நாடு முழுவதும் அனைத்து முக்கிய தொலைத் தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, வி மற்றும் பிஎஸ்என்எல் ஆகியவை அன்லிமிட்டட் டேட்டா மற்றும் வொய்ஸ் சலுகைகளுடன் பல ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகின்றன.
அந்தவகையில் அரசுக்கு சொந்தமான டெல்கோ பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) தற்போது சராசரி மொத்த வருவாயை (AGR) அதிகரிக்க அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்களில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டண விலையை மேலும் அதிகரிக்கலாம் என்று அறிக்கைகள் ஊகிக்கின்றன. பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தை பொறுத்தவரை ரூ .49, ரூ .75, ரூ .94 மற்றும் ரூ .106, ரூ .107, ரூ .197 மற்றும் ரூ .397 விலை கொண்ட சிறப்பு கட்டண வவுச்சர்களின் வேலிடிட்டியை குறைத்துள்ளது.
ALSO READ | அரண்டுபோன Airtel, Jio, Vi; BSNL புதிய அசத்தல் திட்டம் அறிமுகம்
இந்த திருத்தங்கள் ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் கேரள தொலைத்தொடர்பபில் அமலில் இருக்கிறது. முதலில் ரூ .49 விலையில் உள்ள நுழைவு நிலை சிறப்பு கட்டண வவுச்சர் 28 நாட்கள் வேலிடிட்டியை இப்போது 24 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 2 ஜிபி இலவச டேட்டா மற்றும் மொத்தம் 100 இலவச எஸ்எம்எஸ் ஆகியவற்றை டெல்கோ வழங்குகிறது.
ரூ .75 ப்ரீபெய்ட் திட்டத்தின் கட்டண வவுச்சர் 60 நாட்கள் வேலிடிட்டியை இப்போது 50 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த பேக் மூலம் எந்த நெட்வொர்க்கிற்கும் 100 நிமிட இலவச வாய்ஸ் கால்ஸ், 2 ஜிபி இலவச டேட்டா பெறலாம். அதேபோல் ரூ 94 STV ப்ரீபெய்ட் திட்டத்தின் கட்டண வவுச்சர் 90 நாட்கள் வேலிடிட்டியை இப்போது 75 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
ரூ.106 மற்றும் ரூ.107 விலை கொண்ட திட்டங்களில் 100 நாட்களாக இருந்த வேலிடிட்டி தற்போது 84 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு திட்ட வவுச்சர்களும் எந்த ஒரு நெட்வொர்க்கிற்கும் 100 நிமிட இலவச வாய்ஸ் கால்கள் மற்றும் 3 ஜிபி இலவச டேட்டாவை வழங்குகிறது. ரூ.197 ப்ரீபெய்ட் திட்டத்தில் 180 நாட்களாக இருந்த வாலிடிட்டி தற்போது 150 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் எந்த நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் ஜிங் மியூசிக் பயன்பாட்டிற்கான சந்தாவை வழங்குகிறது.
பிஎஸ்என்எல்லின் ரூ.397 ப்ரீபெய்ட் திட்டம் 365 நாட்கள் வாலிடிட்டி கொண்ட ஒரு வருடாந்திர திட்டமாகும். இருப்பினும், இது இப்போது 300 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் எந்த நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்கும்.
ALSO READ | BSNL அட்டகாச ரீசார்ஜ் திட்டம்: ஜியோ, ஏர்டெல்லுக்கு கடுமையான போட்டி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR