ஜியோ ரீசார்ஜ் பிளானில் டபுள் ஜாக்பாட்... இலவசமாக கிடைக்கும் 2 ஓடிடி தளங்கள்!

Jio New Prepaid Plan: ஜியோ நிறுவனம் இரண்டு ஓடிடி தளங்களை இலவசமாக வழங்கும் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை தற்போது பல பலன்களுடன் அறிமுகப்படுத்தி உள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Dec 7, 2023, 08:54 AM IST
  • வரம்பற்ற 5ஜி டேட்டா வழங்கப்படுகிறது.
  • வரம்பற்ற காலிங் வழங்கப்படுகிறது.
  • இதில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
ஜியோ ரீசார்ஜ் பிளானில் டபுள் ஜாக்பாட்... இலவசமாக கிடைக்கும் 2 ஓடிடி தளங்கள்! title=

Jio New Prepaid Plan: தொலைத்தொடர்பு நிறுவனங்களில் தற்போது ஜியோ உச்சியில் இருக்கிறது எனலாம். ஏர்டெல், வோடபோன் ஆகியவை ஜியோவுடன் போட்டிப்போட்டு பல சலுகைகளுடன் ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து வருகின்றன. பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தற்போது 4ஜி சேவையை பரவலாக்கியதை தொடர்ந்து, 5ஜி அலைக்கற்றையை நோக்கிய பயணத்தில் உள்ளது. 

அந்த வகையில், ஜியோ நிறுவனம் போட்டியாளர்களை விட அதிக பயனர்களை ஈர்க்கும் வகையில் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய ரீசார்ஜ் திட்டத்தில் வரம்பற்ற 5ஜி டேட்டா வழங்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும், இலவச அழைப்பு வசதி வழங்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல், இரண்டு பிரபலமான ஓடிடி தளத்தின் சந்தாவும் இந்த ரீசார்ஜ் திட்டத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. 

கடந்த அக்டோபர் மாதம், ஜியோ நிறுவனம் 3 ஆயிரத்து 227 ரூபாயில் ஓர் ஆண்டுக்கான ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில், அமேசான் பிரைம் தளத்தின் இலவச அணுகலும் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க | மழை காலத்தில் கார் ஓட்டும்போது ரொம்ப ரொம்ப கவனம்... கவனிக்க வேண்டிய 5 டிப்ஸ்!

புதிய திட்டம் என்ன?

ஜியோவின் இந்த புதிய ரீசார்ஜ் திட்டம் 909 ரூபாயில் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். அதாவது மொத்தம் 168 ஜிபி டேட்டா உடன் கிடைக்கும். மேலும், இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு வழங்கப்படுகிறது, இதனால் பயனர்கள் எந்த நெட்வொர்க் உடனும் எவ்வளவு மணிநேரம் வேண்டுமானாலும் பேச முடியும்.

இத்திட்டத்தின் மற்ற பலன்கள் குறித்து பார்த்தால், ஜியோ இந்த திட்டத்துடன் ஜியோ டிவி, சினிமா, கிளவுட் மற்றும் Sony Liv மற்றும் Zee5 ஆகிய ஓடிடி தளத்தின் இலவச சந்தாவை வழங்குகிறது. இது தவிர, வரம்பற்ற 5ஜி டேட்டாவும் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

எப்படி ரீசார்ஜ் செய்வது?

ஜியோவின் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை நீங்கள் ரீசார்ஜ் செய்ய விரும்பினால், MyJio செயலியின் முகப்புத் பக்கத்தில் உள்ள ரீசார்ஜ் ஆப்ஷனை கிளிக் செய்யவும். இப்போது கீழே ஸ்க்ரோல் செய்து 2ஜிபி தினசரி டேட்டா பிரிவை தேர்வு செய்யவும். அதில், நீங்கள் 909 ரூபாய் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தைக் காண்பீர்கள், அதைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.

பிற ரீசார்ஜ் திட்டங்கள்

இறுதியாக, 3 ஆயிரத்து 227 ரூபாய்க்கான ஆண்டு திட்டம் தவிர, ஜியோ நிறுவனம் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை முன்னிட்டு 6 புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ரீசார்ஜ் திட்டங்களின் விலை 328 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இவற்றிலும் வரம்பற்ற இலவச அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மேலும், டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடியின் சந்தா இலவசமாக கிடைக்கிறது.

முன்னதாக செப்டம்பரில், ஜியோ நிறுவனம் இந்தியாவில் Jio AirFiber அறிமுகப்படுத்தியது. இந்த சேவை தற்போது இந்தியாவின் பல நகரங்களில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 599 ரூபாய் முதல் தொடங்குகிறது. இந்த சேவையின் கீழ், டேட்டா 30Mbps வேகத்தில் கிடைக்கும். இதில் வரம்பற்ற அழைப்பு ஆதரவு வழங்கப்படுகிறது. மேலும், 14 ஓடிடி தளங்களுக்கு சந்தாவுடன் டிஜிட்டல் சேனல்கள் கிடைக்கும்.

மேலும் படிக்க | சூப்பரான ஸ்மார்ட்போன்களை இந்த டிசம்பரில் வாங்கலாம்... டாப் 4 மாடல்கள் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News