Airtel, Jio அறிமுகம் செய்யும் Li-Fi Connection: Wi-Fi-ஐ விட 20% அதிக வேகம்!!

Li-Fi ஒரு புதிய தொழில்நுட்பமாகும். இதில் இணைய தரவு, ஃபைபர் அல்லது செயற்கைக்கோளுக்கு பதிலாக ஒளி கற்றைகளின் உதவியுடன் டிரான்ஸ்ஃபர் செய்யப்படும், அதாவது தரவு மாற்றப்படும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 20, 2021, 06:19 PM IST
  • வருங்காலத்தில் இணைய இணைப்புக்கான Li-Fi தொழில்நுட்பம் உங்களிடம் இருக்கும்.
  • இந்தியாவில் Li-Fi தொழில்நுட்பத்திற்கான சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
  • Project X- இன் கீழ் Li-Fi மூலம் இணைய வேகம் 20 ஜிகாபைட் (gbps) வரை அதிகரிக்கிறது.
Airtel, Jio அறிமுகம் செய்யும் Li-Fi Connection: Wi-Fi-ஐ விட 20% அதிக வேகம்!! title=

மாற்றம் என்பது நமது வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாகும். நாம் மாறும் போது அதில் பல மேம்பாடுகளும் நடக்கின்றன. தொழில்நுட்பத்தில் மாற்றம் ஒரு கட்டாயமான விஷயமாக இருக்கிறது. மாறிக்கொண்டே இருக்கும் தொழில்நுட்பம் நமக்கு பல மேம்பட்ட பொருட்களையும், வசதிகளையும் சேவைகளையும் வழங்குகிறது.

Li-Fi ஒரு புதிய தொழில்நுட்பமாகும். இதில் இணைய தரவு, ஃபைபர் அல்லது செயற்கைக்கோளுக்கு பதிலாக ஒளி கற்றைகளின் உதவியுடன் டிரான்ஸ்ஃபர் செய்யப்படும், அதாவது தரவு மாற்றப்படும்.

இணையத்திற்கான Wi-Fi இணைப்பு மிக விரைவில் ஒரு பழைய விஷயமாக மாறப்போகிறது. வரவிருக்கும் காலங்களில், இணைய இணைப்புக்கான Li-Fi தொழில்நுட்பம் உங்களிடம் இருக்கும். அதன் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், தற்போதைய Wi-Fi இணைய வேகத்தை விட Li-Fi 20 மடங்கு வேகமாக இருக்கும்.

இந்தியாவில் Li-Fi வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது

இந்தியாவில் Li-Fi தொழில்நுட்பத்திற்கான சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. கிடைத்த தகவல்களின்படி, ஆந்திராவில் Project X-இன் கீழ், கூகிள் இந்தியாவில் Li-Fi தொழில்நுட்பத்தை (Technology) வெற்றிகரமாக சோதித்துள்ளது.

கூகிள் ஏர்டெல் மற்றும் ஜியோவுடன் ஆலோசித்து வருகிறது

Li-Fi தொழில்நுட்பத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்த மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகிள் (Google) ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மிக விரைவில் ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இந்த தொழில்நுட்பத்தை முழு நாட்டிலும் செயல்படுத்தத் தொடங்கக்கூடும்.

No description available.

ALSO READ: Tech Tip: WhatsApp ஆடியோ, வீடியோ அழைப்புக்களை பதிவு செய்வது எப்படி?

Li-Fi என்றால் என்ன

Li-Fi ஒரு புதிய தொழில்நுட்பமாகும். இதில், ஃபைபர் அல்லது செயற்கைக்கோளுக்கு பதிலாக ஒளி கற்றைகளின் உதவியுடன் இணைய தரவு மாற்றப்படுகிறது. ஒளி கற்றைகள் கம்பிகளோ அல்லது இணைப்புகளோ இல்லாமல் தரவை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றும். தொலைதூர பகுதிகளில் இணைய சேவையை வழங்குவதில் இது பயனுள்ளதாக இருக்கும்.

இணைய வேகம் 20 மடங்கு அதிகமான இருக்கும்

Project X- இன் கீழ் Li-Fi மூலம் இணைய வேகம் 20 ஜிகாபைட் (gbps) வரை அதிகரிக்கிறது. தற்போதைய இணைய வேகம் 1 ஜிகாபைட்டுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No description available.

ஒரே இணைப்பு மூலம் 20 கி.மீ வரை கவர் செய்ய முடியும்

பெறப்பட்ட தகவல்களின்படி, Li-Fi அமைப்பைப் பயன்படுத்துவதால் சுமார் 20 கி.மீ சுற்றளவை கவர் செய்ய முடியும். அதாவது, இந்த 20 கி.மீ சுற்றளவில் உள்ள பயனர்கள் ஒரே இணைப்பின் மூலம், வேகமான இணையத்தைப் (Internet) பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ALSO READ: WhatsApp புதிய தனியுரிமை கொள்கையை மத்திய அரசு ஏன் எதிர்க்கிறது..!!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News