அதிர்ச்சி தகவல்! மொபைல் கவர் பயன்படுத்துவதால் இவ்வளவு ஆபத்துக்கள் ஏற்படுமா?

Mobile cover: மொபைல் கவர் போடுவதால் எவ்வளவு நன்மை இருக்கிறதோ, அதேயளவு  பல பெரிய தீமைகளையும் மொபைல் கவர் கொண்டுள்ளது.   

Written by - RK Spark | Last Updated : May 19, 2023, 12:11 PM IST
  • மொபைல் கவரை பயன்படுத்திய பிறகு உங்கள் மொபைல் விரைவாக வெப்பமடைகிறது.
  • ஜிபிஎஸ் மற்றும் திசைகாட்டி ஆகியவற்றிலும் சிக்கல்களை ஏற்படுத்துகிறது.
  • மொபைல் சூடுபிடிக்கத் தொடங்குவதால் வேகமாக சார்ஜ் செய்ய முடியாது.
அதிர்ச்சி தகவல்! மொபைல் கவர் பயன்படுத்துவதால் இவ்வளவு ஆபத்துக்கள் ஏற்படுமா?  title=

Mobile cover: ஸ்மார்ட்போன் வாங்குவதில் மக்கள் எவ்வளவு ஆர்வம் கொள்கிறார்களாலோ அதேயளவு அந்த ஸ்மார்ட்போனுக்கான கவரை வாங்குவதிலும் மக்கள் ஆர்வம் கொண்டிருக்கின்றனர்.  நாம் அதிக விலை கொடுத்து, நமக்கு பிடித்தமானதாக வாங்கக்கூடிய மொபைலில் ஏதேனும் சிறிய கீறல்கள் விழுந்துவிடாமல் இருக்கவும், மொபைல் பார்ப்பதற்கு அழகாக இருக்கவும் மொபைல் கவர்களை மக்கள் பயன்படுத்துகின்றனர். மொபைலின் பாதுகாப்புக்காக மொபைல் கவர்கள் பயன்படுத்தப்பட்ட காலம் போயி இப்போது மொபைலின் அழகை மெருகேற்றுவதற்காக மொபைல் கவர்கள் பயன்படுத்தப்படுகிறது.  ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் போது, ​​நாம் அதை மிகவும் கவனித்துக்கொள்கிறோம்.  மொபைலில் எந்தவித கீறல்களும் இருக்கக்கூடாது என்பதும், மொபைலின் பாகங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதும் தான் மொபைல் கவர் போடுவதன் முக்கியமான நோக்கமாகும்.  

மொபைலின் நன்மைக்காக கவர் வாங்குகிறோம் என்று நினைத்து கொண்டு இருக்கிறோம், ஆனால் மொபைல் கவர் போடுவதால் எவ்வளவு பாதிப்புகள் வரும் என்பது பற்றி பலருக்கும் தெரிந்திருக்காது.  மொபைல் கவர் போடுவதால் எவ்வளவு நன்மை இருக்கிறதோ அதேயளவு  பல பெரிய தீமைகளையும் மொபைல் கவர் கொண்டுள்ளது.  மொபைல் கவரின் தீமைகள் பற்றி தெரிந்தால் நீங்கள் உங்கள் மொபைல் கவரை தூரமாக தூக்கி வீசிவிடுவீர்கள், இப்போது மொபைல் கவர் பயன்படுத்துவதால் என்னென்ன தீமைகள் வரும் என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.

மேலும் படிக்க | Maruti Wagon R: குறைந்த விலை, மாஸ் அம்சங்கள்... இந்த கார் மக்களை கவர்ந்த காரணங்கள் இவைதான்

1) மொபைல் கவரை பயன்படுத்திய பிறகு உங்கள் மொபைல் விரைவாக வெப்பமடைகிறது.  மொபைல் வெப்பமடைவதால் மொபைல் அடிக்கடி ஹேங்க் ஆகிவிடும், இதனால் மொபைலை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படும்.

2) மொபைலில் ஒரு கவர் இருப்பதால், மொபைல் சூடுபிடிக்கத் தொடங்குகிறது,  இதனால் மொபைலை உங்களால் வேகமாக சார்ஜ் செய்ய முடியாது.

3) நல்ல தரமான மொபைல் கவர் கிடைக்கவில்லை என்றால், அதில் பாக்டீரியாக்கள் சேரும் அபாயம் உள்ளது.  இதனால் உங்கள் சருமத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.

4) உங்கள் மொபைல் கவர் காந்தத்தால் உருவாக்கப்பட்டது என்றால் அது ஜிபிஎஸ் மற்றும் திசைகாட்டி ஆகியவற்றிலும் சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

5) கடைசியாக, இன்னொரு குறைபாடு என்னவென்றால், இப்போதெல்லாம் மொபைல் ஒன்றுக்கு மேற்பட்ட வடிவமைப்புகளுடன் வருகின்றன.  அதனால் கவர் போட்டால் மொபைலின் டிசைன், லுக் எல்லாம் மறைந்திருக்கும்.

மொபைல் கவரால் பெரியளவில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்று நினைத்தால், மொபைலை சார்ஜ் செய்யும் போது மொபைல் கவரை அகற்ற வேண்டும்.  மேலும் கேம் விளையாடும் போது மொபைல் கவர் அகற்றப்பட வேண்டும்.  இது தவிர, நீங்கள் நீண்ட நேரம் வீடியோ எடுக்கிறீர்கள் என்றால், அதற்கு முன் மொபைல் கவரை அகற்றிவிட வேண்டும்.

மேலும் படிக்க | PhonePe, Paytm மூலம் தவறான நபருக்கு பணம் அனுப்பினால் திரும்பப் பெறுவது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News