ChatGPT: ’சொன்னது நடந்துடுச்சு’ பொய் செய்திகளுக்கு வித்திடும் ஏஐ - இதோ உதாரணம்

சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ தொழில்நுட்பங்கள் பேராபத்தை ஏற்படுத்தும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரித்த நிலையில், அப்படியான ஒரு சம்பவமும் நடைபெற்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : May 9, 2023, 01:31 PM IST
  • ஏஐ உதவியால் பரவும் போலி செய்தி
  • சீனாவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்
  • கைது செய்து விசாரிக்கும் காவல்துறை
ChatGPT: ’சொன்னது நடந்துடுச்சு’ பொய் செய்திகளுக்கு வித்திடும் ஏஐ - இதோ உதாரணம் title=

தொழில்நுட்ப உலகம் இப்போது ஆர்டிபீஷியல் இன்டலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவை நோக்கி நகர்ந்துவிட்டது. மனிதர்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கான வேகத்திலும், தகவல் சேகரிப்பிலும் இருக்கும் அந்த தொழில்நுட்பம், செயலி உருவாக்கம் முதல் புதிய கண்டுபிடிப்புக்கு தேவையான ஃபார்முலாவை உருவாக்குவது வரை எண்ணில் அடங்கா வேகத்தில் செயல்படுகிறது. இது ஒரு அபூர்வ கண்டுபிடிப்பாக பார்க்கப்பட்ட அதேநேரத்தில் இதனால் ஏற்படும் தீமைகளும் கற்பனைகளுக்கு விஞ்சியது என எச்சரித்தது தொழில்நுட்ப உலகம். போலியாக ஆடியோ உருவாக்க முடியும். ஒருவரின் வீடியோவை உருவாக்க முடியும். 

ஒருவர் மற்றொருவருடன் இருப்பது போன்ற வீடியோவையும் இதன் மூலம் உருவாக்கிவிட முடியும். இதன் மூலம் ஒருவர் அல்லது ஒரு சமூகம் மீது அவதூறுகளை அள்ளி வீசவிட முடியும். நிரூப்பிப்பது அவ்வளவு சுலபமில்லை. ஏனென்றால் பொய் பரவும் வேகத்துக்கு உண்மை பரவாது என்பது தான் உலகின் நிதர்சனம். இவற்றையெல்லாம் நினைத்து ஏஐ உருவாக்கிய தொழில்நுட்ப வல்லுநர்கள் பயந்து கொண்டிருந்த நிலையில், அதற்கு உதாரணமாக சம்பவம் ஒன்று சீனாவில் அரங்கேறியிருக்கிறது. சாட்ஜிபிடி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரயில் விபத்து குறித்து போலிச் செய்தியை உருவாக்கி ஆன்லைனில் பரப்பிய  அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மேலும் படிக்க | ஜாக்கிரதை! உங்கள் மொபைலில் உள்ள இந்த 11 ஆப்ஸ்களை உடனே நீக்குங்கள்!

சீனாவில் ChatGPTயை தவறாக பயன்படுத்தியதற்காக இதுவே முதல் கைது என நம்பப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தவறான தகவல்களை உருவாக்கிய குற்றச்சாட்டில் 'ஹாங்' என்ற புனைப்பெயர் கொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் உருவாக்கிய போலிச் செய்திகளை லட்சக்கணக்கானோர் படித்துவிட்டனர் என்பது கவலைக்குரிய விஷயமாகும். ஹாங்கை காவல்துறையினர் கைது செய்துவிட்டாலும், அந்த செய்தி குறிப்பிட்டளவு பரவி விட்டது. 

சீனாவில் ChatGPT நேரடியாகக் கிடைக்கவில்லை. ஆனால் சீனப் பயனர்கள் VPN இணைப்புடன் அதன் சேவையை அணுக முடியும், அணுகி வருகின்றனர். இதற்கு காரணம் என்னவென்றால், சாட்ஜிபிடி இன்னும் சீனாவில் அனுமதிக்கப்படவில்லை. இதேபோன்றதொரு தொழில்நுட்பத்தை சீன நிறுவனங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. தேச பாதுகாப்பை கருத்தில் கொண்டு சாட்ஜிபிடி அங்கு அனுமதிக்கப்படவில்லை. இதன் ஆபத்து பக்கம், மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என அந்நாடு கருதி, சாட்ஜிபிடி-ஐ தடை செய்திருக்கிறது. 

மேலும் படிக்க | Truecaller மூலம் வாட்ஸ்அப்பில் வரும் SPAM அழைப்புகளை தடுப்பது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News