Google Chrome பாதுகாப்பு விதிகளில் மாற்றம் செய்கிறது; பயனர்கள் be ALERT

Chrome பயனர்களுக்கான புதிய அம்சங்களை விரைவில் வெளியிட Google தயாராகிவருகிறது. Chrome 91 புதுப்பித்தலில் தொடங்கி புதிய மேம்படுத்தல்கள் மற்றும் புதிய `பாதுகாப்பான உலாவல்` அம்சங்களைச் சேர்க்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 5, 2021, 10:10 PM IST
  • Google Chrome பாதுகாப்பு விதிகளில் மாற்றம் செய்கிறது
  • பயனர்கள் be ALERT
  • தீங்கிழைக்கும் கோப்புகளைப் பதிவிறக்குவதற்கு எதிராக கூடுதல் பாதுகாப்பு அம்சம்
Google Chrome பாதுகாப்பு விதிகளில் மாற்றம் செய்கிறது; பயனர்கள் be ALERT title=

Chrome பயனர்களுக்கான புதிய அம்சங்களை விரைவில் வெளியிட Google தயாராகிவருகிறது. Chrome 91 புதுப்பித்தலில் தொடங்கி புதிய மேம்படுத்தல்கள் மற்றும் புதிய `பாதுகாப்பான உலாவல்` அம்சங்களைச் சேர்க்கும்.

வரவிருக்கும் அம்சங்கள் பயனர்களுக்கு சிறந்த நீட்டிப்புகளைத் தேர்வுசெய்ய உதவும். அதோடு, தீங்கிழைக்கும் கோப்புகளைப் பதிவிறக்குவதற்கு எதிராக கூடுதல் பாதுகாப்பு அம்சத்தையும் வழங்கும். புதிய அம்சங்களைப் பற்றிய விவரங்களை, கூகுள் தனது அதிகாரப்பூர்வ வலைப்பதிவு இடுகையில் (blog post) பகிர்ந்து கொள்கிறது.

Chrome வெப் ஸ்டோரில் (Chrome Web Store) இருந்து புதிய நீட்டிப்பை நிறுவும் போது மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பான உலாவல் பயனர்கள் இப்போது கூடுதல் பாதுகாப்பைப் பெறுவார்கள் என்று ANI செய்தி முகமை தெரிவித்துள்ளது.  

Also Read | Technology: பயன்படுத்திய மாஸ்குகளை செங்கல்லாக மாற்றும் Recycle Man of India

பயனர்கள் நிறுவவிருக்கும் நீட்டிப்பானது, மேம்பட்ட பாதுகாப்பான உலாவலால் நம்பப்பட்ட நீட்டிப்புகளின் பட்டியலின் ஒரு பகுதியாக இல்லாவிட்டால், இது பற்றி பயனர்களுக்கு தெரிவிக்க ஒரு உரையாடல் பாப் அப் (pop up) செய்யப்படும்.

Chrome வெப் ஸ்டோர், டெவலப்பர் நிரல் கொள்கைகளைப் பின்பற்றி ஒரு டெவலப்பரால் கட்டமைக்கப்பட்ட நீட்டிப்புகளைக் கொண்டது. மேம்பட்ட பாதுகாப்பான தேடலைக் கொடுக்கும் என்று பயனர்கள் நம்பலாம்.  

இதேபோல், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பான உலாவல் (Enhanced Safe Browsing) இப்போது ஆபத்தான கோப்புகளுக்கு எதிராக மேம்பட்ட பாதுகாப்பை வழங்கும்.

Also Read | Galaxy A22 5G, Galaxy A22 4G: புதிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த சாம்சங் நிறுவனம்

எனவே, பாதுகாப்பான உலாவல் ஆபத்தானது என்று கருதும் எந்த கோப்பு பதிவிறக்கங்களுக்கும் பயனர்களுக்கு எச்சரிக்கை வழங்கப்படும். "இன்னும் ஆழமான பகுப்பாய்விற்கு" கோப்பை ஸ்கேன் செய்ய அனுப்பும் திறன் பயனர்களுக்கு இருக்கும் என்பது கூடுதல் சிறப்பு.

"நீங்கள் ஒரு கோப்பை அனுப்ப தேர்வுசெய்தால், குரோம் அதை கூகுள் பாதுகாப்பான உலாவியில் பதிவேற்றும், இது அதன் நிலையான மற்றும் மாறும் பகுப்பாய்வு வகைப்படுத்திகளைப் பயன்படுத்தி உண்மையான நேரத்தில் ஸ்கேன் செய்யும். சிறிது நேரத்தில் குரோம், கோப்பின் பாதுகாப்பு பற்றி தீர்மானித்துவிடும். அது பாதுகாப்பற்றது என்று தீர்மானித்தால், Chrome ஒரு எச்சரிக்கையை அனுப்பும்" என்று கூகுள் கூறுகிறது

பயனர்கள் ஸ்கேனிங் செயல்முறைக்குச் (scanning process) செல்லாமலும் கோப்பைத் திறக்க தேர்வு செய்யலாம்.

Also Read | Unbelievable Vi: வெறும் ரூ.11-க்கு தினமும் கிடைக்கும் வரம்பற்ற அழைப்பு, 4ஜிபி தரவு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News