ஸ்மார்ட்போன் சார்ஜ் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது என்றால், முன்னச்சரிக்கையாக நீங்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இணைய பாதுகாப்பு
சார்ஜ் சீக்கிரம் தீர்ந்தால், ஸ்மார்ட்போனில் இணைய பாதுகாப்பை மேம்படுத்த வேண்டியது அவசியம். வைரஸ், ஹேக்கர்கள் ஊடுருவல் இருந்தால் பேட்டரி சீக்கிரம் காலியாகிவிடும். அதற்கேற்ற தரமான சாப்ட்வேர்களையும் நீங்கள் கட்டாயம் இன்ஸ்டால் செய்து இணைய திருட்டில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | இண்டர்நெட் இல்லாமல் UPI Payment செய்யலாம்! ஈஸியான ஐடியா இதோ
பழைய சார்ஜர்
பழைய சார்ஜரை தூக்கி போட்டுவிட்டு 20-வாட் பவர் அடாப்டர் கொண்ட சார்ஜரை பயன்படுத்துங்கள். ஐபோன் 8 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு உங்களிடம் இருந்தால், 30 நிமிடங்களில் உங்கள் மொபைலை டெட் பேக்கிலிருந்து 50% பேட்டரி வரை வேகமாக சார்ஜ் செய்யலாம். உங்களுக்கு ஒரு மணிநேரம் இருந்தால், அதை முழுமையாக சார்ஜ் செய்யலாம். இந்த சார்ஜர்களில் வெறும் 10 நிமிடங்களில் பேட்டரியை இரட்டை இலக்கங்களால் அதிகரிக்கலாம். எனவே உங்களுக்கு நேரம் குறைவாக இருந்தால், எப்போதும் ஃபாஸ்ட் சார்ஜர் விருப்பத்திற்குச் செல்லவும்.
வயர்லெஸ் சார்ஜர்
உங்கள் ஐபோனை சார்ஜ் செய்வதற்கான இரண்டாவது வேகமான வழி Apple's MagSafe சார்ஜர் மற்றும் 20-வாட் பவர் அடாப்டர் ஆகும். ஆனால் இது வேலை செய்ய, iPhone 12 அல்லது iPhone 13 ஐ வைத்திருக்க வேண்டும். உங்கள் ஐபோன் செயலிழந்துவிட்டால், 30 நிமிடங்களில் வயர்லெஸ் சார்ஜிங்கில் 30% பேட்டரியைப் பெறுவீர்கள்.
கணினியைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள்
பெரும்பாலான நேரத்தை கணிணி முன் பயன்படுத்தும் நீங்கள், கணிணி வழியாகவே சார்ஜ் செய்யவும் முயற்சிப்பீர்கள். அது மிகவும் தறவான அணுகு முறை. எப்போதும் உரிய சார்ஜர் மூலம் சார்ஜிங் செய்வதை மட்டுமே நீங்கள் வாடிக்கையாக வைத்திருக்க வேண்டும். அதேபோல் சார்ஜ் ஆகும்போது மொபைலை பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள்.
அடிப்படை விஷயங்கள்
சார்ஜ் வேகமாக ஆக வேண்டும் என்றால் மொபைலின் பிரைட்னஸை குறைத்துவிடுங்கள். மொபைலை ஏரோபிளேன் மோடில் வைக்கலாம். பேட்டரி ஆப்டிமைஸை ஆன் செய்து வையுங்கள்.
மேலும் படிக்க | எச்சரிக்கை: உடனடியாக ஆதாரில் இந்த அப்டேட்டை பண்ணிடுங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEata