இந்தியாவின் முதல் பெண் வக்கீல் கார்னிலியா சொராப்ஜியின் 151-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரை கவுரவிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
1866-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி நாசிக்கில் பிறந்த கார்னிலியா, ஏராளமான பெண்கள் சட்டம் பயில்வதற்கும், உயர்கல்வி பெறுவதற்கும் உதவி உள்ளார்.
பாம்பே பல்கலையில் சேர்க்கப்பட்ட முதல் பெண் இவர் தான். அதே போன்று ஆக்ஸ்போர்டு பல்கலையில் சேர்ந்து சட்டம் பயின்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையையும் பெற்றவர் இவர் தான்.
இந்நிலையில் இந்தியாவின் முதல் பெண் வக்கீல் கார்னிலியா சொராப்ஜியின் 151-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரை கவுரவிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.