உங்கள் பட்ஜெட்டில் கச்சிதமாய் கிடைக்கும் டாப் 5 லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள்

10,000 ரூபாய்க்குள் சிறந்த ஸ்மார்ட்போனை வாங்கும் எண்ணம் உங்களுக்கு இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 18, 2021, 02:37 PM IST
உங்கள் பட்ஜெட்டில் கச்சிதமாய் கிடைக்கும் டாப் 5 லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள்  title=

Best mobile phones under Rs. 10,000 in India: நன்கு அறியப்பட்ட பிராண்டுகளின் பல புதிய அறிமுகங்களால் ரூ.10,000க்கு கீழ் உள்ள ஸ்மார்ட்போன்கள் பிரபலமடைந்துள்ளன. 10,000 ரூபாய்க்குள் சிறந்த ஸ்மார்ட்போனை வாங்கும் எண்ணம் உங்களுக்கு இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.

இந்த போன்களில் நல்ல கேமரா, பேட்டரி மற்றும் கேமிங் செயல்திறன் ஆகியவை உள்ளன. டாப்-5 பட்டியலில் Micromax IN 2b, Realme Narzo 30A, Moto E7 Plus, Realme C25 மற்றும் Realme C21Y ஆகிய ஸ்மார்ட்போன்கள் உள்ளன.

மைக்ரோமேக்ஸ் IN 2b (Micromax IN 2b)
IN 2b என்பது மைக்ரோமேக்ஸின் (Micromax) நுழைவு-நிலை ஃபோன் ஆகும். இது HD+ தெளிவுத்திறனுடன் 6.52-இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த ஃபோன் ஹூட்டின் கீழ் Unisoc T610 செயலியைப் பயன்படுத்துகிறது. IN 2b 6GB வரையிலான ரேம் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13 மெகாபிக்சல் இரட்டை கேமரா அமைப்புடன் பொருத்தப்பட்டுள்ளது. மைக்ரோமேக்ஸ் IN 2B நல்ல நுழைவு நிலை செயல்திறன் மற்றும் அடிப்படை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

ரியல்மீ நார்சோ 30 ஏ (Realme Narzo 30A)
Realme Narzo 30A ஒரு பட்ஜெட் 4G ஸ்மார்ட்போன் ஆகும். இது ஒரு பெரிய 6000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் இரண்டு நாட்கள் நீடிக்கும். Narzo 30A ஆனது 6.5-இன்ச் 720p LCD உடன் 269 PPI தெளிவுத்திறன், 60Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் தடிமனான பெசல்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. USB-C போர்ட் மற்றும் மைக்ரோஃபோன் தவிர, கீழே 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் உள்ளது. Realme Narzo 30A ஆனது 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் கருப்பு மற்றும் வெள்ளை சென்சார் கொண்ட இரண்டு கேமராக்களைக் கொண்டுள்ளது.

ALSO READ: வெறும் ரூ.2 ஆயிரத்தில் OPPO இன் புதிய 5G Smartphone 

மோட்டோ இ7 பிளஸ் (Moto E7 Plus)

மோட்டோரோலாவின் (Motorola) சமீபத்திய போன் Moto E7 Plus மலிவு விலையில் ரூ.9,499க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. Moto E7 6.5 இன்ச் பெரிய திரையைக் கொண்டுள்ளது. பின்புற பேனலில் ஒரு சதுர வடிவ கேமரா மாட்யூல் உள்ளது. அதில் இரண்டு கேமரா சென்சார்கள் மற்றும் ஒரு LED லைட் ஆகியவை உள்ளன. முதன்மை கேமரா 48 மெகாபிக்சல்கள், 2 மெகாபிக்சல்கள் டெப்த் சென்சார் ஆகியவை உள்ளன. E7 Plus ஆனது Qualcomm Snapdragon 460 SoC மற்றும் 4GB ரேம் மூலம் இயக்கப்படுகிறது.

ரியல்மீ சி25 (Realme C25)

Realme C25 என்பது நிறுவனத்தின் புதிய நுழைவு-நிலை ஸ்மார்ட்போன் ஆகும். இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 6000mAh பேட்டரியுடன் வருகிறது. Realme C25 ஆனது 6.5-இன்ச் HD+ டிஸ்ப்ளே மற்றும் 4GB RAM உடன் MediaTek Helio G70 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த போனின் விலை ரூ.9,999 ஆகும்.

ரியல்மீ C21Y (Realme C21Y)
Realme C21Y 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. C21Y ஆனது Unisoc T610 SoC ஆக்டா-கோர் CPU உடன் இயக்கப்படுகிறது மற்றும் 4GB RAM மற்றும் 64GB சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. Realme C21Y-வில் 13MP ப்ரைமரி கேமரா, 2MP மேக்ரோ கேமரா மற்றும் 2MP டெப்த் சென்சார் கொண்ட மூன்று கேமராக்கள் உள்ளன. 5எம்பி செல்ஃபி கேமராவும் இதில் உள்ளது. ரிவர்ஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000எம்ஏஎச் பேட்டரி இதில் இடம்பெற்றுள்ளது. Realme C21Y இன் விலை ரூ.9,999 ஆகும்.

ALSO READ: வலுவான பேட்டரியுடன் புதிய Oppo ஸ்மார்ட்போன் அறிமுகம் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News