ரூ. 21,000 அசத்தல் விவோ போனின் விலை வெறும் ரூ. 990: பிளிப்கார்ட் அதிரடி

Vivo Smartphone Discount: ஃபிளிப்கார்ட் ஒரு சிறந்த சலுகையைத் தொடங்கியுள்ளது. இந்த சலுகையின் மூலம் வாடிக்கையாளர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவு சலுகைகளையும் தள்ளுபடிகளையும் பெறலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 31, 2022, 01:03 PM IST
  • ஃபிளிப்கார்ட் ஒரு சிறந்த சலுகையைத் தொடங்கியுள்ளது.
  • சலுகை என்ன, தள்ளுபடி எவ்வளவு?
  • பரிமாற்றச் சலுகையில் கிடைக்கும் நன்மை என்ன?
ரூ. 21,000 அசத்தல் விவோ போனின் விலை வெறும் ரூ. 990: பிளிப்கார்ட் அதிரடி title=

விவோ ஸ்மார்ட்போன் பம்பர் தள்ளுபடி: ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி!! வாடிக்கையாளர்கள் Vivo T1 5G ஸ்மார்ட்போனை மிகப்பெரும் தள்ளுபடியுடன் வாங்க ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு வந்துள்ளது. தீபாவளிக்குப் பிறகும் பண்டிகை காலத்து சலுகைகள் போன்ற சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெறலாம். தீபாவளிக்குப் பிறகும், இந்த ஸ்மார்ட்போனில் இவ்வளவு தள்ளுபடி வழங்கப்படுவது வாடிக்கையாளர்களுக்கு ஆச்சரியத்தையும் அளிக்கலாம். ஃபிளிப்கார்ட் இந்த சலுகையைத் தொடங்கியுள்ளது. இந்த சலுகையின் மூலம் வாடிக்கையாளர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவு சலுகைகளையும் தள்ளுபடிகளையும் பெறலாம். இதைப் பற்றிய முழுமையான தகவல்களை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

சலுகை என்ன, தள்ளுபடி எவ்வளவு?

இதில் கிடைக்கும் சலுகையைப் பற்றி நாம் பேசினால், விவோவின் இந்த சக்திவாய்ந்த ஸ்மார்ட்போனின் உண்மையான விலை ₹ 20,990 ஆகும். எனினும், ஃப்ளிப்கார்ட்டில் இதற்கு 19 சதவிகிதம் என்ற பெரிய தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த பெரும் தள்ளுபடிக்கு பிறகு, வாடிக்கையாளர்கள் இந்த போனை வெறும் ரூ. 16,990க்கு வாங்க முடியும். 

இந்த தள்ளுபடி மிகப்பெரியது!! இதிலும் வாடிக்கையாளர்கள் கார்டு சலுகையைப் பயன்படுத்தி, அதிக தொகையை சேமிக்க முடியும். இருப்பினும், நீங்கள் அதிகபட்ச அளவிலான தள்ளுபடியை பெற விரும்பினால், இந்த ஸ்மார்ட்போனை மிகக் குறைந்த விலையில் வாங்குவதற்கான வழியையும் இந்த பதிவில் காணலாம். 

மேலும் படிக்க | வெறும் 9000 ரூபாயில் 5ஜி ஸ்மார்ட்போனா? அசத்தும் VIVO! 

பரிமாற்றச் சலுகையில் கிடைக்கும் நன்மை என்ன? 

இந்த ஸ்மார்ட்போனில் ரூ. 16,000 மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் சலுகை அதாவது பரிமாற்ற சலுகை வழங்கப்படுவதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். வாடிக்கையாளகள் தங்கள் பழைய ஃபோனை பரிமாற்றிக்கொண்டால், இந்த எக்ஸ்சேஞ்ச் ஆஃபரை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். எனினும், நீங்கள் மாற்றும் போன் நல்ல நிலையில் இருப்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். 

பிளிப்கார்டின் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரின் முழு பலனையும் நீங்கள் பெற்றால், பட்டியலிடப்பட்ட விலையில் இருந்து, அதாவது ரூ. 16,990 என்ற விலையிலிருந்து ரூ. 16,000 குறைக்கப்படும். இதன் பிறகு, இந்த அசத்தல் போனை வாங்க, வாடிக்கையாளர்கள் வெறும் ரூ. 990 கொடுத்தால் போதும். இது ஒரு மிகப்பெரிய தள்ளுபடி ஆகும். இப்படிப்பட்ட சலுகைகளையும் தள்ளுபடிகளையும் பெறவே வாடிக்கையாளர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | ரெட்மீ மாடலில் வைத்திருக்கும் பிஸ்னஸ் சீக்ரெட்! அடுத்து வரும் புதிய ஸ்மார்ட்போன் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News