Zoom, MS team-ல மட்டும் இல்லை., இனி Google Meet-லும் இது கிடைக்கும்...

Google தனது வீடியோ அழைப்பு பயன்பாடான Google meet-ல் பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Last Updated : Jun 28, 2020, 04:40 PM IST
Zoom, MS team-ல மட்டும் இல்லை., இனி Google Meet-லும் இது கிடைக்கும்... title=

Google தனது வீடியோ அழைப்பு பயன்பாடான Google meet-ல் பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனா ஊரடங்கு சூழலில் வீடியோ அழைப்பு செயலிகளுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் Google தனது வீடியோ அழைப்பு பயன்பாடான Google meet-ல் மங்கலான பின்னணி குறைந்த-ஒளி பயன்முறை மற்றும் பின்னணி மாற்று படங்கள் உள்ளிட்ட பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்ய முற்பட்டு வருகிறது.

READ | Google Android டெவலப்பர் சேலஞ்ச்சில் வெற்றி பெற்ற 3 இந்தியர்கள்...

ஜூம்(Zoom) மற்றும் மைக்ரோசாப்ட் டீம் (Microsoft team) போன்ற போட்டியாளர் வீடியோ அழைப்பு தளங்களைப் போலவே, கூகிள் மீட்(Google meet) தனது பயனர்களும் இனி தங்கள் படங்களை பின்னணி படமாக தேர்வுசெய்யலாம் அல்லது பல இயல்புநிலை விருப்பங்களிலிருந்து எடுக்கலாம் என நிறுவனத்தின் அறிவிப்பு குறிப்பிடுகிறது.

மங்கலான பின்னணி மற்றும் பின்னணி மாற்று படங்களுக்கு மேலதிகமாக, நிகழ்நேர தலைப்பு, குறைந்த-ஒளி பயன்முறை, கையை உயர்த்துவது மற்றும் 49 பங்கேற்பாளர்களின் ஓடு பார்வை என மேலும் பல அம்சங்கள் மீட்டின் நுகர்வோர் பதிப்பில் வெளியிடப்படும் என்று கூகிள் உறுதிப்படுத்தியது.

READ | Android பயனர்களுக்கு அற்புத அம்சங்களை வெளியிடும் முயற்சியில் Google...

முன்னதாக கூகிள்(Google) கடந்த மே மாதத்தில் ஜிமெயிலில் Google Meet-னை புகுத்தியது. ஒரு பக்கப்பட்டி இணைப்பைச் சேர்த்து, கூகிள் கணக்கு உள்ள எவரும் நேர வரம்புகள் இல்லாத 100 பேர் பங்கேற்கும் கூட்டங்களை இந்த அம்சத்தின் மூலம் நடத்தலாம் என நிறுவனம் தெரிவிக்கின்றது. இந்நிலையில் பயனர் விருப்பதை மேலும் அதிகரிக்கும் விதமாக தற்போது தனது பயன்பாட்டில் கூடுதல் அம்சங்களை இணைக்க கூகிள் (Google) முடிவு செய்துள்ளது.

Trending News