இரத்த தானத்தை ஊக்குவிக்க பேஸ்புக் புதுதிட்டம்!

Last Updated : Sep 28, 2017, 04:32 PM IST
இரத்த தானத்தை ஊக்குவிக்க பேஸ்புக் புதுதிட்டம்! title=

இரத்த தானத்தினை ஊக்குவிக்கும் வகையினில் பேஸ்புக் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்ய உள்ளது.

வரும் அக்டோபர் 1 முதல் இந்த வசதி பேஸ்புக்கில் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் இரத்த தேவை உள்ளவர்களும், தங்களது இரத்தத்தினை தானம் செய்ய விரும்புவோரும் எளிதில் தொடர்புகொள்ளும் வகையினில் பல அம்சங்கள் கொண்டுவரப்படவுள்ளது.

இந்த வசதி மூலம் இரத்த தேவை உள்ளவர்கள், தங்களது வேண்டுகோளினை பதிவுசெய்ய சிறப்பு அம்சங்களை புகுத்தவுள்ளது பேஸ்புக்.

மேலும் இந்த பதிவினை பேஸ்புக் பயனர் ஒவ்வொருவர் கணக்கிலும் விளம்பர படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இரத்த தானம் செய்ய விரும்புவோர் தங்களது விவரங்களை முன்பதிவு செய்து வைத்துக்கொள்ளவும் இது வழிவகுக்கிறது. இந்த தகவல்கள் தவறுதலாக உபயோகிக்க கூடும் என்பதால், அத்தகவல்களை ரகசியமாக வைத்துக்கொள்ளவும் வழிவகுக்கப்பட்டுள்ளது என பேஸ்புக் முதன்மை அதிகாரி ரித்திஷ் மேத்தா தெரிவித்துள்ளதார்.

Trending News