இந்தியாவுக்கு எதிராக போலியான செய்திகளை பரப்புவதில் ஈடுபட்டுள்ள 35 யூடியூப் சேனல்கள் (Youtube) மற்றும் இரண்டு இணையதளங்கள், இரண்டு ட்விட்டர் கணக்குகள், இரண்டு இன்ஸ்டாகிராம் கணக்குகள் மற்றும் ஒரு பேஸ்புக் கணக்கு ஆகியவற்றிற்கு தடை விதிக்க தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ALSO READ | இதன் மூலம் Google Chrome-ல் search history-ஐ எளிதாக நீக்கலாம்!
இத்தகைய யூடியூப் சேனல்கள், இணையதளங்கள் மற்றும் சமூக ஊடக கணக்குகள் அனைத்தும் பாகிஸ்தானில் (Pakistan) இருந்து இந்தியாவிற்கு எதிரான போலி செய்திகள் மற்றும் அவதூறான செய்திகளை பரப்பும் நோக்கில் இயக்கப்படுகின்றன. பிரிவு 69 Aன் படி இந்த சேனல்களில் பதிவிடப்பட்ட பதிவுகள்யாவும் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகவும், தவறான தகவல்களை பரப்புவதாலும், அவசரகால விதிகளின் கீழ் இந்த சேனல்களுக்கு தடை விதிக்க போவதாக, தகவல் மற்றும் ஒளிபரப்பு (I&B) செயலாளர் அபூர்வ சந்திரா தெரிவித்தார்.
பாகிஸ்தானில் இயக்கப்படும் சமூக ஊடக கணக்குகள் மற்றும் இணையதளங்களைத் முடக்க, தகவல் தொழில்நுட்ப விதிகள் 16 இன் கீழ், ஐந்து தனித்தனி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்திய புலனாய்வு அமைப்புகள் இத்தகைய அவதூறு பரப்பும் சமூக ஊடக கணக்குகள் மற்றும் இணையதளங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றன என்றும் சந்திரா கூறியுள்ளார்.
இந்திய ராணுவம், பிற நாடுகளுடனான இந்தியாவின் வெளிநாட்டு உறவுகள் மற்றும் பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் மறைவு குறித்தும் பல போலியான செய்திகளை பாகிஸ்தானின் சமூக ஊடகங்கள் வெளியிட்டுள்ளது. மேலும் அவர் கூறுகையில், இதுபோன்று அவதூறு பரப்பும் பல சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவை முடக்கப்படும். யூடியூப் சேனல், இணையதளம் அல்லது சமூக ஊடக கணக்குகள் போன்றவற்றில் இந்தியாவுக்கு எதிராக தவறான கருத்துக்கள் பரப்பப்படுவதை மக்கள் கண்டால், அதனை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ALSO READ | விவசாயத்திற்கு ட்ரோன்களை பயன்படுத்த நிதியுதவி அளிக்கப்படும் - வேளாண் அமைச்சகம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR