சாம்சங் பிரியர்களுக்கு கிடைத்தது ஜாக்பாட்... மலிவு விலையில் M சீரிஸ் மொபைல்கள்!

Samsung Bonanza Weekend Sale: அமேசானில் தற்போது நடைபெற்று வரும் பிரத்யேக விற்பனையில் சாம்சங் நிறுவனத்தின் M சீரிஸ் மொபைல்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Dec 25, 2023, 11:39 AM IST
  • கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை முன்னிட்டு இந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது.
  • இதில் அமேசான் கூப்பன் மூலமும் தள்ளுபடி இருக்கிறது.
  • சாம்சங் மொபைலகள் இந்தியாவில் அதிக விற்கப்படும் ஸ்மார்ட்போன்களாகும்.
சாம்சங் பிரியர்களுக்கு கிடைத்தது ஜாக்பாட்... மலிவு விலையில் M சீரிஸ் மொபைல்கள்! title=

Samsung Bonanza Weekend Sale on Amazon: உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை விமர்சனையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்னும், இன்னும் சில தினங்களில் புத்தாண்டு பிறக்க இருக்கிறது. அடுத்த சில நாள்களில் பொங்கல் பண்டிகையும் தமிழ்நாட்டில் கொண்டாடப்பட உள்ளது. பல மாநிலங்களில் அறுவடை பண்டிகைகளும் அடுத்த மாதத்தில் கொண்டாடப்பட இருக்கிறது. 

இந்த அடுத்தடுத்த பண்டிகை கொண்டாட்ட காலங்களில் நீங்கள் புதிய மொபைல் வாங்க வேண்டும் என திட்டமிட்டிருந்தால், இதுதான் உங்களுக்கான சிறந்த தருணம் ஆகும். அந்த வகையில், அமேசான் விற்பனை (Amazon Sale) உங்களுக்காக சிறந்த சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை கொண்டு வந்துள்ளது எனலாம். 

இந்த நாட்களில் Samsung Bonanza Weekend Sale அமேசானில் நடந்து வருகிறது. விற்பனையில் சாம்சங்கின் M சீரிஸ் ஸ்மார்ட்போன்களை நீங்கள் மலிவாக வாங்கலாம். இந்த அமேசான் விற்பனையில் கிடைக்கும் சில அற்புதமான சலுகைகள் மற்றும் டீல்கள் பற்றிய விவரங்களை இங்கே பார்க்கவும். 

மேலும் படிக்க | ஐபோன் 15 மொபைலில் இல்லாதது இந்த மொபைலில் இருக்குது... தெறிக்கும் புது அப்டேட்!

Samsung Galaxy M13

இந்த மொபைலில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பு மாறுபாட்டை அமேசானில் இருந்து 8 ஆயிரத்து 199 ரூபாய்க்கு வாங்கலாம். இந்த மொபைலில் 6.6 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. இது தவிர, இந்த போனில் சாம்சங் Exynos 850 பிராஸஸர் பொருத்தப்பட்டுள்ளது. புகைப்படம் எடுப்பதற்கு, போனில் 50MP + 5MP + 2MP பின் கேமரா, 8MP செல்ஃபி கேமரா உள்ளது. இதில் 6000mAh பேட்டரியும் உள்ளது.

Samsung Galaxy M34 5G

இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி RAM மற்றும் 128ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ் உள்ளது. இதனை 16 ஆயிரத்து 499 ரூபாய்க்கு தற்போது வாங்கலாம். இது தவிர, அமேசானின் 1500 ரூபாய் தள்ளுபடி கூப்பனும் உள்ளது. இந்த மொபைலில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. இந்த போனில் Exynos 1280 பிராஸஸர் பொருத்தப்பட்டுள்ளது. புகைப்படம் எடுப்பதற்கு, தொலைபேசியில் 50MP முதன்மை கேமரா உள்ளது. இதில் 6000mAh பேட்டரி உள்ளது.

Samsung Galaxy M04

இந்த மொபைலில் 4ஜிபி RAM மற்றும் 64ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ் உள்ளது. அமேசான் தளத்தில் 6 ஆயிரத்து 799 ரூபாய்க்கு வாங்கலாம். இந்த ஃபோன் 6.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்டது. இந்த மொபைலில் MediaTek Helio P35 பிராஸஸர் பொருத்தப்பட்டுள்ளது. புகைப்படம் எடுப்பதற்கு, போனில் 13MP + 2MP பின்பக்க கேமரா உள்ளது. அதில் 5000mAh பேட்டரியும் உள்ளது.

Samsung Galaxy M14 5G

இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி RAM மற்றும் 128ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ் உடன் 12 ஆயிரத்து 990  ரூபாய்க்கு வாங்கலாம். இந்த போனில் 6.6 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. இந்த போனில் Exynos 1330 பிராஸஸர் பொருத்தப்பட்டுள்ளது. புகைப்படம் எடுப்பதற்கு, போனில் 50MP + 2MP + 2MP பின்பக்க கேமரா, 13MP செல்ஃபி கேமரா உள்ளது. இதில் 6000mAh பேட்டரி உள்ளது.

மேலும் படிக்க | இந்தாண்டில் ஆதிக்கம் செலுத்திய மொபைல்கள்... அதுவும் ரூ.15 ஆயிரம் குறைவான விலையில்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News