ஏர்டெல் மற்றும் ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தான் இப்போது இந்தியாவில் பிரதானமான தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகளாக இருக்கின்றன. இரண்டும் 5ஜி அலைவரிசையை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க அடிப்படை கட்டமைப்புகளின் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் அதேநேரத்தில், பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை ஈர்ப்பதிலும் மும்முரம் காட்டி வருகின்றனர். அதில் ஜியோ மற்றும் ஏர்டெல் மார்க்கெட்டிங் டீம்களுக்கு இடையே கடும் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கேற்ப மலிவு விலை திட்டங்களை அறிவித்து, அதில் கூடுதல் சலுகைகளையும் கொடுத்து வாடிக்கையாளர்களுக்கு மாறி மாறி ஷாக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒன்று தான் 299 ரூபாய் பிளானும்.,
ஜியோ மற்றும் ஏர்டெல் என இரு நெட்வொர்க்குகளும் 299 ரூபாய் பிளானை வைத்திருக்கிறார்கள். இரண்டு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு அதிவேக டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றை கொடுக்கிறார்கள். அதில் ஏர்டெல் நெட்வொர்க் அதிக பலன்களை கொடுக்கிறதா? ஜியோ அதிக பலன்களை கொடுக்கிறதா? என்பது தான் கேள்வி. \
ரிலையன்ஸ் ஜியோ ரூ.299 திட்டம்
ரூ.299 ரிலையன்ஸ் ஜியோ திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள். இந்த திட்டத்தில், பயனர்கள் 2 ஜிபி டேட்டாவின்படி மொத்தம் 56 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். தினசரி டேட்டா வரம்பு முடிந்ததும், வேகம் 64Kbps ஆக குறைக்கப்படும். இந்த பேக்கில், வாடிக்கையாளர்கள் வரம்பற்ற குரல் அழைப்பு வசதியைப் பெறுகிறார்கள், திட்டத்தில் 100 எஸ்எம்எஸ் இலவசம் வழங்கப்படுகிறது. ஜியோவின் திட்டத்தில், வாடிக்கையாளர்கள் JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud ஆகியவற்றின் இலவச சந்தாவைப் பெறுகிறார்கள். இப்போது இந்த திட்டத்தில் செப்டம்பர் 30 வரை கூடுதல் பலன் கிடைக்கும். செப்டம்பர் 30 வரை ரூ.299 ரீசார்ஜ் செய்தால் 7 ஜிபி கூடுதல் டேட்டா கிடைக்கும். அதாவது ரூ.299க்கு ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 63 ஜிபி டேட்டா கிடைக்கும்.
ஏர்டெல் ரூ.299 மாதாந்திர ரீசார்ஜ் திட்டம்
ரூ.299 திட்டத்துடன் உங்கள் ஏர்டெல் ப்ரீபெய்ட் எண்ணை ரீசார்ஜ் செய்தால், நாடு முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இதில் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். மேலும், தினமும் 1.5ஜிபி 4ஜி டேட்டா கிடைக்கும். அதாவது மாதம் முழுவதும் 42 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தில், தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக கிடைக்கும்.
ஏர்டெல் அல்லது ஜியோ:
ரிலையன்ஸ் ஜியோ தனது ரூ.299 திட்டத்தில் 63 ஜிபி டேட்டாவை கொடுக்கிறது. வழக்கமாக 56 ஜிபி டேட்டா தான் உண்டு. ஆனால் ஜியோ 7 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தில் இருப்பதால், கூடுதலாக 7 ஜிபி டேட்டாவைக் கொடுக்கிறது. அதே நேரத்தில், ஏர்டெல்லின் ரூ.299 திட்டத்தில் 42 ஜிபி டேட்டா கிடைக்கிறது. ஏர்டெல்லை விட ஜியோ 21 ஜிபி கூடுதல் டேட்டாவை வழங்குகிறது. இதில் உங்களுக்கு எது பெஸ்ட் என தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | ஆகஸ்ட் மாதம் அதிகம் விற்பனையான கார்களின் பட்டியல் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ