ஆஸ்திரேலியாவில் இனி செய்தி நிறுவனங்களுக்கு Google, Facebook பணம் செலுத்த வேண்டும்

முன்னதாக, உத்தசிக்கப்பட்ட இந்த புதிய சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கூகுள் (Google) நிறுவனம், சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் அந்நாட்டில் வழங்கும் சேவையை நிறுத்தப் போவதாக அச்சுற்றுத்தல் விடுத்தது.

Last Updated : Feb 25, 2021, 05:21 PM IST
  • முன்னதாக, உத்தசிக்கப்பட்ட இந்த புதிய சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது கூகுள் (Google) நிறுவனம்.
  • சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் அந்நாட்டில் வழங்கும் சேவையை நிறுத்தப் போவதாகவும் அச்சுற்றுத்தல் விடுத்தது.
  • ஆனால், ஆஸ்திரேலிய மிரட்டலுக்கு பணியவில்லை.
ஆஸ்திரேலியாவில் இனி செய்தி நிறுவனங்களுக்கு Google, Facebook பணம் செலுத்த வேண்டும் title=

ஆஸ்திரேலிய செய்தி வலைதளங்களின் செய்திகள், அதன் லிங்குகள் ஆகியவற்றை தங்களின் தளங்களில் வெளியிடுவதற்கு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள், செய்தி நிறுவனங்களுக்கு ராயல்டி  செலுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலியா புதிய சட்டத்தை ஆஸ்திரேலியா நிறைவேற்றியுள்ளது. 

முன்னதாக, உத்தசிக்கப்பட்ட இந்த புதிய சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கூகுள் (Google) நிறுவனம், சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் அந்நாட்டில் வழங்கும் சேவையை நிறுத்தப் போவதாக அச்சுற்றுத்தல் விடுத்தது . எனினும் மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என ஆஸ்திரேலிய பிரதமரும் அறிவித்ததை அடுத்து, பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.

இப்போது சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.ஆஸ்திரேலிய செய்தி ஊடகங்களுடன், இது தொடர்பான வர்த்தக ஒப்பந்தங்களை எட்டுவதில் "]கூகிள் மற்றும் பேஸ்புக் காட்டும் ஆர்வத்தை கண்டு மகிழ்ச்சியடைவதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

ALSO READ | Facebook Vs Australia: பிரதமர் மோடியுடன் ஆலோசனை செய்தார் ஆஸ்திரேலிய பிரதமர்

முன்னதாக, ஆஸ்திரேலிய அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த போது, பேஸ்புக் ஆஸ்திரேலியாவில் செய்திகளை தனது பக்கங்களில் வெளியிடுவதை நிறுத்தி விட்டது. புதிய விதிமுறையின் கீழ், தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை ஒரு அரசாங்க நடுவர் நிர்ணயிக்கும் முதல் நாடாக ஆஸ்திரேலியா ஆகும்.

தொழில்நுட்ப நிறுவனமான கூகிள் இப்போது அதன் "ஷோகேஸில்" தோன்றும் செய்தி உள்ளடக்கத்திற்கு பணம் செலுத்த வேண்டியிருக்கும். மேலும் பேஸ்புக் அதன் பகக்த்தில் தோன்றும் "செய்தி" உள்ளடக்கத்திற்கு, சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனங்களுக்கு பணம் செலுத்த வேண்டும்

ஆஸ்திரேலிய நிதி அமைச்சர் ஜோஷ் ஃப்ரைடென்பெர்க் (Josh Frydenberg) மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் பால் பிளெட்சர் (Paul Fletcher) ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர்: "ஆஸ்திரேலியாவில் பொது நலன் சார்ந்த சேவையை வழங்கும் செய்தி ஊடக நிறுவனங்கள்,  வருமானத்தை பெற உதவும் வகையில் அவை உருவாக்கும் உள்ளடக்கத்திற்கு நியாயமான வருமானம் கிடைப்பதை இந்த புதிய சட்டம் உறுதி செய்யும்."

சட்டம் அமல்படுத்தப்பட்ட  ஒரு வருடத்திற்குள் மதிப்பாய்வு செய்யப்படும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகால பொது ஆலோசனையின் பின்னர் உருவாக்கியுள்ள இந்த சட்டம்,  இதேபோன்ற சட்டங்களைத் திட்டமிடும் பிரிட்டன் மற்றும் கனடா போன்ற நாடுகளுக்கு ஊக்கத்தை அளிக்கும் வகையில் உள்ளது.
 

ALSO READ | ஆஸ்திரேலியா Vs Google: செய்தி நிறுவனகளுக்கு ராயல்டி விவகாரம் தீர்வை எட்டியதா?

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News