அணியக்கூடிய சாதனங்களின் சந்தையில் முதலிடம் பிடித்த ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம் அணியக்கூடிய சாதனங்களுக்கான சந்தையில் 2017-ல் முதலிடத்தை, தக்க வைத்து கொண்டிருக்கிறது.!

Last Updated : Nov 17, 2017, 11:55 AM IST
அணியக்கூடிய சாதனங்களின் சந்தையில் முதலிடம் பிடித்த ஆப்பிள் நிறுவனம்   title=

 ஆப்பிள் நிறுவனம் அணியக்கூடிய சாதனங்களுக்கான சந்தையில் 2017-ல் முதலிடத்தை, தக்க வைத்து கொண்டிருக்கிறது. அதனை தொடர்ந்து சீன நிறுவனம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.  இந்த 2017-ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டானது, ஆப்பிள் நிறுவனத்தின் லாபகரமான காலாண்டாகவும் அமைந்ததாக, கனாலிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தை தொடர்ந்து சியோமி நிறுவனம் சுமார் 36லட்சம்  சாதனங்களும் மற்றும் ஃபிட்பிட் நிறுவனம் சுமார் 35 லட்சம் சாதனங்களை விற்பனை செய்து, அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன.  கனாலிஸ் வெளியிட்டுள்ள தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் இந்த மூன்றாவது காலாண்டில் மட்டும் சுமார் எட்டு லட்சம் ஆப்பிள் வாட்ச் சாதனங்களை விற்பனை செய்திருக்கலாம் என தெரிவித்திருந்தது.

எனினும் இந்த ஆண்டின்   நான்காவது காலாண்டில் விற்பனை மேலும் அதிகரிக்கும் என சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ஸ்மார்ட்வாட்ச் சாதனங்களின் விற்பனை அதிகரித்திருந்தாலும், ஒட்டுமொத்த சந்தையில் அணியக்கூடிய சாதனங்களின்   விற்பனை இரண்டு சதவிகித சரிவை சந்தித்துள்ளது.எல்டிஇ வசதி கொண்ட ஆப்பிள் வாட்ச் 3 விற்பனை, அதிகரித்ததின் காரணமாகவே மொத்தம் 39 லட்சம் சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் விற்பனை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. 

முன்னதாகவே சர்வதேச டேட்டா கார்பரேஷன் வெளியிட்ட தகவல்களில் சியோமி நிறுவனம் அதிகளவு ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி இடத்தை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

 

Trending News