‘மெர்குரி’ படம் தமிழில் வெளியாகாது- கார்த்திக் சுப்பராஜ்!

தமிழ்நாடு திரைத்துறையின் ஸ்ட்ரைக் முடியும் வரை ‘மெர்குரி’ திரைப்படத்தின் தமிழ் வெர்ஷனை வெளியிட போவதில்லை என கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்!

Last Updated : Apr 5, 2018, 04:20 PM IST
‘மெர்குரி’ படம் தமிழில் வெளியாகாது- கார்த்திக் சுப்பராஜ்! title=

தமிழ்நாடு திரைத்துறையின் ஸ்ட்ரைக் முடியும் வரை ‘மெர்குரி’ திரைப்படத்தின் தமிழ் வெர்ஷனை வெளியிட போவதில்லை என கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா நடித்து வெளிவரும் திரைப்படம் "மெர்குரி". சைலன்ட் த்ரில்லராக உருவாயுள்ள இந்த படத்தில், ரம்யா நம்பீசன், ஷனந்த் ரெட்டி, தீபக் பரமேஷ், அனிஷ் பத்மன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு திரு ஒளிப்பதிவு செய்துள்ளார், சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
 
தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மூலம் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தினை தயாரித்துள்ளார். 

முன்னதாக வரும் ஏப்ரல் 13-ஆம் நாள் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தமிழகத்தில் புது திரைப்படங்களை வெளியிடுவதில்லை என திரைத்துரையினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், போராட்டம் முடியும் வரை ‘மெர்குரி’ திரைப்படத்தின் தமிழ் பதிப்பினை வெளியிட போவதில்லை என படத்தின் இயக்குனர் தெரவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கதில் பதிவிட்டுள்ளதாகவது...

Trending News