Amazon ரகசிய வலைத்தளத்தில் பாதி விலைக்கும் குறைவாக ஷாப்பிங் செய்யலாம்: விவரம் இதோ

இங்குள்ள ஒவ்வொரு பொருளின் செயல்பாடு மற்றும் பிற அம்சங்கள் சோதிக்கப்படுகின்றன என்றும், அதன் பிறகே பொருளுக்கு கிரேடிங் அளிக்கப்பட்டு அது விற்கப்படுகிறது என்றும் இந்த ரகசிய வலைத்தளம் பற்றி அமேசான் கூறியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 28, 2021, 02:57 PM IST
  • இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் கிடங்கில் பல பொருட்களை மிக மலிவான விலையில் வாங்கலாம்.
  • அமேசான் வேர் ஹவுசில் 40,000 க்கும் மேற்பட்ட பொருட்கள் கையிருப்பில் உள்ளன.
  • சுமார் 34 பிரிவுகளில் இங்கு பொருட்கள் கிடைக்கும்.
Amazon ரகசிய வலைத்தளத்தில் பாதி விலைக்கும் குறைவாக ஷாப்பிங் செய்யலாம்: விவரம் இதோ title=

Amazon Secret Website: நீங்கள் ஆன்லைன் ஷாப்பிங் செய்பவராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிப்பில், மலிவான ஆன்லைன் ஷாப்பிங்கிற்கான 'ரகசிய வலைத்தளம்' பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளலாம். 

இந்த வலைத்தளங்களில் நீங்கள் பாதிக்கும் குறைவான விலையில் பொருட்களை வாங்கலாம். ஆம்!! இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் கிடங்கு (Amazon Warehouse) பற்றிதான் கூறுகிறோம்.  இங்கே, வாடிக்கையாளர்கள், 7 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருளை வெறும் 2 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கலாம். 

அமேசானின் இரகசிய இணையதளத்தில், நீங்கள் திரும்பப் பெறப்பட்ட பொருட்கள் அல்லது லேசாக சேதமடைந்த பொருட்களை மிகக் குறைந்த விலையில் வாங்க முடியும்.

அமேசான் வேரவுசில் ஷாப்பிங்க் 

மார்ட்டின் லூயிஸின் இணையதளத்தின்படி, அமேசான் (Amazon) வேர் ஹவுஸில் வாடிக்கையாளர்கள் சராசியாக 7-8 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்க முடியும். பெரும்பாலான முக்கிய இணையதளங்களில் 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விலை கொண்ட  பிரஷர் வாஷரை அமேசான் வேர் ஹவுசில் சுமார் 13 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கலாம், 

இதுமட்டுமல்ல, DeLonghi Nescafé Dolce Gusto Piccolo XS Pod Capsule காபி மெஷினின் விலை சுமார் ரூ .2 ஆயிரம் மட்டுமே. மற்ற இணையதளங்களில் இதன் விலை சுமார் 5 முதல் 7 ஆயிரம் ரூபாய் ஆகும்.

Moneysavirngexpert.com படி, ' நான் ஒரு முறை பிரஷர் வாஷர் வாங்க அமேசான் கிடங்கிற்கு சென்றேன். இந்த பொருளின் விலை,  பெரும்பாலான முக்கிய இணையதளங்களில் 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தது. ஆனால் அதே பொருளை அமேசான் வேர் ஹவுசில் சுமார் 13 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினேன். இந்த டீல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது, அதன் பிறகு நான் இங்கிருந்து ஷாப்பிங் செய்ய ஆரம்பித்தேன்.' என ஒரு பயனர் தன் அனுபவத்தை பகிர்ந்துள்ளார், 

ALSO READ: Amazon Great Indian Festival sale அதிரடி தள்ளுபடி, அசத்தும் சலுகைகள்: விவரம் உள்ளே 

வாடிக்கையாளர் சேவை கொள்கை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

இரகசிய வலைத்தளத்தைப் பயன்படுத்துபவர்களும் அமேசானின் அதே வாடிக்கையாளர் சேவையைப் (Customer Service) பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர, வாடிக்கையாளர்கள் அமேசானின் ரிட்டர்ன் பாலிசியின் கீழ் இங்கிருந்து வாங்கிய பொருட்களை திருப்பியும் தரலாம். அதாவது, நீங்கள் இந்த தளம் மூலம் ஆன்லைனில் வாங்கிய (Online Shopping) பொருளில் திருப்தி அடையவில்லை என்றால், அந்த பொருள் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், 30 நாட்களுக்குள் அதைத் திருப்பி, முழுத் தொகையையும் திரும்பப் பெறலாம். 

புவியியல் இருப்பிடத்தின் அடிப்படையில், இங்குள்ள ஒவ்வொரு பொருளின் செயல்பாடு மற்றும் பிற அம்சங்கள் சோதிக்கப்படுகின்றன என்றும், அதன் பிறகே பொருளுக்கு கிரேடிங் அளிக்கப்பட்டு அது விற்கப்படுகிறது என்றும் இந்த ரகசிய வலைத்தளம் பற்றி அமேசான் கூறியுள்ளது.

40,000 க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைக்கின்றன

அறிக்கைகளின்படி, அமேசான் வேர் ஹவுசில் 40,000 க்கும் மேற்பட்ட பொருட்கள் கையிருப்பில் உள்ளன. அவற்றை வாடிக்கையாளர்கள் குறைந்த விலையில் வாங்கலாம். வாடிக்கையாளர்கள் இங்கு சுமார் 34 பிரிவுகளைக் காணலாம். இவற்றில் 'கணினிகள் மற்றும் பாகங்கள்', 'வீடு மற்றும் சமையலறை பொருட்கள்', 'பொம்மைகள்', 'வீடியோ கேம்கள்', 'மின்னணுவியல் மற்றும் புகைப்படங்கள்' மற்றும் பல பிரிவுகள் அடங்கும். அதாவது, இங்கிருந்து இந்த பிரிவுகளில் உங்களுக்கு பிடித்த பொருட்களை மலிவாக வாங்க முடியும்.

ALSO READ: அடேங்கப்பா..! இங்க ரூ.1000 அங்க ரூ.41000! மாஸ் தான்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News