Oneplus மொபைல் வச்சு இருக்கீங்களா? ரிட்டன் செய்து முழு பணத்தையும் திரும்ப பெறலாம்!

OnePlus 12R: சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus 12R மொபைலை வாங்கிய பயனர்கள் அதனை திருப்பி கொடுத்து முழு பணத்தையும் பெற்று கொள்ளலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Feb 17, 2024, 10:29 AM IST
  • OnePlus 12R மொபைலில் தொழில்நுட்ப குறைபாடு.
  • மொபைலை கொடுத்து பணத்தை திருப்ப பெறலாம்.
  • ஒன்பிளஸ் நிறுவனம் அறிவிப்பு.
Oneplus மொபைல் வச்சு இருக்கீங்களா? ரிட்டன் செய்து முழு பணத்தையும் திரும்ப பெறலாம்! title=

OnePlus நிறுவனம் கடந்த மாதம் தனது புது மொபைலான OnePlus 12Rஐ அறிமுகப்படுத்தியது. OnePlus 12R ஸ்மார்ட் போன் 256GB மற்றும் UFS 4.0 சேமிப்பகத்துடன் வருகிறது என்று நிறுவனம் கூறியது. இருப்பினும், இந்த ஸ்மார்ட்போனை வாங்கிய பயனர்கள் அதன் வேகம் மற்றும் செயல்பாட்டில் குறைகள் இருப்பதாக தெரிவித்தனர்.  இதற்கு பதிலளித்த ஒன்பிளஸ் நிறுவனம் OnePlus 12R மொபைலில் உள்ள தவறை ஒப்பு கொண்டது. UFS 4.0க்கு பதிலாக UFS 3.1 சேமிப்பகம் இந்த மாடல் போனில் இடம்பெற்று இருப்பதாக உறுதிப்படுத்தியது. ஒன்பிளஸ் 12R போன் அறிமுகத்தின் போது, டிரினிட்டி என்ஜின் என்ற புதிய மென்பொருள் உங்கள் ஃபோனின் நினைவகம் மற்றும் சேமிப்பகத்தை வேகமாகவும் சீராகவும் வைத்திருக்க உதவும் என்று தெரிவித்து இருந்தோம். இருப்பினும், பிழையின் காரணமாக இன்னும் UFS 3.1 தான் மொபைலில் உள்ளது என்று OnePlus தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க | இந்திய மார்க்கெட்டில் இருக்கும் டாப் 5 ஸ்பீடு பைக்குகள்..!

இந்த தவறை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்ற, ஒன்பிளஸ் நிறுவன தலைவர் COO Kinder Liu, 256ஜிபி சேமிப்பக பதிப்பை வாங்கிய பயனர்கள் மார்ச் 16ம் தேதிக்குள் மொபைலை திரும்ப கொடுத்து முழு பணத்தையும் பெற்று கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.  இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், " எல்லோருக்கும் வணக்கம், பொறுமை காத்தமைக்கு நன்றி. எங்கள் வாடிக்கையாளர் சேவைக் குழு இந்த விஷயத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.  கடந்த சில நாட்களாக நீங்கள் கூறி வந்ததை கேட்டுள்ளோம். நீங்கள் OnePlus 12R 256GB வாங்கி இருந்தால், வாடிக்கையாளர் சேவை மையம் மூலம், மொபைலை கொடுத்துவிட்டு மார்ச் 16 2024 வரை பணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளது. 

UFS 3.1 மற்றும் UFS 4.0 இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு என்னவென்றால், UFS 4.0 சேமிப்பகம் அதிக வேகமாகவும், திறன் கொண்டதாகவும் இருக்கும். அதே வேளையில் UFS 3.1 சற்று மெதுவாக இருக்கும். ஒன்பிளஸின் குறைந்த விலை கொண்ட மாடல்களில் இந்த UFS 3.1 சேமிப்பகம் இருக்கும். ஒன்பிளஸ் மொபைலில் தொடர்ந்து பல பிரச்சனைகள் வருவதாக பயனர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு முன்பு, சில மாடல் போன்களில் ஸ்கிரீனில் பச்சை நிற கோடுகள் வருவதாக குற்றசாட்டு எழுந்தது.  இதனை அருகில் உள்ள ஒன்பிளஸ் கடைகளில் கொடுத்து சரி செய்து கொள்ளலாம் என்று நிறுவனம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | OnePlus 11R 5G: 16GB ரேம், 50MP கேமரா மொபைலுக்கு 3 ஆயிரம் விலையை குறைத்த ஒன்பிளஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News