Cheapest Powerbanks: அதிரடி தள்ளுபடி, நிமிடங்களில் சார்ஜ் செய்யும் டாப் 5 பவர்பேங்குகள்

இன்றைய காலகட்டத்தில், அனைவரது வாழ்க்கையிலும் தொலைபேசி ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றது. ஒரு போனை வாங்கும் போது, ​​அனைவரும் அந்த போனின் பேட்டரி எப்படி இருக்கிறது என்பதில் சிறப்பு கவனம் செலுத்துகிறார்கள். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 8, 2021, 09:05 AM IST
Cheapest Powerbanks: அதிரடி தள்ளுபடி, நிமிடங்களில் சார்ஜ் செய்யும் டாப் 5 பவர்பேங்குகள் title=

இன்றைய காலகட்டத்தில், அனைவரது வாழ்க்கையிலும் தொலைபேசி ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றது. இத்தகைய சூழ்நிலையில், ஒரு போனை வாங்கும் போது, ​​அனைவரும் அந்த போனின் பேட்டரி எப்படி இருக்கிறது என்பதில் சிறப்பு கவனம் செலுத்துகிறார்கள். வழக்கமான சார்ஜர்கள் மற்றும் பிளக் பாயிண்டுகள் இல்லாமலேயே, பவர் பேங்குகள் மற்றும் போர்ட்டபிள் சார்ஜர்கள் தொலைபேசியின் பேட்டரி ஆயுளை நீட்டிக்கும் பணியை செய்கின்றன.

இன்று நாம் 10,000mAh திறன் கொண்ட பவர் பேங்குகளைப் பற்றி காணலாம். இதை வாடிக்கையாளர்கள் இந்த மாதத்திலேயே, அதாவது ஆகஸ்ட் மாதத்திலேயே வாங்க முடியும்.

one Plus 10,000mAh பவர்பேங்க்

அமேசான் (Amazon) மற்றும் ஒன் பிளஸ் ஆன்லைன் ஸ்டோரிலிருந்து இந்த அழகான பவர் பேங்கை ரூ .999-க்கு வாங்கலாம். இது இலகுரக போர்ட்டபிள் சார்ஜர் ஆகும். இதன் எடை 255 கிராம் மட்டுமே.

இயர்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்கள் போன்ற குறைந்த பவர்  கொண்ட சாதனங்களை சார்ஜ் செய்ய லோ-பவர் பயன்முறையையும் இதில் உள்ளது. இந்த ஒன்பிளஸ் பவர் பேங்க் இன்புட் மற்றும் அவுட்புட் இரண்டிற்கும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கைப் பயன்படுத்துகிறது.

ALSO READ: Whatsapp Tips And Tricks: லாப்டாப்பில் இருந்து வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு செய்வது சுலபம்

Philips DLP1710CB 10,000mAh பவர்பேங்க்

பிலிப்சின் இந்த பவர்பேங்கில், பயனர்களுக்கு இரண்டு அவுட்புட் USB டைப் A போர்ட்கள் கிடைக்கும். மைக்ரோ யுஎஸ்பி மற்றும் டைப் சி இன்புட்களுடன் வரும் இந்த போர்ட்டபிள் சார்ஜர் வெப்ப மின்னழுத்த மின்னோட்ட பாதுகாப்பையும் கொண்டுள்ளது. இந்த பிலிப்ஸ் டிஎல்பி 1710 சிபி பவர்பேங்கை அமேசானில் இருந்து ரூ .799 க்கு வாங்கலாம்.

10,000mAh Mi பவர்பேங்க் 3i

சியோமியின் (Xiaomi ) இணையதளத்தில் ரூ .899 க்கு கிடைக்கும் இந்த பவர் பேங்க், இந்தியாவில் மிகவும் பிரபலமானது. இதன் அம்சங்களைப் பற்றி பேசுகையில், இதில் 18W ஸ்மார்ட் சார்ஜிங்குடன், யூ.எஸ்.பி Type C மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட்கள் அதாவது இரட்டை இன்புட்டுக்கான வசதியும் உள்ளது. அதன் ஸ்மார்ட் பவர் மேனேஜ்மென்ட் அம்சத்தின் மூலம், பயனர் தங்கள் சாதனங்களுடன் பவர் பேங்கையும் விரைவாகவும் முழுமையாகவும் சார்ஜ் செய்யலாம்.

Oppo 10,000mAh பவர்பேங்க்

ஒப்போவின் (OPPO) இந்த பவர் பேங்க் 18W ஃபாஸ்ட் சார்ஜிங், லோ-கரண்ட் சார்ஜிங் மோட் மற்றும் யூ.எஸ்.பி டைப் சி சார்ஜிங் போர்ட் வசதியுடன் வருகிறது. அதன் இரட்டை இணைப்பு கேபிள் மூலம், பயனர்கள் மைக்ரோ யுஎஸ்பி மற்றும் யூஎஸ்பி டைப் சி போர்ட் இரண்டையும் மாற்றாகப் பயன்படுத்தலாம். பிளிப்கார்ட்டில் இதன் விலை ரூ .1,099 ஆகும்.

Syska 10,000mAh பவர்பேங்க்

அமேசானில் Syska 10,000mAh பவர்பேங்க் ரூ .749-க்கு கிடைக்கிறது. இந்த பவர்பேங்க் மூலம், பயனர்கள் பல இணைப்புகளைப் (connectors) பெற முடியும். அவுட்புட்டிற்கு இரண்டு ஸ்டாண்டர்ட் USB போர்ட்கள், ஒரு மைக்ரோ USB போர்ட் மற்றும் இன்புட்டுக்கு USB வகை C போர்ட் ஆகியவற்றைப் பெறலாம்.

ALSO READ: Tech News: டைப் செய்யாமலேயே வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்புவது எப்படி?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News