இதுதான் உலகின் மிகவும் மலிவான 5G iPhone! முழு விவரம் இதோ

iPhone 2022: மூன்றாம் தலைமுறை iPhone SE பற்றிய புதிய செய்தி ஒன்று வெளிவந்துள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 1, 2021, 05:02 PM IST
இதுதான் உலகின் மிகவும் மலிவான 5G iPhone! முழு விவரம் இதோ title=

புதுடெல்லி: தைவானைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனமான ட்ரெண்ட்ஃபோர்ஸின் கூற்றுப்படி, Apple இன் மூன்றாம் தலைமுறை iPhone SE ஐ 2022 முதல் காலாண்டில் வெளியிட திட்டமிட்டுள்ளது. அதன்படி மார்ச் இறுதிக்குள் இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கலாம். முன்னதாக, iPhone SE 5Gக்கு கூடுதல் ஆதரவுடன் மிட்-ரேன்ஞ் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று TrendForce கூறியது. அதாவது, மலிவான 5G ஐபோன் என்று சொல்லலாம்.

iPhone SE மார்ச் 2022 இல் வெளியிடப்படலாம்
தயாரிப்பு மேம்பாட்டைப் பொறுத்தவரை, Apple அதன் மூன்றாம் தலைமுறை iPhone SE ஐ (iPhone) 1Q22 மற்றும் நான்கு மாடல்களை 2H22 இல் ஒரு புதிய தொடரின் கீழ் வெளியிட திட்டமிட்டுள்ளது. மூன்றாம் தலைமுறை iPhone SE ஆனது, மிட்-ரேன்ஞ் 5G ஸ்மார்ட்போன்களுக்கான சந்தைப் பிரிவில் ஆப்பிள் தனது இருப்பை நிலைநிறுத்த உதவும் ஒரு முக்கிய கருவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் உற்பத்தி அளவு 2022 இல் 25-30 மில்லியன் யூனிட்களை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ALSO READ: Buy Now Pay Later: பண்டிகை கால ஷாப்பிங்கில் இனி டென்ஷன் வேண்டாம் 

iPhone SE பற்றிய சிறப்பம்சங்கள்
Apple ஆய்வாளர் மிங்-சி குவோ, புதிய iPhone SE ஆனது iPhone 8 ஐ அடிப்படையாகக் கொண்ட தற்போதைய மாடலைப் போன்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கும், 4.7 இன்ச் டிஸ்ப்ளே, டச் ஐடி ஹோம் பட்டன் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். சாதனத்திற்கான முக்கிய மேம்படுத்தல்களில் 5G ஆதரவு மற்றும் வேகமான செயலி - A15 சிப் ஆகியவை அடங்கும் என்று Kuo கூறினார்.

iPhone SE இன் பெரிய பதிப்பு வரலாம்
Apple iPhone SE இன் பெரிய பதிப்பில் வேலை செய்கிறது, ஆனால் அந்த சாதனம் 2023 அல்லது அதற்கு முன் வெளியிடப்படுவது சந்தேகமே. அசல் iPhone SE மார்ச் 2016 இல் வெளியிடப்பட்டது மற்றும் செப்டம்பர் 2018 இல் நிறுத்தப்பட்டது. இரண்டாம் தலைமுறை iPhone SE ஆனது ஏப்ரல் 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் 64GB சேமிப்பகத்திற்கு $399 (ரூ. 29,928) மற்றும் 128GB சேமிப்பகத்திற்கு $449 (ரூ. 33,679) விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ALSO READ: Flipkart அசத்தும் சலுகை: வெறும் ரூ.4,999-க்கு கிடைக்கிறது சாம்சங் Smart TV 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News