அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ஒரு ரூபாய் முன்பதிவு திட்டம்! எதை முன்பதிவு செய்யலாம்?

அமேசான் கிரேட் இந்தியன் விழாவை முன்னிட்டு அக்டோபர் 4 முதல் அக்டோபர் 6 வரை வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த தயாரிப்புகளை 1 ரூபாய்க்கு முன்பதிவு செய்யலாம்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 5, 2023, 12:49 PM IST
  • அமேசான் ஆஃபர்; முன்பதிவு செய்யுங்கள்
  • உங்களிடம் ஒரு ரூபாய் இருந்தால் போதும்
  • ஆபரில் பொருட்களை லாக் செய்யலாம்
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ஒரு ரூபாய் முன்பதிவு திட்டம்! எதை முன்பதிவு செய்யலாம்? title=

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலை ஆன்லைன் ஷாப்பிங் வாடிகையாளர்கள் எப்போதுமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது கவர்ச்சிகரமான சலுகைகள் மற்றும் பலதரப்பட்ட தயாரிப்புகளில் தள்ளுபடிகளுடன் வருகிறது. அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2023 அக்டோபர் 8 முதல் தொடங்குகிறது. இதனையொட்டி அமேசான் இ-காமர்ஸ் நிறுவனமானது ஏற்கனவே பல சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. பண்டிகை விற்பனைக்கு முன்னதாக, அமேசான் ஒரு முன்பதிவு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற தயாரிப்புகளை 1 ரூபாய்க்கு குறைவாக பதிவு செய்து பின்னர் வாங்கலாம். இந்த முன்பதிவு அக்டோபர் 4 முதல் அக்டோபர் 6 வரை செய்யலாம்.

அமேசான் முன்பதிவு திட்டம் எவ்வாறு செயல்படுகிறது?

அமேசான் வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற தயாரிப்புகளை 1 ரூபாய்க்கு குறைந்த விலையில் முன்பதிவு செய்ய வழங்குகிறது. ஸ்மார்ட்போன்களை அக்டோபர் 4 ஆம் தேதி அதிகாலை 12 மணி முதல் அக்டோபர் 6 ஆம் தேதி காலை 10 மணி வரை முன்பதிவு செய்யலாம். மற்ற தயாரிப்புகளை அக்டோபர் 5 மற்றும் அக்டோபர் 6 ஆம் தேதி காலை 6 மணிக்குள் முன்பதிவு செய்யலாம். 

மேலும் படிக்க | Google Pixel 8: இந்த மொபைலுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு... முன்பதிவு தேதி அறிவிப்பு

வாடிக்கையாளர்கள் ஆர்டர்களை ரிடீம் செய்யும் போது வாங்க வேண்டும். 'கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல்' தொடங்குவதற்கு முன், 'ரிடெம்ஷன் விண்டோ'வின் போது, தயாரிப்பு முன்கூட்டியே கிடைப்பதற்கு உத்தரவாதம் அளிக்க, முன்பதிவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று அமேசான் தெரிவித்துள்ளது. மொபைல் ஃபோன்களுக்கான ரெடீம் அக்டோபர் 6 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் நள்ளிரவு வரை இருக்கும். மற்ற தயாரிப்புகளுக்கு இரவு 8 மணி முதல் நள்ளிரவு வரை ரெடீம் அனுமதிக்கப்படும்.

ரிடெம்ப்ஷன்போது கொள்முதலை முடிக்க, வாடிக்கையாளர்கள் கேஷ் ஆன் டெலிவரி அல்லது கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, பேமென்ட் வாலட்கள், நெட்-பேங்கிங் அல்லது ஈ-கிஃப்ட் வவுச்சர்களைத் தேர்வுசெய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். 

அமேசானில் என்ன தயாரிப்புகளை 1 ரூபாய்க்கு முன்பதிவு செய்யலாம்?

கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து தயாரிப்புகளும் உண்மையான விற்பனைக்கு முன்னதாகவே முன்பதிவு செய்யப்படலாம். இருப்பினும், பெரும்பாலான தயாரிப்புகளை 1 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்ய முடியும் என்றாலும், சில தயாரிப்புகளுக்கு தயாரிப்பை முன்பதிவு செய்ய ரூ.99 முன்பணம் செலுத்த வேண்டியிருக்கும். முன்பதிவு திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் பல தயாரிப்புகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

முன்பதிவு செய்த பொருட்களை எப்படி ரத்து செய்வது? 

சில படிகளைப் பின்பற்றி முன் பதிவு செய்த ஆர்டரை ரத்து செய்யலாம்:

1. Amazon.in பயன்பாட்டில் உள்ள தயாரிப்பு விவரம் பக்கத்திற்குச் செல்லவும்.

2. "manage pre-bookings" என்ற இணைப்பின் வழியாக செல்லவும்.

3. 'Cancel Pre-booking' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

4. ரத்துசெய்ததை உறுதிப்படுத்த, "ஆம், முன்பதிவை ரத்துசெய்" என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் முன்பதிவை ரத்துசெய்தால், முன்பதிவுத் தொகை நீங்கள் முதலில் செலுத்திய கணக்கிற்குத் திருப்பித் தரப்படும்.

மேலும் படிக்க | மொபைல் பழசாகிடுச்சா... அக்டோபரில் அம்சமா அறிமுகமாகும் 5 ஸ்மார்ட்போன்கள் - இதை பாருங்க! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News