சாம்சங் கேலக்ஸி அன் பேக் செய்யப்பட்ட நிகழ்வுக்கு முன்னதாக, தங்கள் நிறுவனம் விரைவில் இரட்டை டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளதாக ஒன்பிளஸ் டீசரை வெளியிட்டுள்ளது.
ஒன்பிளஸ் 9 (OnePlus) தள்ளுபடி டீலில் ஒரு டீசராக இந்த தகவல் வெளியிடப்பட்டது. ஒன்பிளஸ் 9 போனில் ஒரு அட்டகாச்சமான சலுகை கிடைக்கிறது. நிறுவனம் OnePlus 9-ல் ஒரு 50% தள்ளுபடி அளித்துள்ளது. அதாவது, பாதி விலையில் இதை வாங்க முடியும், ஆனால், இதில் ஒரு ட்விஸ்ட் உள்ளது. அதைப் பற்றி இங்கே காணலாம்.
OnePlus 9-க்கு 50% தள்ளுபடி
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் ஒன்பிளஸ் நிறுவனம், OnePlus 9 போன் பாதி விலையில் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. ஆனால் இந்த டீலில் ஒரு ட்விஸ்டும் உள்ளது. OnePlus 9 போனில் 50% தள்ளுபடி, அமெரிக்காவில் டி-மொபைல் மூலம் மட்டுமே கிடைக்கும்.
இந்தியாவில் OnePlus 9-ன் விலை
இந்தியாவில், ஒன்பிளஸ் 9 5 ஜி ஸ்மார்ட்போன் (Smartphone) இரண்டு வகைகளில் கிடைக்கிறது, இதில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் ஆகியவை அடங்கும். இந்த ஸ்மார்ட்போன் ஆஸ்ட்ரல் பிளாக், ஆர்க்டிக் ஸ்கை மற்றும் விண்டர் மிஸ்ட் ஆகிய மூன்று வண்ணங்களில் வருகிறது. விலையைப் பற்றி பேசினால், 8 ஜிபி ரேம் கொண்ட ஒன்பிளஸ் 9 இன் அடிப்படை மாடலின் விலை 49,999 ரூபாய் ஆகும். 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒன்பிளஸ் 9 இன் டாப்-எண்ட் மாடலின் விலை 54,999 ரூபாய் ஆகும்.
ALSO READ: OnePlus Nord 2 5G இந்தியாவில் விற்பனை; என்ன விலை, என்ன சலுகை
ஒன்பிளஸ் 9 இல் சலுகைகள்
நீங்கள் இந்தியாவில் ஒன்பிளஸ் 9 ஐ வாங்க விரும்பினால், பல தள்ளுபடி சலுகைகளும் கிடைக்கின்றன. நீங்கள் ஒன்பிளஸ் 9 ஐ அமேசான் இந்தியாவின் வலைத்தளத்திலிருந்தோ அல்லது ஒன்பிளஸின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்தோ வாங்கலாம். சில வங்கி சலுகைகளின் கீழ், எச்டிஎப்சி வங்கி (HDFC Bank) கிரெடிட் கார்டு மற்றும் இஎம்ஐ பரிவர்த்தனைகளில் ரூ .3000 வரை தள்ளுபடி, தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டுகளில் 10 சதவீதம் வரை கேஷ்பேக் மற்றும் எச்டிஎஃப்சி வங்கி கார்டுகளில் 12 மாதங்கள் வரை கட்டணமில்லா இஎம்ஐ ஆகியவை கிடைக்கின்றன.
ஒன்பிளஸ் 9 இன் விவரக்குறிப்புகள்
ஒன்பிளஸ் 9 இல் 6.55 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இதன் ஸ்க்ரீன் ரிசல்யூஷன் 1080 × 2400 பிக்சல்கள் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 SoC மூலம் இயக்கப்படுகின்றது, 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள் சேமிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ் வசதியும் இதில் உள்ளது. ஒன்பிளஸ் 9-ல் 4500mAh பேட்டரி உள்ளது. இது Warp Charge 65T அவுட்-ஆஃப்-தி-பாக்ஸ் உடன் இணைக்கப்படுள்லது.
ஒன்பிளஸ் 9 கேமரா
50 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் கேமரா மற்றும் டூயல் எல்இடி ஃபிளாஷ் கொண்ட 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பை ஒன்பிளஸ் 9 கொண்டுள்ளது. முன்பக்கத்தில், இந்த தொலைபேசியில், 16 மெகாபிக்சல் சோனி IMX471 சென்சார் உள்ளது.
ALSO READ: OnePlus Nord CE 5G: OnePlus Nord CE 5G ஸ்மார்ட்போன் அறிமுகம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR