ரூ. 5000 கீழ் கிடைக்கும் சிறந்த Bluetooth ஸ்பீக்கர்கள்!

Xiaomi, Lenovo, Flipkart போன்ற பல நிறுவனங்கள் குறைந்த விலையில், மக்களை கவரும் நோக்கில் ஸ்பீக்கர்களை அறிமுகப்படுத்த தொடங்கி இருக்கிறது.    

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 23, 2022, 04:07 PM IST
  • ற்போது பலரும் Bluetooth ஸ்பீக்கர்களை உபயோகிக்க ஆரம்பித்துவிட்டனர்.
  • Xiaomi, Lenovo, Flipkart போன்ற நிறுவனங்கள் குறைந்த விலையில், ஸ்பீக்கர்களை அறிமுகப்படுத்த தொடங்கி இருக்கிறது.
ரூ. 5000 கீழ் கிடைக்கும் சிறந்த Bluetooth ஸ்பீக்கர்கள்!  title=

பலரும் தங்களது ஸ்மார்ட் ஹோம்களை, ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் கொண்டு அலங்கரிக்க தொடங்கிவிட்டனர். தற்போது பலரும் இதனை உபயோகிக்க ஆரம்பித்துவிட்டனர்.  Google மற்றும் Amazon ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் சந்தையில் பெரும்பான்மையான ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன, அந்த வகையில் தற்போது மலிவான அதே சமயம் தரமான ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் சந்தையில் களமிறங்கிவிட்டன.   Xiaomi, Lenovo, Flipkart போன்ற பல நிறுவனங்கள் குறைந்த விலையில், மக்களை கவரும் நோக்கில் ஸ்பீக்கர்களை அறிமுகப்படுத்த தொடங்கி இருக்கிறது.  தற்போது இந்தியாவில் ரூ.5,000க்கு கீழ் உள்ள சில சிறந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் பின்வருமாறு, 

Also Read | 6G-ஐ கொண்டு வருகிறது ஜியோ..! 5G-ஐ விட 100 மடங்கு இன்டர்நெட் வேகம்

1) AMAZON ECHO DOT (4TH GEN)  : 

AMAZON ECHO DOT ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் பயனாளர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை தருகிறது.  Amazon Echo Dot ஸ்மார்ட் ஸ்பீக்கரின் 4வது Generation Amazon-ல் ரூ.3,999 க்கு கிடைக்கிறது. ஸ்மார்ட் ஸ்பீக்கர் அலெக்சா சேவை வசதி கொண்டிருக்கிறது.  மேலும், ஸ்டீரியோ சவுண்ட் வசதியையும் கொண்டுள்ளது. 

Amazon Echo Dot (4th Gen) Review | PCMag

2) GOOGLE NEST MINI : 

GOOGLE NEST MINI என்பது கூகுளின் சிறிய அளவு ஸ்மார்ட் ஸ்பீக்கர் ஆகும், இதன் விலை இந்தியாவில் ரூ.3,499க்கு விற்கப்படுகிறது.  Google Nest Mini ஆனது Flipkart, Reliance Digital, Croma மற்றும் பல சில்லறை விற்பனையாளர்களிடம் கிடைக்கிறது.  இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர் google assistant  உடன் வருகிறது மற்றும் quad-core மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட் ஸ்பீக்கர் 40mm டிரைவருடன் 360 டிகிரி ஆடியோவை வழங்குகிறது. 

next

3) MI SMART SPEAKER : 

Google Assistant  உடன் வரும் சியோமியின் Mi ஸ்மார்ட் ஸ்பீக்கர் Amazon மற்றும் Xiaomi-ன் இணையதளத்தில்  ரூ.3,999க்கு கிடைக்கிறது.  அதன் 63.5 மிமீ சவுண்ட் டிரைவர் மூலம் 12W ஒலியை வழங்குகிறது. 

mi

4) LENOVO SMART CLOCK : 

Google Assistant  உடன் வரும் Lenovo Smart Clock ஸ்மார்ட் ஸ்பீக்கரானது Flipkart-ல் ரூ.2,999க்கு கிடைக்கிறது. ஸ்மார்ட் ஸ்பீக்கர் 4 இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே மற்றும் 2x ரேடியேட்டர்களுடன் 3W ஸ்பீக்கருடன் வருகிறது. ஸ்மார்ட் ஸ்பீக்கர் மீடியாடெக் மூலம் புளூடூத் 5.0 உடன் வருகிறது. 

lenovo

5) MARQ BY FLIPKART SMART HOME SPEAKER : 

MarQ By Flipkart Smart Home ஸ்பீக்கர் ஆனது Flipkart-ன் ஆப்பராகும், இது e-commerce  இணையதளத்தில் ரூ.3,499க்கு விற்கப்படுகிறது.  ஸ்மார்ட் ஸ்பீக்கர் Google Assistant மற்றும் MediaTek உடன் வருகிறது. 

Buy MarQ By Flipkart Smart Home Speaker (with Google Assistant) with Google  Assistant Smart Speaker Online from Flipkart.com

Also Read | பாதி விலைக்கும் குறைவான விலையில் Samsung ஸ்மார்ட் டிவி: Flipkart Sale அதிரடி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News