Cheapest Electric Scooter: ரூ.50,000-க்குள் கிடைக்கும் அட்டகாசமான மின்சார ஸ்கூட்டர்கள்

50 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டிற்குள் அசத்தலான மின்சார ஸ்கூட்டர்களை நீங்கள் வாங்க முடியும். அப்படிப்பட்ட டாப் 5 ஸ்கூட்டர்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 27, 2021, 01:21 PM IST
  • 50 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டிற்குள் அசத்தலான மின்சார ஸ்கூட்டர்கள்.
  • 50 ஆயிரம் வரம்பில் வரும் மின்சார ஸ்கூட்டர்களின் பட்டியலில் ஆம்பியர் வி48-ன் பெயர் முதலிடத்தில் உள்ளது.
  • குறைந்த பட்ஜெட்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க எண்ணம் கொண்டவர்களுக்கு ஆம்பியர் ரியோ பிளஸ் நியூ முதல் தேர்வாக இருக்கும்.
Cheapest Electric Scooter: ரூ.50,000-க்குள் கிடைக்கும் அட்டகாசமான மின்சார ஸ்கூட்டர்கள் title=

புதுடெல்லி: இந்த தீபாவளியில் மின்சார ஸ்கூட்டர் வாங்க நீங்கள் திட்டமிட்டிருந்தால், இந்த செய்தி உங்களுக்கானது. 50 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டிற்குள் அசத்தலான மின்சார ஸ்கூட்டர்களை நீங்கள் வாங்க முடியும். அப்படிப்பட்ட டாப் 5 ஸ்கூட்டர்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

இந்த ஸ்கூட்டர்களுக்கு (Scooters) இந்திய சந்தையில் அதிக கிராக்கி உள்ளது. அதிக தூரம் செல்லாமல், அலுவலகம், கடைகள் போன்ற உள்ளூர் பயணங்களுக்கு மட்டும் ஸ்கூட்டரை பயன்படுத்தும் நபரா நீங்கள்? அப்படியென்றால், இந்த ஸ்கூட்டர்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Ampere V48

50 ஆயிரம் வரம்பில் வரும் மின்சார ஸ்கூட்டர்களின் (Electric Scooters) பட்டியலில் ஆம்பியர் வி48-ன் (Ampere V48) பெயர் முதலிடத்தில் உள்ளது. இந்த ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ .39,990 முதல் தொடங்குகிறது. இந்த ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 60 கிமீ தூரத்தை அது கடக்கும். 

நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த ஸ்கூட்டரை முழு சார்ஜ் செய்ய 8 மணி நேரம் ஆகும். வாடிக்கையாளர்களின் தேர்வை மனதில் வைத்து, இந்த மின்சார ஸ்கூட்டர் சிவப்பு, நீலம் மற்றும் ஊதா நிறங்களில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரை அதிகபட்சமாக 25 Kmph வேகத்தில் இயக்க முடியும். இதில் 48V பேட்டரி மற்றும் 250W மோட்டார் உள்ளன.

Hero Electric Flash LX (VRLA)

Hero Electric Flash LX (VRLA) இன் டெல்லி-NCR இன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.46,640 ஆகும். நிறுவனம் இந்த ஸ்கூட்டரை சிவப்பு மற்றும் வெள்ளை என இரண்டு வண்ணங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஸ்கூட்டர் அதிகபட்சமாக 25 கிமீ வேகத்தில் செல்லும். இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 50 கிமீ வரை இயக்க முடியும். ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்ய 8 முதல் 10 மணி நேரம் ஆகும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது 250W பவருக்கும் குறைவான மோட்டார் மற்றும் 48V பேட்டரியைக் கொண்டுள்ளது.

ALSO READ: Electric Scooter: ஸ்கூட்டர் வாங்க போறீங்களா, எந்த ஸ்கூட்டர் சிறந்தது

Hero Electric Optima LX (VRLA)

நாட்டின் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ (Hero), எலக்ட்ரிக் ஆப்டிமா எல்எக்ஸ் (விஆர்எல்ஏ) ஸ்கூட்டரை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. டெல்லியில் இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.51,440 ஆகும். நீங்கள் அதை வெள்ளை, நீலம் மற்றும் சாம்பல் ஆகிய மூன்று வண்ணங்களில் வாங்கலாம். இந்த ஸ்கூட்டரை அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ வேகத்தில் மட்டுமே ஓட்ட முடியும். ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்ய 8 முதல் 10 மணி நேரம் ஆகும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது 250W பவருக்கும் குறைவான மோட்டார் மற்றும் 48V பேட்டரியைக் கொண்டுள்ளது.

Ampere Reo Plus New

குறைந்த பட்ஜெட்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க எண்ணம் கொண்டவர்களுக்கு ஆம்பியர் ரியோ பிளஸ் நியூ முதல் தேர்வாக இருக்கும். இந்த ஸ்கூட்டரின் லீட் ஆசிட் பேட்டரி வகையின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.45,520 ஆகும். இந்த ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 65 கிமீ வரை இயக்க முடியும். முழு சார்ஜ் செய்ய 6 மணி நேரம் ஆகும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கி.மீ ஆகும். ஸ்கூட்டரில் 48V பேட்டரி மற்றும் 250W மோட்டார் உள்ளது.

Lohia Oma Star

இந்த ஸ்கூட்டரின் விலை லோஹியா ஓமா ஸ்டாரின் இணையதளத்தில் கொடுக்கப்படவில்லை. ஆனால் அறிக்கைகளின்படி, இந்த ஸ்கூட்டர் ரூ .45,368  என்ற ஆரம்ப விலையில் வருகிறது. இது 25Kmph அதிகபட்ச வேகத்தைக் கொண்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 60Km வரை இதனால் பயணிக்க முடியும். இது 250W க்கும் குறைவான BLDC மோட்டார் கொண்டுள்ளது. பவர் கொடுக்க, ஸ்கூட்டரில் 48V பேட்டரி கிடைக்கிறது. டிஜிட்டல் டிஸ்ப்ளே மற்றும் டெலஸ்கோப் ஃபோர்க் போன்ற அம்சங்கள் ஸ்கூட்டரில் கிடைக்கின்றன. இதை இயக்க உரிமம் தேவையில்லை.

ALSO READ: குறைந்த விலையில் அறிமுகம் ஆகும் Hover மின்சார ஸ்கூட்டர்: அதிரடி விலை அசத்தும் அம்சங்கள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News