புது டெல்லி: தற்போது மிகவும் பிரபலமாக இருப்பது 100 ரூபாய்க்கும் குறைவான மலிவான மற்றும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள். ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் வழங்கும் இந்த ரீசார்ஜ் திட்டங்கள் 28 நாட்கள் செல்லுபடியாகும் இலவச அழைப்பு வசதியும் உண்டு.
ப்ரீபெய்ட் திட்டங்கள்
இவற்றைத் தவிர, பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களும் 100 க்கும் குறைவான ரீசார்ஜில் தரவு (DATA) மட்டுமே பயன்படுத்தும் திட்டங்களையும் வழங்குகின்றன. இந்த திட்டம் 12 ஜிபி தரவு வரம்புடன் வருகிறது. இதில், வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப அழைப்புத் திட்டத்தை அல்லது தரவு சலுகைகளுடன் ரீசார்ஜ் திட்டத்தை தேர்வு செய்யலாம்.
ALSO READ | இந்தியாவில் ஏப்ரல் 1 முதல் UPI கட்டண சேவை முறை நிறுத்தப்படும்..
100 ரூபாய்க்குக் கீழே வோடாபோன் ப்ரீபெய்ட் திட்டம்
Vi இன் ரீசார்ஜ் திட்டம் ரூ .49, ரூ .59, ரூ .65, ரூ .79 மற்றும் ரூ 85க்கு கிடைக்கிறது. அதன் பேச்சு நேரத் திட்டத்திற்கு 28 நாட்கள் செல்லுபடியாகும். 400 எம்பி அளவுக்கு தரவு மற்றும் பேசுவதற்கான சலுகையும் இதனுடன் கிடைக்கும். Vi இன் 48 ரூபாய் தரவுத் திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும், அதில் 48 ஜிபி தரவு கிடைக்கும். Vi இன் ரூ 98 ரீசார்ஜ் திட்டத்தில் இரட்டை தரவு சலுகை உள்ளது. இதில், 28 நாட்கள் செல்லுபடியாகும், 12 ஜிபி தரவும் கிடைக்கும்.
100 ரூபாய்க்கு ஜியோ ப்ரீபெய்ட் திட்டம்
11 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில், அதிகபட்சமாக 10 ரூபாய் அளவுக்கு பேசலாம். இந்த திட்டத்தைத் தவிர, ஜியோவின் (Jio) ரூ .20, ரூ .50 மற்றும் ரூ .100 ரூபாய் என்ற பேசுவதற்கான திட்டத்தையும் தேர்வு செய்யலாம். ஜியோவின் தரவுத் திட்டமானது 11 ரூபாய், ரூ .21, ரூ 51 மற்றும் ரூ 101 க்கு கிடைக்கிறது. இதன் மூலம் உங்களுக்கு 1 ஜிபி, 2 ஜிபி, 6 ஜிபி மற்றும் 12 ஜிபி தரவு வரம்பு கிடைக்கும்.
ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டம் 100 ரூபாய்க்கு
ஏர்டெல் (Airtel) ரூ .45, ரூ .49 மற்றும் ரூ .79 ரீசார்ஜ் என்ற திட்டத்தை 28 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் கொடுக்கிறது. ஏர்டெல்லின் 48 ரூபாய் தரவுத் திட்டத்திற்கு 3 ஜிபி தரவு கிடைக்கிறது. இது 28 நாட்கள் செல்லுபடியாகும் திட்டம். 98 ரூபாய் தரவுத் திட்டத்தை எடுத்துக் கொண்டால், அதில் 12 ஜிபி தரவு கிடைக்கும்.
ALSO READ | Jio, Airtel, Vi நெட்வொர்க்குகளின் மிக குறைந்த விலை டேட்டா பிளான்களின் முழு விவரம்!
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR