மலிவான அசத்தல் Maruti கார்களை வாங்கணுமா? வருகிறது சூப்பர் சான்ஸ்

Maruti Suzuki: மாருதி சுஸுகி நிறுவனம் மலிவு விலை கார்ஜளான 2022 இக்னிஸ் மற்றும் 2022 எஸ்-பிரஸ்ஸோ மாடல்களை விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 22, 2022, 01:57 PM IST
  • இரண்டு புதிய மாருதி கார்கள் விரைவில் வரவுள்ளன.
  • இவை மலிவு மற்றும் ஸ்டைலான கார்கள்.
  • பல பெரிய மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலிவான அசத்தல் Maruti கார்களை வாங்கணுமா? வருகிறது சூப்பர் சான்ஸ் title=

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காரான மாருதி சுஸுகி, வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டுக்குள் வரும் இரண்டு புதிய சிறிய அளவிலான கார்களை மிக விரைவில் கொண்டுவர உள்ளது. 2022 ஆம் ஆண்டில், நிறுவனம் பல புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

மாருதி நிறுவனத்தின் படி, நிறுவனம் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒரு முறை 6 கார்களை அறிமுகப்படுத்தும். இதில், இரண்டு சிறிய அளவிலான மாருதி சுஸுகி இக்னிஸ் மற்றும் மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோ ஆகியவையும் அடங்கும். சந்தையில் உள்ள போட்டி மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப ஏராளமான வசதிகளுடன் குறைந்த விலையில் காரை அறிமுகம் செய்ய மாருதி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த இரண்டு கார்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளலாம். 

மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோ டூயல்ஜெட்

மாருதி சுஸுகி மிக விரைவில் எஸ்-பிரஸ்ஸோ-ஐ புதிய டூயல்ஜெட் இன்ஜினுடன் அறிமுகப்படுத்தக்கூடும். இது சமீபத்தில் செலெரியோ உடன் கிடைக்கப்பெற்றது. தற்போது, ​​1.0 லிட்டர் K10B பெட்ரோல் எஞ்சின் இந்த மைக்ரோ SUV உடன் வழங்கப்படுகிறது. இது 68 HP ஆற்றலை உருவாக்குகிறது. 

மேலும் படிக்க | இவையே மிகவும் மலிவான 5 அட்வென்ச்சர் பைக்குகள் 

இந்த எஞ்சினுக்கு பதிலாக புதிய மாடலில் 1.0 லிட்டர் கே10சி டூயல்ஜெட் எஞ்சின் நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட உள்ளது. புதிய எஸ்-பிரஸ்ஸோ எரிபொருளின் அடிப்படையில் வலுவான காராக இருக்கும் என்பதே இதன் பொருள். இது தவிர, காருக்கு புதிய தோற்றத்தைக் கொடுக்க சில காஸ்மெட்டிக் மாற்றங்களையும் நிறுவனம் அளிக்கக்கூடும். 

மாருதி சுஸுகி இக்னிஸ் டூயல்ஜெட்

மாருதி நிறுவனத்தின் இந்த சிறிய அளவிலான கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், புதிய எஞ்சினுடன் கூடிய புதிய மாடலை நிறுவனம் கொண்டு வரவுள்ளது. 83 ஹெச்பி ஆற்றலை வழங்கும் தற்போதைய இக்னிஸில் 1.2 லிட்டர் K12M இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. 

இப்போது 1.2 லிட்டர் K12N இன்ஜின் வழங்கப்படலாம். இது 90 ஹார்ஸ்பவரை உருவாக்கும். இந்த எஞ்சின் டூயல்ஜெட் தொழில்நுட்பத்துடன் வருகிறது. புதிய இக்னிஸ் தற்போதைய மாடலை விட அதிக பெட்ரோலைச் சேமிக்கும், மேலும் சில ஒப்பனை மாற்றங்களையும் இதில் காண முடியும். 

மேலும் படிக்க | அதிக மைலேஜ், குறைந்த விலை: நடுத்தர குடும்பங்களுக்கு ஏற்ற 4 சிறந்த பைக்குகள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News