Jio-Airtel -க்கு தலைவலியை கொடுத்திருக்கும் BSNL -ன் புதிய 2ஜிபி திட்டம்

பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியிருக்கும் 2 ஜிபி திட்டம் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனத்துக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 02:31 PM IST
  • புதிய ரீச்சார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது பிஎஸ்என்எல்
  • 110 நாட்கள் வேலிடிட்டியில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா
  • ரூ.666 ரூபாய் மட்டுமே - ஏர்டெல், ஜியோ-வைவிட வேலிடிட்டி அதிகம்
Jio-Airtel -க்கு தலைவலியை கொடுத்திருக்கும் BSNL -ன் புதிய 2ஜிபி திட்டம்  title=

பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல், ஏர்டெல் மற்றும் ஜியோ, வோடாஃபோன் ஐடியா நிறுவனங்களுக்கு இணையாக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது. தனியார் நிறுவனங்கள் ரீச்சார்ஜ் திட்டங்களின் விலைகளை உயர்த்தியபோதும், குறைவான விலையில் ஏர்டெல், ஜியோ நிறுவனங்களுக்கு இணையான ப்ரீப்பெய்ட் திட்டங்களை கொடுக்கிறது பிஎஸ்என்எல். இப்போது பிஎஸ்என்எல் புதியதாக 2 ஜிபி திட்டத்தை அறிமுகப்படுத்தி அந்த நிறுவனங்களுக்கு புதிய தலைவலியை உருவாக்கியுள்ளது. 

மேலும் படிக்க | Airtel Down: ஏர்டெல் சேவைகளில் முடக்கம், இணைய வசதி கிடைக்காமல் தவிக்கும் மக்கள்

BSNL-ன் ரூ.666 திட்டம்

BSNL -ன் ரூ.666 திட்டம் 110 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இது வாடிக்கையாள்களுககு ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் மொத்தம் 220 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. கூடுதலாக, இந்த திட்டத்தில் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் இலவச அழைப்புகளை மேற்கொள்ளலாம். எஸ்எம்எஸ் தேவைப்பட்டால், தினமும் 100 எஸ்எம்எஸ் அனுப்ப முடியும். கூடுதலாக Zing Music சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.

ஜியோ, ஏர்டெல் மற்றும் VI விட ஏன் சிறந்தது? 

பிஎஸ்என்எல் செல்ஃப் கேர் ஆப் மற்றும் பிஎஸ்என்எல் ரீசார்ஜ் போர்ட்டல் மூலம் ரூ.666 புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை வாடிக்கையாளர்கள் தங்கள் பிஎஸ்என்எல் திட்டத்திற்கு ரீச்சார்ஜ் செய்து கொள்ள முடியும். ஜியோவில் இருக்கும் 666 ரூபாய் திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவை மட்டுமே கொடுக்கிறது. ஏர்டெல்லின் ரூ.666 திட்டமானது 77 நாட்கள் வேலிடிட்டியில் 1.5 ஜிபி டேட்டாவை நாளொன்றுக்கு கொடுக்கிறது. Vi -ன் ரூ.666 திட்டமும் 77 நாட்கள் வேலிடிட்டியில் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டங்களுடன் ஒப்பிடும்போது, கூடுதல் வேலிடிட்டி கொண்ட பி.எஸ்.என்.எல் திட்டம் சிறந்ததாக இருக்கிறது.

மேலும் படிக்க | நோக்கியாவின் புதிய மொபைல் - 18 நாட்கள் நீடிக்கும் சார்ஜ்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News