், ஸ்பை கேமராக்களைக் கண்டறிய உதவும் பல இலவச ஆப்ஸைக் காணலாம். அதில் பாதுகாப்பான, அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட செயலியை இன்ஸ்டால் செய்யுங்கள். அதன் மூலம் ரகசிய கேமராவைக் கண்டறியவும்.
மேலும் படிக்க | ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி இலவசம்
மேலும் படிக்க | Infinix Note 12-ல் ரூ. 12,000-க்கும் மேல் சலுகை: அசத்தும் பிளிப்கார்ட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR