Floating Train: பறக்கும் ரயில் பழைய கதையானது, சீனாவில் வருகிறது மிதக்கும் அதிவேக ரயில்

புதிய மேக்லெவ் ரயில் சீன நகரங்களுக்கு இடையில் விரைவான பயணத்தை சாத்தியமாக்கும் அரசாங்க திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த ரயில் மணிக்கு 620 கிமீ வேகத்தில் பயணிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 19, 2021, 08:15 PM IST
  • சீனாவில் உருவாக்கப்பட்ட ஒரு அதிவேக மாக்வெல் ரயிலுக்கான மாதிரி ஆரவாரத்துடன் வெளியிடப்பட்டது.
  • இந்த ரயில் வண்டி ‘ஃப்ளோடிங் டிரெயின்’ அதாவது ‘மிதக்கும் ரயில்’ என்று அழைக்கப்படுகிறது.
  • ரயிலின் வேகத்தை மணிக்கு 800 கிலோ மீட்டராக நீட்டிக்க முயற்சி.
Floating Train: பறக்கும் ரயில் பழைய கதையானது, சீனாவில் வருகிறது மிதக்கும் அதிவேக ரயில் title=

சீனாவிலேயே உருவாக்கப்பட்ட ஒரு அதிவேக மாக்வெல் ரயிலுக்கான ப்ரோட்டோடைப்பை சீனா இன்று வெளியிட்டது. 69 அடி நீள “சூப்பர் புல்லட் மேக்லெவ்” மாடலின் உற்பத்தி 2021 ஜனவரி 13 ஆம் தேதி சீனாவின் செங்டு நகரத்தில் தொடங்கியது.

இந்த அதிவேக ரயில் 385 mph வேகத்தில், மணிக்கு 620 கி.மீ. செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு ஜியோடோங் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்த ரயிலில் (Train) சக்கரங்கள் இல்லை. அதற்கு பதிலாக, ரயில் உயர் வெப்பநிலை சூப்பர் கண்டக்டிங் (எச்.டி.எஸ்) மேக்லெவ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது, இது மற்ற ரயில்களை விட இதை வேகமாகவும் இலகுவாகவும் இயங்கவைக்கிறது.

இந்த ரயில் வண்டி ‘ஃப்ளோடிங் டிரெயின்’ அதாவது ‘மிதக்கும் ரயில்’ என்று அழைக்கப்படுகிறது. மாக்லெவ் ரயில்கள் தடங்களிலிருந்து விலகி, சக்கர ரயில் உராய்வைத் தவிர்ப்பதற்காக சக்திவாய்ந்த காந்தங்களால் இயக்கப்படுகின்றன. இதனால் இவற்றால் தடங்களுக்கு மேலே உலாவ முடியும். இந்த தொழில்நுட்பம் (Technology), ரயில் காந்தமாக்கப்பட்ட தடங்களுக்கு மேல் மிதப்பது போல தோற்றமளிக்க உதவுகிறது. மேலும், இந்த தொழில்நுட்பத்தினால் ரயில் அதிவேகமாகவும் தொடர்பற்ற முறையிலும் இயங்குகிறது.

இந்த ரயில்கள் அதிவேக ரயில்கள் (Bullet Trains) எதிர்கொள்ளும் வேக சிக்கல்களை போக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

No description available.

ALSO READ: இந்த வழியில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் 50% தள்ளுபடி கிடைக்கும்!!

ஒரு அறிக்கையின்படி, ‘மிதக்கும் ரயிலின்’ அறிமுகமானது சீனாவின் எச்.டி.எஸ் தொழில்நுட்ப வளர்ச்சியில் ‘ஜீரோ டு ஒன்’ முன்னேற்றம் என்று பாராட்டப்பட்டது.

இந்த ரயிலின் மாதிரி மிகுந்த ஆரவாரத்துடன் வெளியிடப்பட்டது. இருப்பினும், இந்த ரயில் முழு இயக்கத்திற்கு வர சற்று நேரம் ஆகும். அடுத்த மூன்று முதல் பத்து ஆண்டுகளில் இந்த ரயில்களை முழு அளவில் இயக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

புதிய மேக்லெவ் ரயில் சீன (China) நகரங்களுக்கு இடையில் விரைவான பயணத்தை சாத்தியமாக்கும் அரசாங்க திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த ரயில் மணிக்கு 620 கிமீ வேகத்தில் பயணிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இது லண்டன் மற்றும் பாரிஸ் இடையிலான பயண நேரத்தை வெறும் 47 நிமிடங்களாக குறைக்கக்கூடும். மேலும், இந்த ரயிலின் வேகத்தை மணிக்கு 800 கிலோ மீட்டராக நீட்டிக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ALSO READ: Arunachal Pradesh-ல் வீடுகளை கட்டி வருகிறதா சீனா? திடுக்கிட வைக்கும் புதிய தகவல்கள்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News