BSNL 4ஜி வவுச்சர்...ஜியோ-ஏர்டெல்லுக்கு ஆப்பு..100 ரூபாய்க்கு இத்தனை நன்மைகளா

4ஜி டேட்டாவுடன் வரும் பிஎஸ்என்எல்லின் டேட்டா வவுச்சர்களைப் பற்றி இன்று நாம் காண உள்ளோம். உங்களிடம் 4ஜி இல்லையென்றால், இந்தத் தரவு 3ஜி அல்லது 2ஜியாக மாற்றப்படும். இந்த திட்டங்களை பற்றி தெரிந்து கொள்வோம்...

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 24, 2023, 11:56 AM IST
  • பிஎஸ்என்எல்லின் ரூ.16 திட்டம்
  • 100 ரூபாய்க்கும் குறைவான விலை
  • பிஎஸ்என்எல் தனது 4G சேவையை தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் தொடங்கியுள்ளது
BSNL  4ஜி வவுச்சர்...ஜியோ-ஏர்டெல்லுக்கு ஆப்பு..100 ரூபாய்க்கு இத்தனை நன்மைகளா title=

பிஎஸ்என்எல் ரீசார்ஜ் பிளான்: பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) 100 ரூபாய்க்கும் குறைவான விலையில் 4 டேட்டா வவுச்சர்களைக் கொண்டு வந்துள்ளது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது கட்டணத் திட்டங்களை அதிகரித்து வரும் நிலையில், பிஎஸ்என்எல்-ன் இத்தகைய திட்டங்கள் உங்களுக்கு சற்று நிம்மதியைத் தரும். பிஎஸ்என்எல் தனது 4G சேவையை தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் தொடங்கியுள்ளது. எனவே 4ஜி டேட்டாவுடன் வரும் பிஎஸ்என்எல்லின் டேட்டா வவுச்சர்களைப் பற்றி இன்று நாம் காண உள்ளோம். மேஉமி உங்களிடம் 4ஜி இல்லையென்றால், இந்தத் தரவு 3ஜி அல்லது 2ஜியாக மாற்றப்படும். வாருங்கள் இந்த திட்டத்தை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்...

பிஎஸ்என்எல்லின் ரூ.16 திட்டம்
பிஎஸ்என்எல் இன் முதல் திட்டம் 16 ரூபாய் ஆகும். இதன் வேலிடிட்டி 1 நாள் மற்றும் 2ஜிபி டேட்டா இதில் கிடைக்கும்.

மேலும் படிக்க | Best 7 seater car: 5.25 லட்ச ரூபாயில் 7 சீட்டர் கார்! அதிரடியாய் விலையை நிர்ணயித்த மாருதி

பிஎஸ்என்எல்லின் ரூ.94 திட்டம்
பிஎஸ்என்எல் இன் இந்த திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டத்தில் டேட்டா மட்டுமின்றி, 200 நிமிட வாய்ஸ் காலிங் வசதியும் கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் 3ஜிபி டேட்டாவும் உங்களுக்கு கிடைக்கும்.

மேலும் படிக்க | மோசமான ஓட்டுநர்கள் தரவரிசை... இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா - ஜப்பான் தான் பெஸ்ட்!

பிஎஸ்என்எல்லின் ரூ.97 திட்டம்
பிஎஸ்என்எல் இன் இந்த திட்டத்தில் 15 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு மற்றும் தினசரி 2 ஜிபி டேட்டா கிடைக்கும்.

பிஎஸ்என்எல்லின் ரூ.98 திட்டம்
இந்த திட்டத்தில் 22 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது, இதில் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும். ஆனால் இதில் வாய்ஸ் கால் வசதி கிடைக்காது.

மேலும் படிக்க | சாட்ஜிபிடி -ஐ வாட்ஸ்அப் உடன் இணைப்பது எப்படி? இதோ ஈஸி வழி...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News