மே மாதத்தில் இந்தியாவில் விற்பனையான கார்கள் எவ்வளவு தெரியுமா...? டாப் 5 நிறுவனங்கள்

Car Sales In May 2024: கடந்த 2024 மே மாதத்தில் இந்தியாவில் எத்தனை கார்கள் விற்பனையாகி உள்ளன, அதில் எந்த நிறுவனம் அதிக கார்கள் விற்பனை செய்தது என்பதை இதில் விரிவாக காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Jun 6, 2024, 03:11 PM IST
  • கார் விற்பனை மே மாதத்தில் அதிகமாகி உள்ளது.
  • மொத்த விற்பனையில் மாருதி சுசுகியின் பங்கு மட்டும் 41.25% ஆகும்.
  • மஹிந்திராவின் கார்களும் அதிகம் விற்பனையாகி உள்ளது.
மே மாதத்தில் இந்தியாவில் விற்பனையான கார்கள் எவ்வளவு தெரியுமா...? டாப் 5 நிறுவனங்கள் title=

Car Sales In May 2024: இந்திய ஆட்டோமொபைல் சந்தை என்பது மாதாமாதம் உயர்வை கண்டுவரும் ஒன்றாகும். கார் மற்றும் பைக் ஆகியவற்றின் விற்பனை இதில் முதன்மை பெறும். கார் விற்பனையை  எடுத்துக்கொண்டோமானால் ஆண்டு வாரியாகவும், மாதம் வாரியாகவும் உயர்வைதான் கண்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த மே மாதத்தின் கார் விற்பனை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அதாவது, இந்தியாவில் மொத்தம் எத்தனை கார்கள் விற்பனையாகின. அதில் எந்த நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது, டாப் 5 இடங்களை பிடித்த அணிகள் என்னென்ன, மாதாந்திர அளவிலும், வருடாந்திர அளிவலும் விற்பனை எவ்வளவு தூரம் உயர்ந்துள்ளது என்பதை இதில் காணலாம்.

டாப் 5 நிறுவனங்கள் என்னென்ன?

கடந்த 2023ஆம் ஆண்டின் மே மாதத்தில் 3 லட்சத்து 35 ஆயிரத்து 531 கார் யூனிட்கள் விற்பனையான நிலையில், இந்தாண்டு மே மாதத்தில் 3 லட்சத்து 49 ஆயிரத்து 54 கார் யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. வழக்கம்போல், மாருதி சுசுகி நிறுவனம்தான் இந்த மே மாதத்திலும் அதிக கார்களை விற்பனை செய்துள்ளது. அதாவது மொத்த விற்பனையில் மாருதி சுசுகியின் பங்கு மட்டும் 41.25% ஆகும். 

மாருதி சுசுகியை தொடர்ந்து ஹூண்டாய், டாடா, மஹிந்திரா, டோயோட்டா ஆகிய கார் நிறுவனங்கள் விற்பனையில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இந்த டாப் 5 நிறுவனங்களின் விற்பனை நிலவரத்தையும், கடந்த கால விற்பனையின் ஒப்பீட்டையும் இங்கு காணலாம்.

மேலும் படிக்க | இலவசமாக பாரீஸ் போகலாம்... அதுவும் ஜோடியாக! ஹோண்டாவின் பெரிய ஆப்பர் - இந்த கார்களுக்கு மட்டும்!

1. மாருதி சுசுகி

மாருதி சுசுகி கடந்த மே மாதத்தில் மட்டும் மொத்தம் 1 லட்சத்து 44 ஆயிரத்து 2 கார்கள் விற்பனையாகி உள்ளது. நாட்டின் மொத்த விற்பனையில் மாருதி சுசுகியின் பங்களிப்பு மட்டும் 41.25% ஆகும். அதாவது கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதத்தில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 708 கார்கள் விற்பனையான நிலையில், அவர்களின் வருடாந்திர வளர்ச்சி 0.20% ஆக உள்ளது. அதேபோல், 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மாருதி சுசுகி 1 லட்சத்து 37 ஆயிரத்து 952 கார்களை விற்பனை செய்திருந்தது. அந்த வகையில் மாதாந்திர வளர்ச்சி 4.39% ஆக உள்ளது.

2. ஹூண்டாய் 

ஹூண்டாய் நிறுவனம் இந்தாண்டு மே மாத்தில் மட்டும் 49 ஆயிரத்து 151 கார்களை விற்பனை செய்துள்ளது. அதாவது, கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் 48 ஆயிரத்து 601 கார்கள் விற்பனையான நிலையில், இந்தாண்டு 550 கார்கள் அதிகம் விற்பனையாகி உள்ளது. அதாவது வருடாந்திர வளர்ச்சி 1.13% ஆக உள்ளது. மொத்த விற்பனையில் ஹூண்டாய் கார்களின் பங்கு 14.08% ஆகும். கடந்த ஏப்ரல் மாதம் 50 ஆயிரத்து 201 கார்கள் விற்பனையான நிலையில், இந்த மே மாதம் 1,050 கார்கள் குறைவாக விற்பனையாகி உள்ளது. மாதாந்திர விற்பனை என்பது 2.09% வீழ்ச்சியடைந்துள்ளது.

மேலும் படிக்க | Tata முதல் Mahindra வரை: அதிக பவருடன் வரும் சக்திவாய்ந்த 5 கார்கள்...!

3. டாடா

டாடா நிறுவனம் கடந்த மே மாதத்தில் 46 ஆயிரத்து 697 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் 48 ஆயிரத்து 601 கார்கள் விற்பனையாகின. அதாவது இந்தாண்டு 819 கார்கள் அதிகமாக விற்பனை செய்துள்ளது. அதன் வருடாந்திர வளர்ச்சி 1.79% ஆக உள்ளது. மே மாதத்தின் மொத்த விற்பனையில் டாடாவின் பங்கு 13.38% ஆகும். கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் 47 ஆயிரத்து 883 கார்கள் விற்பனையானது. அதாவது இந்த மே மாதத்தில் 1,186 கார்கள் குறைவாக விற்பனையாகி உள்ளது. மாதாந்திர விற்பனை என்பது 2.48 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. 

4. மஹிந்திரா 

மஹிந்திரா நிறுவனம் 2024 மே மாத்தில் 43 ஆயிரத்து 218 கார்களை விற்பனை செய்துள்ளது. இதே கடந்த 2023 மே மாத்தில் 32 ஆயிரத்து 886 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. அதன்படி, வருடாந்திர வளர்ச்சி 31.42 ஆகும். அதாவது கடந்தாண்டு மே மாதத்தை ஒப்பிடும்போது 10,332 கார்கள் அதிகமாக விற்பனையாகி உள்ளது. மே மாதத்தின் மொத்த விற்பனையில் மஹிந்திராவின் பங்கு என்பது 12.38% ஆகும். அதேபோல், மஹிந்திரா 2024 ஏப்ரல் மாதத்தில் 41 ஆயிரத்து 8 கார்களை விற்பனை செய்திருந்தது. அதாவது இந்த மே மாதத்தில் ஏப்ரலை விட 2,210 கார்கள் அதிகமாக விற்பனை செய்துள்ளது. இதன் மாதாந்திர விற்பனை 5.39% வளர்ச்சி கண்டுள்ளது. 

5. டோயோட்டா

டோயோட்டா கார் நிறுவனம் 2024 மே மாதத்தில் 23 ஆயிரத்து 959 கார்களை விற்பனை செய்துள்ளது.  கடந்தாண்டு மே மாதம் 20 ஆயிரத்து 410 கார்களை அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. அதன்மூலம், கடந்தாண்டு மே மாதத்தை விட இந்தாண்டு மே மாதம் 3 3 ஆயிரத்து 549 கார்கள் அதிகம் விற்பனையாகி உள்ளது. வருடாந்திர வளர்ச்சி 17.39% ஆகும். மே மாதத்தின் மொத்த விற்பனையில் டோயோட்டாவின் பங்களிப்பு 6.86% ஆகும். இதே போல் கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் டோயோட்டா 18 ஆயிரத்து 700 கார்களை விறபனை செய்துள்ளது. அதன்மூலம் மே மாதம் 5,259 கார்கள் அதிகம் விற்பனையாகி உள்ளது. மாதாந்திர விற்பனை என்பது 28.12% அதிகரித்துள்ளது. 

மேலும் படிக்க | EV கார்களுக்கு ஆப்பு வைக்க வரும் 'இந்த' கார்கள்... காரணம் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News