Nokia 105 4G: நல்ல பேக்அப் போன் வேண்டுமா? குறைந்த விலையில் இதுதான் சரியான சாய்ஸ்

Nokia 105 4G (2023): அறிமுகம் ஆனது நோக்கியாவின் கிளாசிக் கேண்டி பார் பாணியிலான நோக்கியா 105 4ஜி போன். இதன் அம்சங்களை இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 25, 2023, 02:14 PM IST
  • புதிய க்ளாசிக் கேண்டி பார் ஸ்டைலில் உள்ள Nokia 105 4G நேர்த்தியான அம்சங்களைக் கொண்டுள்ளது.
  • வயதான பயனர்கள், மாணவர்கள் மற்றும் பேக்கப் ஃபோன் தேவைப்படும் நபர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.
  • இரட்டை நானோ-சிம் கார்டு ஸ்லாட்டுகளுடன் கூடிய இரட்டை சிம் ஒரே நேரத்தில் டூயல் 4ஜி ஆன்லைனில் செயல்படுத்துகிறது.
Nokia 105 4G: நல்ல பேக்அப் போன் வேண்டுமா? குறைந்த விலையில் இதுதான் சரியான சாய்ஸ்  title=

Nokia 105 4G (2023) அறிமுகம் ஆனது: பிரபல ஸ்மார்ட்போன் பிராண்டான நோக்கியா, அதன் கிளாசிக் கேண்டி பார் பாணியிலான நோக்கியா 105 4ஜியின் (Nokia 105 4G (2023)) மேம்படுத்தப்பட்ட பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்திய பதிப்பில் ஒரு பேட்டரி உள்ளது, இது நீண்ட பேட்டரி ஆயுளை உறுதியளிக்கிறது. இந்த ஃபோன் Alipayஐயும் ஆதரிக்கிறது. இந்த போனின் விலை சீனாவில் 229 யுவான் (சுமார் ரூ.8,300) ஆக வைக்கப்பட்டுள்ளது. நோக்கியா 105 4ஜி (2023) விலை மற்றும் அம்சங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளாலாம். 

Nokia 105 4G (2023): விவரக்குறிப்புகள்

பழைய நோக்கியா 105 4G உடன் ஒப்பிடும்போது, ​​புதிய பதிப்பு பல பெரிய மேம்படுத்தல்களுடன் வருகிறது. போனில் அதிக பேட்டரி திறன் உள்ளது. இதில் பேட்டரி திறன் 1450mAh -க்கு 42% அதிகரிப்பு, 32ஜிபி சேமிப்பு விரிவாக்கம், புளூடூத் 5.0 மற்றும் மிகு மியூசிக் மற்றும் ஹிமாலயா ஃபன்ஷோவுக்கான ஆதரவு ஆகியவை கிடைக்கின்றன. அதே நேரத்தில், இந்த போனில் குரல் ஒளிபரப்பு செயல்பாடு (வாய்ஸ் பிராட்காஸ்ட் ஃபங்ஷன்) அகற்றப்பட்டுள்ளது. கருப்பு மற்றும் நீல நிறங்களில் கிடைக்கும் இந்த போனில் போல்ட் பட்டன் எழுத்துருக்கள் உள்ளன.

Nokia 105 4G (2023): அம்சங்கள்

புதிய க்ளாசிக் கேண்டி பார் ஸ்டைலில் உள்ள Nokia 105 4G (2023), வயதான பயனர்கள், மாணவர்கள் மற்றும் பேக்கப் ஃபோன் தேவைப்படும் நபர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். Nokia 105 4G ஆனது டூயல்-கார்டு டூயல்-ஸ்டாண்ட்பை மற்றும் டூயல் 4ஜி ஃபுல் நெட்காமை ஆதரிக்கிறது. 

மேலும் படிக்க | ஐபோன் கனவை இப்படி நனவாக்குங்கள்..! குறைந்த விலையில் உங்கள் கையில் iPhone

இரட்டை நானோ-சிம் கார்டு ஸ்லாட்டுகளுடன் கூடிய இரட்டை சிம் ஒரே நேரத்தில் டூயல் 4ஜி ஆன்லைனில் செயல்படுத்துகிறது. VoLTE HD குரல் அழைப்புகளும் ஆதரிக்கப்படுகின்றன.

இந்த தொலைபேசியில் வயர்லெஸ் வெளிப்புற ரேடியோ (வயர்லெஸ் எக்ஸ்டர்னல் ரெடியோ) உள்ளது. இது ஸ்பீக்கர்கள் மூலம் அல்லது ஹெட்ஃபோன்கள் இல்லாமல் இயக்கப்படலாம். இது ஒரு டார்ச்சையும் கொண்டுள்ளது. அதை 'மேலே திசை' ('அப் டைரக்ஷன்)' பட்டன் மூலம் இயக்கலாம் அல்லது அணைக்கலாம். மிகவும் பிரபலமான பாம்பு விளையாட்டு (ஸ்னேக் கேம்) தொலைபேசியில் நிறுவப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 28 ஆம் தேதி ஷிப்பிங்குக்கு தயாராக உள்ளது.

மேலும் படிக்க | Airtel 5G Plans: ஏர்டெல் வழங்கும் அசத்தலான ‘சில’ 5G திட்டங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News