ரூ 197 ரீசார்ஜ்..84 நாட்கள் வேலிடிட்டி..அள்ளிக்கொடுக்கும் பிஎஸ்என்எல்

பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தற்போது சிறந்த திட்டத்தை அளித்து வருகின்றது. அந்த வகையில் தற்போது ரூபாய் 197க்கு பிஎஸ்என்எல் ரீசார்ஜ் செய்தால் கூடுதல் நன்மைகள் நீங்கள் பெறலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 3, 2023, 11:14 AM IST
  • BSNL ரூ.197 ரீசார்ஜ் திட்டம்.
  • 84 நாள்கள் இந்த திட்டம் செல்லுப்படியாகும்.
  • 2ஜிபி டேட்டா வரம்பு கிடைக்கிறது.
ரூ 197 ரீசார்ஜ்..84 நாட்கள் வேலிடிட்டி..அள்ளிக்கொடுக்கும் பிஎஸ்என்எல் title=

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) தனது வாடிக்கையாளர்களுக்காக இந்தியாவில் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அவ்வப்போது வழங்கி வருகின்றது.  அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக மக்களிற்குத் தேவையான ரீசார்ஜ் திட்டங்களை மிகவும் குறைந்த விலையில் வழங்கி வருகின்றது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். அந்தவகையில் தற்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.197 திட்டத்தை பற்றி இன்று நாம் காண உள்ளோம். இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால் இதன் வேலிடிட்டி காலம் 84 நாட்கள் ஆகும்.

பிஎஸ்என்எல் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) தமிழக வட்டார வாடிக்கையாளர்களுக்கு இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூபாய் 197 ஆக இருக்கும். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள் 18 நாட்களுக்கு கிடைக்கும். ஆனால் இந்த ரூ.197 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில் 18 நாட்களுக்கு பிறகு நீங்கள் அழைப்புகளைச் செய்ய விரும்பினால், வேறு ஒரு திட்டத்தில் டாப்-அப் செய்ய வேண்டும்.

மேலும் படிக்க | ரூ.8000-க்கும் குறைவான விலையில் புதிய சாம்சங்க் மொபைல்!

எனவே இதன் மூலம் உள்வரும் அழைப்புகள் 84 நாட்களுக்கு கிடைக்கும். இது தவிர, 18 நாட்களுக்கு தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படும். இதனுடன், ZING செயலிக்கான அணுகலும் வழங்கப்படும். எனவே கம்மி விலையில் அதிக நாட்கள் வேலிடிட்டி மட்டும் தேடும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

எப்படி ரீசார்ஜ் செய்வது
பிஎஸ்என்எல் இன் இந்த ரூ 666 திட்டத்தை நீங்கள் https://www.bsnl.co.in/ இல் பெற முடியும். மேலும் இந்த பிளானில் ரீசார்ஜ் செய்ய விரும்பும் பயனர்கள் Google Pay, PhonePe, paytm உள்ளிட்ட மூன்றாம் தரப்பு மொபைல் ரீசார்ஜ் தளங்களில் ரீசார்ஜ் செய்யலாம்.

இதற்கிடையில் ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை விட போட்டிப்போட்டுக் கொண்டு BSNL குறைந்த விலை திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது என்பது குறிபிடத்தக்கது.

மேலும் படிக்க | படுக்கை அறையில் அது மட்டும் வேண்டாம் - வல்லுநர்கள் எச்சரிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News