ஒரே ரீசார்ஜ் 600 நாட்கள் வேலிடிட்டி BSNL-ன் அட்டகாசமான ப்ரீபெய்ட் சலுகை..!

BSNL நிறுவனம் 600 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புதிய 2,399 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்கள்...!

Last Updated : Jul 3, 2020, 05:28 PM IST
ஒரே ரீசார்ஜ் 600 நாட்கள் வேலிடிட்டி BSNL-ன் அட்டகாசமான ப்ரீபெய்ட் சலுகை..! title=

BSNL நிறுவனம் 600 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புதிய 2,399 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்கள்...!

புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை BSNL நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த ரீசார்ஜ் திட்டம் சுமார் 600 நாட்கள் செல்லுபடியாகும். ரூ.149 மற்றும் ரூ.725 விலையில் வரும் ப்ரீபெய்ட் திட்டங்களை BSNL திரும்பப் பெற்றுள்ளது இது சென்னை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். இருப்பினும், இதை தவிர, ப்ரீபெய்ட் அதாவது BSNL-லில் இருந்து ரூ.96 விலையில் வரும் VASANTHAM GOLD PV 96  திட்டத்தையும் நிறுத்தியுள்ளது. இது தவிர, BSNL நிறுவனத்திடமிருந்து ரூ .74 மற்றும் ரூ .75 விலையில் வரும் ப்ரீபெய்ட் திட்டங்களின் செல்லுபடியும் மாற்றப்பட்டுள்ளது.

BSNL சென்னையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கபட்டுள்ளது. அதில், ரூ .149 மற்றும் ரூ .725 விலையுள்ள ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் இப்போது நிறுத்தப்பட்டுள்ளதையும் அதில் குறிப்பிட்டுள்ளது. இது தவிர, டெலிகாம் கம்பெனி BSNL-ல் இருந்து ரூ .2,399 விலையில் வரும் இந்த திட்டம் சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டாரங்களில் தொடங்கப்பட்டுள்ளது என்பது மற்றொரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது. இது தவிர, மற்ற அனைத்து வட்டாரங்களிலும் இதே திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

READ | Zoom, Google Meet-க்கு போட்டியாக களமிறங்கும் 'JioMeet'.... சிறப்பு அம்சம் என்ன?

புதிய 2,399 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டம் பற்றி முழுமையான தகவல்.... புதிய ரூ.2,399 BSNL ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் தினமும் FUP 250 நிமிட குரல் அழைப்புகள் மற்றும் 100 இலவச SMS-களையும் வழங்குகிறது. இதன் வேலிடிட்டி 600 நாட்கள் ஆகும். இந்த  ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் டேட்டா தரவு இல்லை. 

Trending News