Flipkart Big Billion Days 2022 Sale: டாப் பிராண்ட் போன்களில் எக்கச்சக்க தள்ளுபடிகள்

Amazon Great Indian Festival, Flipkart Big Billion Days 2022 Sales: ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மிக நல்ல செய்தி. அமேசானின் Amazon's Great Indian Festival மற்றும் பிளிப்கார்டின் Flipkart's Big Billion Days விற்பனை செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கவுள்ளன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 21, 2022, 10:52 AM IST
  • பிளிப்கார்ட் மற்றும் அமேசானின் விற்பனைகள் துவங்கவுள்ளன.
  • இவற்றில் ஏகப்பட்ட தள்ளுபடிகளும் சலுகைகளும் உள்ளன.
  • ஸ்மார்ட்போனில் ஏகப்பட்ட சலுகைகள் கிடைக்கின்றன.
Flipkart Big Billion Days 2022 Sale: டாப் பிராண்ட் போன்களில் எக்கச்சக்க தள்ளுபடிகள் title=

Amazon Great Indian Festival, Flipkart Big Billion Days 2022 விற்பனை: ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மிக நல்ல செய்தி. அமேசானின் Amazon's Great Indian Festival மற்றும் பிளிப்கார்டின் Flipkart's Big Billion Days விற்பனை செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கவுள்ளன. இந்த இரு விற்பனைகளிலும் பல வித பொருட்களில் ஏகப்பட்ட தள்ளுபடிகளும் சலுகைகளும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றன. குறிப்பாக, இரண்டு இ-காமர்ஸ் நிறுவனங்களும் மொபைல் பிராண்டுகளில் பெரிய தள்ளுபடிகளை வழங்கவுள்ளன. இந்த விற்பனைகளில் ரூ. 40,000-க்கும் குறைவான விலையில் நீங்கள் வாங்கக்கூடிய டாப் பிராண்டுகளின் மொபைல் போன்களை பற்றி காணலாம். 

Poco X4 Pro 5G 

Flipkart Big Billion Day Sale 2022 இல், நீங்கள் Poco X4 Pro 5G ஃபோனை ரூ.13,999க்கு வாங்கலாம். இந்த போனுக்கு ரூ.4,000 தள்ளுபடி கிடைக்கிறது. Poco X4 Pro 5G ஸ்மார்ட்போன் 120Hz சூப்பர் AMOLED திரை Snapdragon 695 SoC பிராசசரைக் கொண்டுள்ளது. மேலும், இதில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

Nothing Phone 1

இந்த பிளிப்கார்ட் விற்பனையில், Nothing Phone 1 மற்றும் Google Pixel 6a ஆகியவை பெரும் தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படும். Nothing Phone 1 போன் ரூ.28,999 என்ற ஆரம்ப விலையிலும், கூகுள் பிக்சல் 6ஏ ரூ.27,699 என்ற ஆரம்ப விலையிலும் கிடைக்கும்.

மேலும் படிக்க | Smartphone: தண்ணீருக்குள் நீச்சலடிக்கும் வாட்டர் ப்ரூப் ஸ்மார்ட்போன்: 3 நாட்கள் சார்ஜ் கேரண்டி 

பிளிப்கார்ட்டில் பழைய ஸ்மார்ட்போனை மாற்றிக்கொண்டு புதிய போனை வாங்கலாம்

பிளிப்கார்ட் வாடிக்கையாளர்களின் பழைய ஸ்மார்ட்போனுக்கு ரூ.17,000 தள்ளுபடியையும் வழங்குகிறது. Flipkart Big Billion Days Sale 2022 இல் கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் இணைத்தால், விலை உயர்ந்ததாக கருதப்படும் Apple iPhone 13ஐ ரூ.35,000க்கும் குறைவாக வாங்கலாம். 

Realme 9 Pro 5g

ரூ.21,999 விலை கொண்ட இந்த போன் ரூ.14,999-க்கு விற்பனைக்கு வரவுள்ளது. இந்த 5ஜி போனில் ஸ்னாப்டிராகன் 695 செயலியை நிறுவனம் வழங்குகிறது. புகைப்படம் எடுப்பதற்கு, மொபைலின் பின்புறத்தில் 64 மெகாபிக்சல் டிரிபிள் கேமரா அமைப்பு இருக்கும். இந்த ஃபோன் 6.6 இன்ச் முழு HD+ டிஸ்ப்ளேவுடன் வருகிறது. போனில் 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

ஓப்பன் பாக்ஸ் டெலிவரி வசதி தொடங்கப்பட்டது

மொபைல்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் போன்ற விலை உயர்ந்த பொருட்களுக்காக பிளிப்கார்ட் ஓப்பன் பாக்ஸ் டெலிவரியை தொடங்கியுள்ளது. இந்த வசதியின் கீழ், டெலிவரி பார்ட்னர் வாடிக்கையாளரின் முன் பொருட்களின் பெட்டியைத் திறந்து காட்டுவார். மேலும், வாடிக்கையாளர் ஆர்டர் செய்யும் பொருட்கள் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே டெலிவரியை வாங்கிக்கொள்ளும் சுதந்திரமும் வாடிக்கையாளருக்கு உள்ளது. 

மேலும் படிக்க | Flipkart Big Billion Days sale: Poco ஸ்மார்ட்போன்களில் பெரும் தள்ளுபடி 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News