Flipkart Big Billion Days Sale 2024: பிளிப்காட் ஆன்லைன் ஷாப்பிங் தளம் அறிவித்துள்ள சலுகை விற்பனை செப்டம்பர் 30, 2024 முதல் தொடங்குகிறது. பண்டிகை கால சலுகையாக எலக்ட்ரானிக் தயாரிப்புகளுக்கு வியக்கத் தக்க வகையில் தள்ளுபடி சலுகைகள் பெறலாம். இதில் ஸ்மார்போன் முதல் ஸ்மார்ட் டிவி வரை மிகவும் மலிவான விலையில் வாங்கலால். சிறிய, நடுத்தர அல்லது பெரிய அளவிலான அனைத்து ஸ்மார்ட் டிவிக்களுக்கும் சிறந்த தள்ளுபடி கிடைக்கும்.
பிளிப்கார்ட் சலுகை விற்பனையில், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்குகையில் 50 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும் என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி மற்றும் பிற வீட்டு உபயோக பொருட்களுக்கு சிறந்த தள்ளுபடி சலுகைகள் தவிர கட்டணமில்லா EMI விருப்பம், கேஷ்பேக் சலுகைகளையும் பெறலாம். லேப்டாப் என்னும் மடிக்கணினிகள், ஹெட்ஃபோன்கள், ஸ்மார்போன்கள் , 4கே ஸ்மார்ட் டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், பிற எலக்ட்ரானிஸ் சாதனங்கள் , வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவை அடங்கும்.
கோடாக் (Kodak), தாம்சன் (Thomson), இன்பினிக்ஸ் (Infinix), ஃபாக்ஸ்கை (Foxsky), மார்க் (Mark) போன்ற சிறந்த பிராண்டுகளின் டிவிக்களை குறைந்த விலையில் கிடைக்கும். சிறந்த தள்ளுபடி வழங்குவதில் தாம்சன் என்ற நிறுவனம் முன்னணியில் உள்ளது, ஏனெனில் அவர்களின் ஸ்மார்ட் டிவிகள் ரூ.6,000 க்கும் குறைவான விலையில் வாங்கலாம்.
தாம்சனின் ஸ்மார்ட் டிவியை ரூ. 5,999 விலையில் வாங்க வாய்ப்பு
சிறந்த ஸ்மார்ட் டிவியில் இருக்க வேண்டிய அனைத்து அத்தியாவசிய அம்சங்களையும் கொண்டுள்ள தாம்சன் நிறுவனத்தின் 24 Alpha001 ஸ்மார்ட் டிவியை சலுகை விற்பனையின் போது வெறும் 5,999 ரூபாய்க்கு வாங்கலாம். வங்கிச் சலுகைகளைப் பயன்படுத்திக் கொண்டால், அதை இன்னும் மலிவாக வாங்கலாம்.
கோடக் டிவிக்கு 46 சதவீத தள்ளுபடி ஆஃபர்
கோடாக் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் டிவி 2024 மாடலுக்கும் சிறந்த தள்ளுபடியை வழங்குகிறது. முன்னதாக இந்த டிவியின் விலை ரூ.14,999 ஆக இருந்தது, ஆனால் இப்போது 46% தள்ளுபடியுடன் வெறும் ரூ.7,999க்கு வாங்கலாம்.
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டிவிக்கு (Infinix Smart TV ) 55 சதவீதம் தள்ளுபடி
இன்பினிக்ஸ் நிறுவனம் அதன் HD Ready LED Smart Linux TV 2024 பதிப்பில் 55% தள்ளுபடி வழங்குகிறது. முன்னதாக இந்த டிவியின் விலை ரூ. 16,999 ஆக இருந்தது, ஆனால் இப்போது நீங்கள் இதை வெறும் ரூ.7,500 க்கு வாங்கலாம், மேலும் வங்கி சலுகைகளைப் பயன்படுத்திக் கொண்டால், இதை இன்னும் மலிவாக வாங்கலாம்.
வங்கி சலுகைகள் மற்றும் எக்ஸ்சேன்ஞ் சலுகைகள்
வங்கிச் சலுகைகள்: தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளில் பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்கள் உடனடி கேஷ்பேக் தள்ளுபடியைப் பெறலாம்.
எக்ஸ்சேன்ஞ் சலுகைகள்: பழைய பொருட்களுக்கு ஈடாக புதிய பொருட்களை வாங்குவதில் வாடிக்கையாளர்களுக்கு நல்ல தள்ளுபடி கிடைக்கும். உங்கள் பழைய சாதனங்களான ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகள் நல்ல நிலைமையில் இருந்தால், சிறந்த தள்ளுபடி கிடைக்கும்.
கேஷ்பேக் மற்றும் கூப்பன்கள்: பல்வேறு கேஷ்பேக் சலுகைகள் மற்றும் கூப்பன் தள்ளுபடிகள் மூலம் வாடிக்கையாளர்களின் அதிக அளவில் பணத்தை சேமிக்கலாம்
மேலும் படிக்க | போன் பேசும் போது... வாய்ஸ் கிளையரா இல்லையா... இந்த டிப்ஸ் கை கொடுக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ