மனைவியை தேடி அலைந்த 2வது கணவர்-இன்ஸ்டாகிராம் காதலனுக்காக சென்னை வந்த இளம் பெண்!

இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட நபரை விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனை தேடி ஒரு இளம் பெண் சென்னை வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Yuvashree | Last Updated : Sep 3, 2023, 08:30 PM IST
  • கேரளாவில் இருந்து ஒரு பெண் தனது இன்ஸ்டா காதலரை தேடி சென்னை வந்துள்ளார்.
  • இவரை காணாமல் 2வது கணவர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
  • என்ன நடந்தது..? முழு விவரம்!
மனைவியை தேடி அலைந்த 2வது கணவர்-இன்ஸ்டாகிராம் காதலனுக்காக சென்னை வந்த இளம் பெண்!  title=

இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட நபரை விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனை தேடி ஒரு இளம் பெண் சென்னை வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் முகம் தெரியாத நபர்களுடன் பழகி அவர்கள் மீது காதல் வயப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைப்பெற்று வருகிறது. இதே போன்ற  ஒரு சம்பவம்தான் தற்போது சென்னையிலும் நிகழ்ந்துள்ளது. 

2 திருமணங்கள்..

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்ந்தியூரை சேர்ந்த 21 வயது பெண் மதுபாலா. இவருக்கு 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஈரோட்டை சேர்ந்த கார்த்திக் என்பவரை இவரது பெற்றோர்கள் பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணம் முடிந்த சில ஆண்டுகலிலேயே கணவன் மனைவிக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இவர்கள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரிந்து விட்டனர். இவர்களது விவாகரத்து வழக்கு இன்னும் நடைப்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 

பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் மதுபாலாவிற்கு தினேஷ் குமார் என்ற 23 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியை சேர்ந்த அந்த இளைஞர், சென்னையில் மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். மதுபாலா-தினேஷ் குமாரின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பின்னர், இன்ஸ்டாகிராமிலேயே தங்கள் காதலை வளர்க்க தொடங்கியுள்ளனர். ஒருக்கட்டத்தில் இந்த காதல் விவகாரம் மதுபாலாவின் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து கேரளாவை சேர்ந்த மகேஷ் என்ற 32 வயது இளைஞரை மதுபாலாவிற்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இவர்களது திருமணம், கடந்த ஜூன் மாதம் 21ஆம் தேதி நடந்துள்ளது. 

மேலும் படிக்க | 'டெங்கு, மலேரியா போன்றது சனாதனம்...' உதயநிதி பேச்சுக்கு பாஜக கடும் எதிர்ப்பு - பதிலடி என்ன?

இரண்டாவது கணவரை விட்டுவிட்டு..

திருமணம் ஆன இரண்டு மாதங்களிலேயே மகேஷ்-மதுபாலா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பல சண்டைகள் ஏற்பட்டுளது. இதையடுத்து, மதுபாலா தனது இன்ஸ்டாகிராம் காதலரை தேடி கடந்த மாதம் 21ஆம் தேதி சென்னைக்கு வந்துள்ளார்.

சென்னை வந்த மதுபாலா, சென்னை தாம்பரம் சானிடோரியம் அருகே உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்துள்ளார். 10 நாட்கள் காதலர்கள் இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் மதுபாலா கேரளாவில் உள்ள தனது இரண்டாவது கணவர் மகேஷிற்கு போன் செய்து தான் சென்னையில் உள்ள விஷயத்தை தெரிவித்துள்ளார். தான் ஒரு நண்பரை பார்க்க இங்கு வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதைக்கேட்ட மகேஷ், இவரை காணாததால் கேரளாவில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து மதுபாலா, தனது இன்ஸ்டாகிராம் காதலருடன் சேர்ந்து வேளச்சேரி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். மேலும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் மனு கொடுத்திருக்கிறார். 

“சந்தேகப்படுவார்..”

மதுபாலாவின் மனுவை போலீஸார் விசாரித்துள்ளனர். அப்போது தனது முதல் கணவர் கார்த்திக் தன்னை சரியாக கவனித்து கொள்ள வில்லை என்றும் அவர் தன்மீது அதிகமாக சந்தேகப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். பலமுறை தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் அவரை தான் பிரிந்ததாக மனுவில் மதுபாலா குறிப்பிட்டுள்ளார். 

இரண்டாவது கணவர், குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் தனக்கு விருப்பம் இல்லாமல் பெற்றோரின் கட்டாயத்தால்தான் இரண்டாம் திருமணம் நடந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

18 வயது நிரம்பி விட்டதால் தனது விருப்பப்படி வாழ தனக்கு உரிமை உள்ளதாக தன் மனுவில் மதுபாலா குறிப்பிட்டுள்ளார். தனக்கு பெற்றோருடன் செல்ல விருப்பமில்லை என்றும் இன்ஸ்டாகிராம் காதலர் தினேஷ்குமாருடன்தான் செல்வேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

கேரளாவில் இவர் காணாமல் போனது குறித்து புகார் கொடுக்கப்பட்டுள்ளதால், அம்மாநில போலீஸாருக்கு வேளச்சேரி போலீஸார் தகவல் தெரிவித்து உள்ளனர். அங்கிருந்து உரிய பதில் வந்தவுடன் காவல் துறை தரப்பினரிடம் இருந்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | விஜய்லட்சுமி என்ன அன்னை தெரசாவா...? - கொந்தளித்த சீமான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News