ஆபாசமான 18 OTT தளங்களுக்கு அதிரடி தடை... ஏன் தெரியுமா?

18 OTT Platforms Ban: ஆபாசமான, கொச்சையான, மோசமான வீடியோக்கள் அடங்கிய 18 ஓடிடி தளங்களுக்கு ஒன்றிய தகவல் மற்றும் ஒலிப்பரப்பு அமைச்சகம் இன்று தடை விதித்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Mar 14, 2024, 04:18 PM IST
  • இந்த பட்டியலில் உள்ள செயலியை 1 கோடி பேருக்கு மேல் தரவிறக்கம் செய்துள்ளனர்.
  • இன்னும் 2 செயலியை 50 லட்சம் பேர் தரவிறக்கம் செய்துள்ளனர்.
  • 18 தளங்கள் சார்ந்த அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆபாசமான 18 OTT தளங்களுக்கு அதிரடி தடை... ஏன் தெரியுமா? title=

18 OTT Platforms Ban: படைப்பு வெளிப்பாடு என்ற பெயரில் ஆபாசம் நிறைந்த காட்சிகள், மோசமான கருத்துகளை பரப்பும் தளங்களை தடை செய்யும் பொறுப்பு தங்களுக்கு இருப்பதாக ஒன்றிய தகவல் மற்றும் ஒலிப்பரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் பல சந்தர்பங்களில் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், ஆபாச மற்றும் மோசமான கருத்துகள் நிறைந்த ஒரு 18 ஓடிடி தளங்களை மார்ச் 12ஆம் தேதி ரத்து செய்திருப்பதாக அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்பம் 2000, சட்டத்தின்கீழ் இந்திய அரசின் மற்ற துறை/அமைச்சகங்களிடம் ஆலோசனை மேற்கொண்டு, ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு, மகளிர் உரிமை, குழந்தைகள் உரிமை ஆகியவற்றின் நிபுணர்களுடன் கலந்தாலோசனை செய்து இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக தெரிவித்தனர். 

மேலும் படிக்க | ஜியோ, ஏர்டெல்லுக்கு கும்பிடு போடுங்க..! 5ஜி போன்கள் விலை குறையபோகுது

என்னென்ன தளங்களுக்கு தடை?

Prime Play, Fugi, Mojflix, Chikooflix, MoodX, Hunters, Rabbit, Nuefliks, Hot Shots VIP, Xtramood, Dreams Films, X Prime, Uncut Adda, Neon X Vip, Besharams, Yessma, Voovi, Tri Flicks ஆகிய 18 ஓடிடி தளங்கள் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறையால் தடை செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த 18 ஓடிடிகளுடன் தொடர்புடைய 19 தளங்கள், கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள 10 செயலிகள், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் உள்ள 3 செயலிகள் மற்றும் 57 சமூக வலைதள கணக்குகள் ஆகியவை இந்திய மக்களின் பயன்பாட்டில் இருந்து அதிகாரப்பூர்வமாக தடை செய்யப்பட்டுள்ளது. 

ஏன் தடை?

முக்கியமாக, தடை செய்யப்பட்ட இந்த தளங்களில் பெண்களை ஆபாசமாகவும், கொச்சையாகவும் காட்சிப்படுத்தியிருப்பதாக கூறி இந்த நடவடிக்க எடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் - மாணவர்கள், குடும்ப உறவுகள் என ஆட்சேபனை மிக்க கருத்துகளை நிர்வாணமாகவும், ஆபாசமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறகு, கருப்பொருள் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் எவ்வித தொடர்பும் அற்ற பாலியல் காட்சிகளைதான் அவை காட்டுகின்றன. எனவே, தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் 67 மற்றும் 67A ஆகிய இரு பிரிவுகளையும் மீறும் வகையில் காட்சிகள் இருந்தன, மேலும், பெண்களின் அநாகரீக அங்கீகார தடை சட்டத்தின் 6ஆவது பிரிவின் கீழும் இதன்மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

தடை செய்யப்பட்ட ஒரு செயலியை இதுவரை சுமார் 1 கோடி பேர் தரவிறக்கம் செய்துள்ளனர். மேலும், இன்னொரு இரு செயலிகளில் 50 லட்சத்திற்கும் மேலான பயனர்கள் டவுண்லோட் செய்துருக்கின்றனர். இந்த தளங்கள் தங்கள் செயலியை பயனர்களிடம் சேர்க்க, சமூக வலைதளங்களை விளம்பரத்திற்கு பயன்படுத்தி உள்ளனர். முன்னதாக மத்திய அரசு ஆபாச இணையதளங்கள் மேல் தொடர்ந்து பல நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | இலவச நெட்ஃபிளிக்ஸ் சலுகை: ஜியோ, ஏர்டெல் இரண்டில் எது பெஸ்ட்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News