அசால்டா டாடா எஸ்யூவி கர்வ் கார் வாங்கலாம்... ஆனா உங்க சம்பளம் எவ்வளவு இருக்கனும்? தெரிஞ்சுக்கோங்க!

Affordability Of Tata Curvv EV: டாடாவின் எஸ்.யூ.வி கர்வ் காரை வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் போதுமா? இந்த காரை வாங்குவதற்கு ஒருவர் எவ்வளவு சம்பாதிக்க வேண்டும்? தெரிந்துக் கொள்வோம்....

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 10, 2024, 02:15 PM IST
  • டாடா எஸ்.யூ.வி கர்வ்
  • கார் வாங்க உங்கள் சம்பளம் எவ்வளவு
  • டாடா கார் விலை
அசால்டா டாடா எஸ்யூவி கர்வ் கார் வாங்கலாம்... ஆனா உங்க சம்பளம் எவ்வளவு இருக்கனும்? தெரிஞ்சுக்கோங்க! title=

Tata Curvv EV: இந்திய சந்தையில் மின்சார வாகனங்கள் வாங்குவது தொடர்பான ஆர்வம் அதிகமாகியிருக்கிறது. அதை சமன் செய்யும் வகையில் எல்லா கார் தயாரிப்பு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு, மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. பட்ஜெட் கார்கள் முதல் ஆடம்பர கார்கள் என பல்வேறு விலைகளில் மின்சார கார்கள் அறிமுகமாகிவருகின்றன.

டாடாவின் கர்வ்

டாடா மோட்டர்ஸ் (Tata Motors) தனது புதிய மின்சார SUV Tata Curve EV ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எலக்ட்ரிக் காரின் விலை ரூ.17.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). மொத்தம் ஏழு வகைகளில் வரும் இந்த காரில், 6 ஏர்பேக்குகள் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. இந்த எஸ்யூவியின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 190 மிமீ ஆகும். 5 விதமான வண்ணங்களில் கிடைக்கும் இந்த காரின் வரம்பு  549.43 கிமீ என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். எனவே, இது நீண்ட தூர பயணங்களுகு சிறந்த தேர்வாக அமைகிறது.

டாடாவின் எஸ்.யூ.வி கர்வ் காரை வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டாலும், அதற்கு நம்மால் முடியுமா என்ற பட்ஜெட்டை பார்க்க வேண்டும் தானே? இந்த காரை வாங்குவதற்கு ஒருவர் எவ்வளவு சம்பாதிக்க வேண்டும்? தெரிந்துக் கொள்வோம்.

டாடா கர்வ் EV

இந்த ஆடம்பரமான எஸ்யூவியை வாங்க நினைத்தால், முதலில் நமது வசதி வாய்ப்புகளின் அடிப்படையில் திட்டமிட வேண்டும். இந்த கார் மட்டுமல்ல, எந்த ஒரு கார் வாங்கும் போதும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் உள்ளன, இதில் முன்பணம், EMI மற்றும் கடன் காலம் ஆகியவை அடங்கும். இந்த கணக்கீடுகளை டாடா எஸ்யூவி காரின் விலையின் அடிப்படையில் கணக்கிடுவோம்.

மேலும் படிக்க | சிட்ரோன் சி5 ஏர் கிராஸ் : நல்ல கார் தான், ஆனால் மார்க்கெட்டில் விற்பனை ஆகல - மக்கள் ஆர்வம் காட்டாதது ஏன்?

20% முன்பணம் செலுத்தும் விதி

Tata Curvv EV இன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.17.49 லட்சம். இதற்குப் பிறகு, காப்பீடு, பதிவு மற்றும் பிற கட்டணங்களைச் சேர்த்த பிறகு, காரின் ஆன்-ரோடு விலை ரூ.18.55 லட்சமாக இருக்கும். இந்த விலையில் நீங்கள் 20% முன்பணம் செலுத்த வேண்டும், இது சுமார் ரூ.3.71 லட்சமாக இருக்கும்.

மாதந்திர தவணை

வாகனக் கடன் வாங்கும் போது EMI உங்கள் மாத வருமானத்தில் 10% ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது.  உதாரணமாக, உங்களின் மாத வருமானம் ரூ. 1 லட்சமாக இருந்தால், உங்கள் இஎம்ஐ ரூ.10,000 என்ற வரம்புக்குள் இருக்க வேண்டும்.

கடன் காலம்

கடனின் காலத்தை அதாவது எத்தனை ஆண்டுகளில் கடனை திரும்பச் செலுத்த போகிறீர்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம். கடன் காலம் 4 ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். நீண்ட காலத்திற்கு கடன் வாங்குவது உங்கள் மொத்த வட்டித் தொகையை அதிகரிக்கலாம், இது வாகனத்தின் மொத்த விலையையும் அதிகரிக்கும்.

Tata Curve EV வாங்க எவ்வளவு சம்பளம் தேவை?

Tata Curvv EV வாங்க ரூ.15 லட்சம் கடன் வாங்க திட்டமிடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.  9.5% என்ற வட்டி விகிதத்தில் 4 வருடங்கள் கடன் வாங்கினால், உங்கள் மாதாதிர தவணை (EMI) ரூ.37,685 ஆக இருக்கும். எனவே கார் வாங்குவதற்கான அடிப்படை விதியான, 20/4/10 இன் படி, உங்கள் சம்பளம் சுமார் 3.5 லட்சமாக இருக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் சிரமம் இல்லாமல், கடனையும் கட்டலாம், காரையும் அனுபவிக்கலாம்.

மேலும் படிக்க | 5 ஸ்டார் ரேட்டிங்... பாதுகாப்பில் பட்டையை கிளப்பும் இந்த டாடா கார் - நம்பி வாங்கலாம் போலையே!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News