JioPhone Next: ரிலையன்ஸ் ஜியோ இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவில் ஜியோபோன் நெக்ஸ்ட்டை அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.6,499க்கு கிடைக்கிறது. எனினும், வாடிக்கையாளர்கள் ரூ.1,999 செலுத்தி EMI இல் இதை வாங்கலாம். முதலில் ஜியோபோன் நெக்ஸ்ட்டின் விலை அதிகம் என்று பலருக்கு தோன்றியது.
எனினும், அறிமுகத்துக்குப் பிறகு இந்த போன் வாடிக்கையாளர்களுக்கு இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ரிலையன்ஸ் ரீடெய்ல் இந்த வாரம், தங்கள் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடமிருந்து மிகவும் ஊக்கமளிக்கும் பின்னூட்டத்தைப் பெற்றுள்ளதாக தெரிவித்தது. நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் உள்ள மக்கள் ஜியோ ஃபோன் நெக்ஸ்ட்க்கு (Jio Phone) சாதகமாக வரவேற்பை அளித்துள்ளன என நிறுவனம் மேலும் தெரிவித்தது.
அதி நவீன அம்சங்களுடன், வெறும் 1,999 ரூபாய் முன்பணம் கட்டி வாங்கக்கூடிய ஸ்மார்ட்ஃபோன்கள் சந்தையில் இல்லை என்றும், இதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் ஸ்மார்ட்போனை எளிதாக வாங்க முடிகிறது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சில வாரங்களில் டெலிவரி தொடங்கும்
ரிலையன்ஸ் (Reliance) ரீடெய்ல் மேலும் கூறுகையில், "பிரகதி ஓஎஸ்ஸுக்கு, குறிப்பாக அதன் வாய்ஸ், கேமரா மற்றும் மொழி அம்சங்கள் காரணமாக சந்தையின் வரவேற்பு மிகவும் சாதகமாக உள்ளது." என்றது. இந்த சாதனம் ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் ஜியோமார்ட் பார்ட்னர் ரீடெய்ல் ஸ்டோர்கள் மூலம் பிரத்தியேகமாக கிடைக்கும்.
ரிலையன்ஸ் மேலும் "நாடு முழுவதும் இந்த விற்பனை நிலையங்கள் விரைவான வேகத்தில் தொடங்கப்படுகின்றன." என்று கூறியது. ஜியோவின் இணையதளத்துடன் ஜியோமார்ட் சில்லறை விற்பனையாளர்கள் தற்போது ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவுகளை பெற்று வருகின்றனர். மேலும் வரும் வாரங்களில் டெலிவரி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ: ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களுக்கான கட்டணங்கள் உயர்வு; புதிய ரேட் என்ன?
ரிலையன்ஸ் மேலும் "நாடு முழுவதும் இந்த விற்பனை நிலையங்கள் விரைவான வேகத்தில் தொடங்கப்படுகின்றன." என்று கூறியது. ஜியோவின் இணையதளத்துடன் ஜியோமார்ட் சில்லறை விற்பனையாளர்கள் தற்போது ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவுகளை பெற்று வருகின்றனர். மேலும் வரும் வாரங்களில் டெலிவரி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
JioPhone Next: விவரக்குறிப்புகள்
ஜியோ (Jio) ஃபோன் நெக்ஸ்ட் 5.45 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 210 சிப்செட், பிரகதி ஓஎஸ், 13 எம்பி பின்புற கேமரா மற்றும் 10W சார்ஜிங் ஆதரவுடன் 3,500 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. இந்த கைபேசியானது PragatiOS எனப்படும் புதிய OS ஐ இயக்குகிறது. இது Android 11 Go பதிப்பின் மாற்றியமைக்கப்பட்ட பதிப்பாகத் தோன்றுகிறது.
JioPhone Next-ல் EMI ஆப்ஷன்
இந்தியாவில் 300 மில்லியனுக்கும் அதிகமான ஃபீச்சர் போன் பயனர்களை குறிவைக்க ரிலையன்ஸ் ஜியோவுக்கு உதவும் நோக்கில் இந்த ஸ்மார்ட்போன் தீபாவளிக்கு முன்னதாகவே அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போனின் விலை ரூ. 6,499 ஆகும். ஆனால் ரூ. 1,999 மற்றும் செயலாக்கக் கட்டணமாக ரூ. 500 செலுத்தி இதை வாங்கலாம். மீதமுள்ள தொகையை 18 அல்லது 24 மாதங்களில் மாதாந்திர தவணைகளில் செலுத்தலாம்.
ALSO READ:புது Realme 5G ஃபோன் வாங்க வாய்ப்பு; எங்கே தெரியுமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR