Cheap and Best Electric Cycles: இ-பைக்குகளுக்கு செம போட்டி அளிக்கும் சூப்பர் சைக்கிள்கள்

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் இன்றைய சூழலில், மின்சார வாகனங்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. உடல் ஃபிட்னசிலும் அதிக கவனம் செலுத்த நினைப்பவர்களுக்கு மின்சார சைக்கிள்கள் மிக நல்ல தீர்வாக இருக்கும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 20, 2021, 06:01 PM IST
Cheap and Best Electric Cycles: இ-பைக்குகளுக்கு செம போட்டி அளிக்கும் சூப்பர் சைக்கிள்கள் title=

Stryder launch contino etb 100 and voltic 17 electric cycles: பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் இன்றைய சூழலில், மின்சார வாகனங்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. உடல் ஃபிட்னசிலும் அதிக கவனம் செலுத்த நினைப்பவர்களுக்கு மின்சார சைக்கிள்கள் மிக நல்ல தீர்வாக இருக்கும். நம் இந்திய சந்தையில் உள்ள சில மிகச்சிறந்த மின்சார சைக்கிள்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

டாடா இன்டர்நேஷனல் லிமிடெட் (Tata International Limited) நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்ட்ரைடர் (Stryder), வாடிக்கையாளர்களுக்காக இரண்டு சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது. தினமும் சைக்கிள் ஓட்டுவதை பலர் விரும்புகிறார்கள். உங்களுக்கும் அந்த விருப்பம் இருந்து, நீங்கள் சைக்கிளில் 20-25 கிலோமீட்டர் பயணிக்கும் வழக்கம் கொண்டிருந்தால், இந்த இரண்டு மின்சார சைக்கிள்களும் உங்களுக்கு சிறந்ததாக இருக்கும்.

Stryder அதன் இரண்டு மின்சார சைக்கிள்களிலும் பல சிறந்த அம்சங்களைச் சேர்த்துள்ளது. முதல் சைக்கிளின் பெயர் Contino ETB-100, இரண்டாவது சைக்கிள் voltic 17. Contino ETB-100 சைக்கிள் இன்றைய இளைஞர்களை மனதில் வைத்து நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. நல்ல மைலேஜ் தரும், மலிவான விலையில் கிடைக்கும் சிறந்த சைக்கிளாக இது இருக்கும்.

ALSO READ: Best Electric Cycle:GoZero Mobility-ன் அட்டகாச Skellig Lite மின்சார சைக்கிள் அறிமுகம்

Stryder voltic 17-ல் உள்ள சிறப்பம்சம் என்ன

Stryder voltic 17 டாடா இன்டர்நேஷனல் லிமிடெட் மற்றும் Stryder ஆல் அறிமுகப்படுத்தப்பட்டது. நிறுவனம் இந்த இ-பைக்கின் (High Speed Electric Cycle) ஆரம்ப விலையை ரூ .29,995 ஆக வைத்திருக்கிறது. இதில் சாம்பல் மற்றும் சிவப்பு வண்ணங்கள் கிடைக்கும். இவை இரண்டுமே மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கின்றன. மின்சார பைக்குடன் (Electric Bike) போட்டியிடும் வகையில், இதில், வலுவான மோட்டார் மற்றும் கனமான லித்தியம் அயன் பேட்டரி ஆகியவையும் உள்ளன.

இதன் பேட்டரி முழுவதும் சார்ஜ் ஆக, அதிகபட்சமாக 3 மணி நேரம் எடுத்துக்கொள்ளும். முழு சார்ஜ் செய்த பிறகு, இந்த சைக்கிளை 25 முதல் 28 கிலோமீட்டர் வரை ஓட்டலாம். மணிக்கு 25 கிமீ வேகம் இதன் டாப் ஸ்பீடாக உள்ளது. மேலும், நிறுவனம் மூலம் இதில் 2 வருட உத்தரவாதமும் வழங்கப்படுகிறது.

Contino ETB 100 மின்சார சைக்கிளில் உள்ள மேம்பட்ட அம்சங்கள் என்ன?

Contino ETB 100 சைக்கிள், நாட்டின் மிக மலிவான சைக்கிள்களின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சைக்கிளின் ரன்னிங் காஸ்ட், கிலோமீட்டருக்கு 6 பைசாவாக உள்ளது. சார்ஜிங்கிலும் இது மிகச் சிறப்பாக உள்ளது. அதாவது, ஒரு முறை சார்ஜ் செய்தால், இதை கொண்டு 60 கிமீ பயணிக்கலாம்.

ஸ்மார்ட் பாதுகாப்பு அம்சங்களைப் பற்றி பேசுகையில், இந்த மின்சார சைக்கிளில் 7 வேகம் மற்றும் 3 சவாரி முறைகள் (மின்சார, ஹைப்ரிட் மற்றும் பெட்டல்) கொடுக்கப்பட்டுள்ளன. நாட்டில் இருக்கும் ஒவ்வொரும் இந்த சைக்கிளை எளிதாக வாங்கலாம். இதன் விலை ரூ .37,999 ஆகும். இதில் கருப்பு மற்றும் நீலம் ஆகிய இரண்டு வண்ணங்கள் கிடைக்கின்றன.

ALSO READ: Best Electric Cycle-ஐ அறிமுகம் செய்தது Toutche, முழு சார்ஜில் 80 கி.மீ செல்லும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Trending News