அலெக்ஸ்சா, வாட்ஸ்அப் பயன்படுத்துவதை தவிர்க்கவும் - மத்திய அரசு எச்சரிக்கை!

மிக முக்கியமான ஆவணங்களை இணையத்தில் பகிர்வது குறித்து சில ஆலோசனைகளை தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 18, 2022, 04:45 PM IST
  • கமர்ஷியல் AES 256-பிட் என்க்ரிப்டட் செய்யப்பட்ட நெட்வொர்க்குகள் மூலம் ஆவணங்களை பகிரவும்.
  • எக்கோ, ஹோம் பாட், கூகுள் ஹோம் போன்றவற்றை அலுவலகத்தில் வைத்துக்கொள்ள முடியாது.
  • ஸ்மார்ட்போன்கள், வாட்ச்கள் போன்றவற்றை ஆஃப் செய்து வைத்திருக்க வேண்டும்
அலெக்ஸ்சா, வாட்ஸ்அப் பயன்படுத்துவதை தவிர்க்கவும் - மத்திய அரசு எச்சரிக்கை! title=

இன்றைய நவீன காலத்தில் பலரும் சாதாரண போட்டோ முதல் முக்கியமான ஆவணங்கள் வரை அனைத்தையும் இணையத்தின் மூலமாகவே பகிர்ந்து வருகின்றனர்.  இந்நிலையில் அரசு மற்றும் அலுவலகம் சம்மந்தப்பட்ட ரகசியமான ஆவணங்கள் அல்லது தகவல்களை இணையத்தில் பகிர்வது தொடர்பாக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அனைத்து அதிகாரிகளுக்கும் ஒரு ஆலோசனையை வழங்கியுள்ளது. 

Ministry of Information and Broadcasting | MyGov.in

மேலும் படிக்க | பிரபலங்கள் பயன்படுத்தும் Dating App! ஒரு லட்சம் பேர் காத்திருப்பு

அதன்படி கமர்ஷியல் AES 256-பிட் என்க்ரிப்டட் செய்யப்பட்ட நெட்வொர்க்குகள் மூலம் முக்கியமான ஆவணங்களை இணையத்தில் பகிருமாறு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கோரியுள்ளது.  இத்தகைய ரகசிய ஆவணங்களைப் பகிர்வதற்காக பலரும் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற மெசேஜிங் செயலிகளையே அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.  ஆனால் இவை துறைசார் பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் மற்றும் தேசிய பாதுகாப்புக் கொள்கை அறிவுறுத்தி இருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவதாக அமைகிறது.

data

மேலும் ரகசியமான தகவல்களை அனுப்ப அரசாங்கத்தின் மின்னஞ்சல் (NIC) அல்லது அரசாங்கத்தின் மெசேஜிங் செயலிகளை பயன்படுத்தி அனுப்பலாம் என்று பரிந்துரைக்கிறது.  ஈ-அலுவலக அமைப்பில் முறையான ஃபயர்வால்கள் மற்றும் ஐபி முகவரிகளை வரிசைப்படுத்த வேண்டும்.  மிக முக்கியமான தகவல்கள்  ஈ-அலுவலக அமைப்பில் லைன் மூடிய நெட்வொர்க் மற்றும் SAG தர என்க்ரிப்ட் செயல்முறையின் மூலம் பகிரப்படும்.  வீடியோக்களாக அனுப்ப அரசங்கத்தின் அனுமதியோடு இயங்கும் சிடிஏசி, சிடிஓடி மற்றும் என்ஐசி போன்றவற்றை பயன்படுத்தலாம்.  இதன் ஐடி மற்றும் பாஸ்வேர்டை அங்கீகரிக்கப்பட்ட நபர்களுடன் மட்டுமே பகிர்ந்துகொள்ள வேண்டும்.

டிஜிட்டல் அசிஸ்டன்ட் சாதனங்களான அமேசானின் எக்கோ, ஆப்பிளின் ஹோம் பாட், கூகுள் ஹோம் போன்றவற்றை அலுவலகத்தில் வைத்துக்கொள்ள முடியாது.  அலெக்சா மற்றும் சிரி போன்றவற்றை ஊழியர்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள், வாட்ச்கள் போன்றவற்றில் ஆஃப் செய்து வைத்திருக்க வேண்டும்.  மேலும் முக்கியமான விஷயங்கள் குறித்து அலுவலகத்தில் கலந்தாலோசிக்கும்போது ஊழியர்கள் ஸ்மார்ட்போன்களை ஆலோசனை நடைபெறும் அறைக்கு வெளியே விட்டுவிட்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க | ஆண்ட்ராய்டு ஆப்களை விண்டோஸில் பயன்படுத்துவது எப்படி?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News