கூகுள் நிறுவனம் இன்று தனது டூடுலில், சினிமாவின் பரிணாம வளரச்சிக்கு முக்கிய பங்காற்றிய பிரஞ்சு பட இயக்குநர் ஜார்ஜ் மெலிஸ் இயக்கிய ட்ரிப் டூ தி மூன் படத்தின் 360 டிகிரி வீடியோவை வைத்துள்ளது.
சினிமாவில் பார்வையாளர்களை கவர்ந்து ஈர்க்கும் விதமாக புது புது எடிட்டிங் முறைகள் மற்றும் கேமரா கோணங்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி சினிமாவின் பரிணாமத்தை மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்தவர் ஜார்ஜ் மெலிஸ்.
இவர், திரைப்பட துறையில் மட்டுமல்லாது மேஜிக் கலையிலும் வல்லவராக திகழ்ந்தவர். பார்வையாளர்களுக்கு எதை செய்தால், அவர்கைள ரசிக்க வைத்து கட்டுப்படுத்த முடியுமோ அதன் நுணுக்கங்களை இவர் நன்றாக புற்றிந்துகொண்டு உத்திகளை செயல்படுத்துபவர்.
இவர் இயற்றியுள்ள படங்களான கார்ட் பார்ட்டி, ட்ரிப் டூ தி மூன் (1902), தி கிங்டம் ஆப் தி ஃபேரீஸ், த இம்பாசிபல் வாயேஜ் (1904) உள்ளிட்ட படங்கள் மிகவும் பிரசத்தி பெற்றது. இத்திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்ப்பையும் பெற்றது.
இந்நிலையில், ஜார்ஜ் மெலிஸின் இயக்கிய படமான தி கான்க்யூஸிட் ஆப் தி போ் திரைப்படம் வெளிவந்த தினத்தை முன்னிட்டு இன்று கூகுள் நிறுவனம் 360 டிகிரி விர்ச்சுவல் ரியாலிட்டி டூடுலை வைத்து அந்த படத்தை கெளரவித்துள்ளது.