வேலை இழந்து பரிதவிக்கும் 12,000 ஐடி ஊழியர்கள்!

அமெரிக்காவில் ஐடி ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் தொடர்ச்சியாக வேலை இழந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 4, 2022, 11:44 AM IST
  • அமெரிக்காவில் அதிகரிக்கும் வேலை இழப்புகள்
  • ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இழப்பு
  • கடும் நெருக்கடியில் ஐடி மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்
வேலை இழந்து பரிதவிக்கும் 12,000 ஐடி ஊழியர்கள்! title=

ஐடி மற்றும் ஸ்டார்ட் அப் துறையில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இழந்துள்ளதாக க்ரஞ்ச்பேஸ் தெரிவித்துள்ளது. ஐடி மற்றும் தொழில்நுட்ப துறையில் வேலை இழந்தவர்களில் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பெரும்பாலானோர் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் என தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்குப் பிறகு, இன்னும் சரிவில் இருந்து மீளாத நிறுவனங்கள் நிதி திரட்டுவதில் மிகப்பெரிய சவாலை சந்தித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | Instaவில் இனி வீடியோ அப்லோடு செய்ய முடியாது! - வந்தாச்சு புது ரூல்ஸ்! நெட்டிசன்ஸ் குழப்பம்!

ஓலா, Unacademy, Vedantu, Cars24 மற்றும் மொபைல் ப்ரீமியர் லீக் உள்ளிட்ட பல யுனிகார்ன் நிறுவனங்கள், மறுசீரமைப்பு மற்றும் செலவுக் குறைப்பு என்ற பெயரில் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன. அதேநேரத்தில் Blinkit, BYJU's (White Hat Jr, Toppr), FarEye, Trell போன்ற நிறுவனங்களும் ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிறுவனங்களுள் அடங்கும். இதுதவிர இன்னும் அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது. இனி வரும் காலத்தில் மேலும் 60 ஆயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ள அந்த அறிக்கை, நிதி திரட்டும் முயற்சியிலும் இறங்குவார்கள் எனக் கூறியுள்ளது.

வரும் ஆண்டுகளிலும் மறு சீரமைப்பு மற்றும் செலவு குறைப்பு என்ற பெயரில் 50 ஆயிரம் ஸ்டார்ட் அப் ஊழியர்கள் பணி நீக்கம் செயப்படுவார்கள் என அந்த அறிக்கை கூறுகிறது. இதேபோல், நெட்ஃபிளிக்ஸ் போன்ற உலகளாவிய நிறுவனங்கள், நிதிச் சேவை நிறுவனமான ராபின்ஹூட் மற்றும் பல கிரிப்டோ இயங்குதளங்கள் ஆகியவையும் கடும் பொருளாதார பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. அந்த நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களை குறைத்துள்ளன. நல்ல ஸ்டார்ட்அப்கள் நீடித்து இருக்க வேண்டும் என்றால் சந்தையில் மிகப்பெரிய வரலாற்றுச் சரிவு ஏற்பட வேண்டும் என அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மூலதனமான நிறுவனமான Sapphire Ventures ப்ளூம்பெர்க்கில் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | ஷாரூக்கான் பயன்படுத்தும் போன் இதுதான் - இத்தனை அம்சங்களா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News